Pages

Friday, 26 June 2020

சில பொது தகவல் அலுவலரின் மன நிலை....தேவையான நடவடிக்கை

சில (அனைவரும் அல்ல) பொது தகவல் அலுவலர்களின் மனநிலை என்னவென்றால், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி (கோரிய தகவலானது பிரிவு 2(f)-ல் வராது, தனிப்பட்ட நபர் தகவல் மற்றும் மூன்றாம் நபர் தகவல்) மனுவை திருப்பி அனுப்பி விடுவோம், 50-60 சதவீதம் மனுதாரர்கள்தான் முதல் மேல் முறையீடு செய்வார்கள். அதையும் அதே காரணத்தை சொல்லி அனுப்பிவிட்டால், பின்னர் மனுதாரர் சென்னைக்கு செல்லும் செலவைினை கருத்தில் கொண்டு, 10 சதவீதம் நபர்கள்தான் ஆணையத்திற்கு செல்வார்கள்.அப்படியே சென்றாலும் அந்த வழக்கு விசாரணைக்கு ஒரு வருடம் கழித்து வரும்போது, நாம் இந்த பொறுப்பில் இருப்போமா என்பது தெரியாது. ஆகவே, ஒரு வருடம் கழித்து அந்த பத்து சதவீத கேஸ்களில் ஒன்றாக நமக்கு வந்த மனு ஆணையத்திடம் விசாரணைக்கு வந்து அப்போது நாம் இந்த பதவியில் இருந்தால் பார்த்து கொள்ளலாம் என்பதாகும்.
.
அவ்வாறான சில பொது தகவல் அலுவலர்களின் மனநிலையை மாற்றத்தான் பிரிவு 18(1)-ல் கீழ் புகார் செய்ய வேண்டும். தகவல் வழங்கவில்லை என்றாலும், முதல் மேல் முறையீடு செய்யாமல் எப்படி உடனே மனுதாரர் ஆணையத்திடம் புகார் செய்கிறார்? இது என்ன புது முறையாக இருக்கின்றது? என்று அவர்கள் உணரவேண்டும். தகவல் ஆணையமானது புகார் மனு மீது விசாரணை செய்து, நம் மீது தண்டம் விதித்துவிடுமோ அல்லது துறை வாரியான நடவடிக்கைக்கு அரசிற்கு பரிந்துரை செய்துவிடுமோ என்ற நிலையில் அவர்களை கொண்டு செல்வதற்காகவே, மனுதாரர்கள் பிரிவு 18(1)-யை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். ................ ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்! பாடுறமாட்டை பாடித்தான் கறக்கணும்.

No comments:

Post a Comment