முகநூலில் பலர் தங்கள் அருமையான கருத்துக்களையும், படைப்புகளையும் பதிவு செய்கிறார்கள். பல விஷயங்கள் மிக உபயோகமானவைகளாக இருக்கிறது. ஆனால் அவைகளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முகநூலில் தேடுவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பர்,
‘மருத்துவர்கள் எழுதும் மருந்துகளுக்கு சமமான, அதே மூலக்கூறுகள் கொண்ட, மற்ற ஒரு சிறந்த கம்பெனியால் குறைந்த விலையில் சந்தையில் வியாபரம் செய்யப்படும் மருந்துகளை பற்றி அறிய ஒரு இணையத்தளத்தை கொடுத்திருந்தார்.”
அதை இன்று வரை முகநூலில் தேடுகிறேன். கிடைக்கவில்லை. இதுபோன்று பல அறிய தகவல்கள் முகநூலில் பதியப்பட்டு காலப்போக்கில் தேடுவது என்பது கடினமாகிறது.
தங்கள் படைப்புகள், தங்கள் பகிர்வுகள் தொடர்ந்து உங்கள் கைவசம் இருக்கவும் மற்றும் மற்றவர் எந்த நேரத்திலும் அந்த படைப்புகளையும், பகிர்வையும் உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில், உங்கள் பெயரில் ஒரு பிளாக் ஆரம்பியுங்களேன்.
கூகுள் இணையதளத்தில் உங்கள் பெயர் கொண்ட ஒரு பிளாக்கை இலகுவாக உருவாக்க முடியும். பின்னர் உங்கள் படைப்புகளையும் பகிர்வுகளையும் உங்கள் பிளாக்கில் முதலில் போஸ்ட் செய்யுங்கள்.
அதற்கு பிறகு அந்த லிங்கை எடுத்து முகநூலில் தலைப்புடன் போடுங்கள். (தற்சமயம் நான் இப்படித்தான் எனது கருத்துகளை முகநூலில் பதிவு செய்கிறேன்). இவ்வாறாக பண்ணும் வேளையில் உங்கள் படைப்புகள், கருத்துக்கள் என்றென்றும் உங்கள் பிளாக்கில் அனைவரின் பார்வைக்கும் உடனடியாக கிடைக்கும்.
தங்களது இந்தப் பதிவைக் கண்டு, (selvampalanisamy.blogspot.com) பிளாக் ஆரம்பித்தேன். இப்போது இணையதளமும் (www.whatdodo.com)ஆரம்பித்து செயல்படுகிறேன். அனைத்து துறைகளிலும் சேர்ந்த்து சுமார் 800 பதிவுகள் இருக்கிறது பலர் பயன் பெறுகிறார்கள். கடந்த 18.03.2017 அன்று மட்டும் எனது இணையதளத்திற்கு 4690 நபர்கள் வருகை தந்துள்ளனர். தங்கள் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete