Pages

Wednesday, 1 October 2014

மத்திய அரசுப்பணியில் சேர தேவையான OBC சான்றிதழ்





மத்திய அரசுப்பணியில் சேர தேவையான OBC சான்றிதழை பற்றிய விபரம்.

மத்திய அரசுப்பணி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடானது ஓசி, ஓபிசி, எஸ்சி/எஸ்டி என்ற பிரிவுகளில் மட்டுமே அமல்படுத்தப்படுகின்றது.  இதில் ஓபிசி எனும் இட ஒதுக்கீட்டில் தமிழநாட்டில் உள்ள பிசி மற்றும் எம்பிசி இடஒதுக்கீடுகள் அடங்கும். 

தமிழ்நாட்டில் பிசி மற்றும் எம்பிசி சான்றிதழ்கள் வழங்கப்படும்போது, ஆண்டு வருமானம் (பெற்றோரின்) கணக்கில் எடுத்து கொள்ளப்படுவில்லை. ஆனால், ஓபிசி, சான்றிதழ் பெறுவதற்கு பெற்றோர் ஆண்டு வருமானம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஓபிசி சான்றிதழ் பெறுபவரின் பெற்றோரின் ஆண்டு வருமானம 6 இலட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்களை Creamy Layer (கிலே) எனும் பிரிவில் கொண்டு வந்து, அவர்களுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்கப்படமாட்டாது. அந்த நிலையில் அவர்கள் ஓசி இட ஒதுக்கீட்டில்தான் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் போட்டியிடவேண்டும்.

இந்த பதிவின் நோக்கம் யவரெல்லாம் கிலே வருவார்கள் என்பது பற்றிதான்.

1.கிலே-க்கு ஒருவரின் பெற்றோரின் வருமானம் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். சான்றிதழ் பெறுபவரின் வருமானம் கணக்கில் வராது (சான்றிதழை பெறும் நபரின் ஆண்டு வருமானம் 6 இலட்சத்திற்கு மேல் இருந்து அவரின் பெற்றோரின் வருமானம் 6 இலட்சத்திற்கு குறைவாக இருந்தாலும், அவர் அந்த சான்றிதழை பெற தகுதியானவர்.)

2.மத்திய மாநில அரசுப்பணியில் இருக்கும் பெற்றோர் எந்த அளவிற்கு சம்பளம் வாங்கினாலும், அவர்களின் ஊதியம் மேற்படி 6 இலட்சம் வரம்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது.  ஆனால், அவர்கள் பணியில் சேர்ந்த பதவியின் தன்மையை வைத்து அவர்களின் குழந்தைகளுக்கு மேற்படி சான்றிதழ் மறுக்கப்படும். உதாரணமாக, தமிழக அரசில் A பிரிவில் ஒருவர் 40 வயதுக்குள் பணியில் சேர்ந்தால், அவருடைய குழந்தைக்கு மேற்படி சான்றிதழ் வழங்கப்படாது. ஆனால் 40 வயதுக்குள் B பிரிவில் பணியில் சேர்ந்து 40 வயதுக்கு மேல் A பதவி உயர்வு பெற்ற ஒருவரின் குழந்தை மேற்படி சான்றிதழை பெற தகுதியானவர்.

3.உதாரணமாக தமிழக அரசின் மருத்துவத்துறையில், தனது 28 வயதில் B பிரிவில் கெசட்டட் ஆபிஸராக, அரசு உதவி மருத்துவராக பணியில் சேரும் ஒருவர் தனது 50 வயதில் முதன்மை குடிமை மருத்துவராக பதவி உயர்வு பெற்று ஆண்டு ஒன்றுக்கு 12 இலட்சம் ஊதியம் பெறுகின்றார் என்றாலும் அவரின் குழந்தை மேற்படி சான்றிதழை பெற தகுதியானதாகும்.  (இவரது குடும்பத்தில் உள்ள மற்றஒருவர்  (மனைவி/கணவன்)  வியாபாரம் செய்து மூன்று வருட சராசரி 6 இலட்சத்திற்கு மேல் ஐ.டி. வருமான வரி தாக்கல் செய்திருந்தால், இவர்கள் குழந்தைக்கு சான்றிதழ் கிடைக்காது)

4. வருமானம் என்று இங்கு குறிப்பிடுவது, அரசு வேலை இல்லாத மற்ற வருமானங்களாகும். ஊதியத்தை இதில் கணக்கில் எடுத்து கொள்ளக்கூடாது. ஊதியம் என்று வந்து விட்டால் அவர்களின் பதவியைத்தான் கணக்கில் கொள்ளவேண்டும்

5.மத்திய அரசுப்பணியில் நேரடியாக சேரும் ஐ.ஏ.ஸ்., ஐ.பி.ஸ் போன்றவர்களின் குழந்தைக்கு மேற்படி சான்றிதழ் வழங்கப்படாது ஏனெனில் இவர்கள் பணியில் சேரும்போது A பிரிவு அதிகாரிகளாக பணியில் சேருகின்றார்கள்.

சமீபத்தில் இந்த விபரத்தை ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சார், எனக்கு இந்த விபரம் தெரியாமல் போய்விட்டது. நானும் எனது மனைவியும் தமிழக அரசுப்பணியில் இருக்கிறோம். எங்கள் இருவரின் ஆண்டு வருமானம் 6 இலட்சத்திற்கு மேல் என்று தாசில்தார் மேற்படி சான்றிதழ் தர மறுத்துவிட்டதால் என் மகனுக்கு என்.ஐ.டி-ல் பொறியியல் அட்மிஸன் ஒபிசி பிரிவில் கிடைக்காமல் போய்விட்டது என்று கூறினார். இதற்கு காரணம், இந்த சான்றிதழை வழங்கும் தாசில்தாருக்கோ அல்லது அந்த அலுவலகத்திற்கு இந்த 'வருமானத்தை' பற்றி புரிதல் இல்லாததுதான். அவரை பொறுத்த வரை பெற்றோரின் வருமானம் 6 இலட்சத்திற்கு அதிகமானால், அவர் மேற்படி சான்றிதழை வழங்க மறுத்துவிடுவார்.

ஒரு அரசு ஊழியரின் குழந்தைக்கு அவரது ஆண்டு வருமானத்தை கொண்டு சான்றிதழ் மறுக்கப்பட்டால், எந்த விதிகளின் படி மறுக்கப்படுகின்றது என்று தஅஉ சட்டத்தின் வாயிலாக வினாவுங்கள்.


1 comment:

  1. அருமை சார்! கிரிமி லேயர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இந்த பதிவை கண்ட பிறகுதான் எனக்கு தெரிந்தது. அதனை எனது பதிவில் பயன்படித்திக் கொள்கிறேன் நன்றி!

    ReplyDelete