Pages

Tuesday, 3 March 2015

முறையான டிரைவிங் லைசென்ஸ் வைத்து வண்டியை ஒட்டுங்கள்

சாலை விபத்தில் இறந்த பொறியாளரின் குடும்பத்திற்கு 1 கோடி நஷ்டஈடு...

.
தினமும் சாலை விபத்துகளை பற்றி நாளிதழில் படிக்கிறோம். இன்று பலர்  முறையான டிரைவிங் லைசென்ஸ் வைத்து கொள்வதில்லை. பல நேரங்களில் தகுந்த லைசென்ஸ் இல்லாத நபர்களிடம் நமக்கு சொந்தமான வாகனங்களை ஒட்டுவதற்கு ஒப்படைக்கின்றோம்.

.
முறையான லைசென்ஸ் இன்றி ஒரு வாகனம் ஒட்டப்பட்டு, அந்த வாகனத்தினால் மற்றொருவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, அந்த வாகனமான இன்சுரன்ஸ் செய்யப்பட்டிருக்கும்போது அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் அந்த இழப்பீட்டை கொடுக்கும். ஆனால், வாகன ஒட்டுநரிடம் முறையான லைசென்ஸ் இல்லாத பட்சத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் அந்த இழப்பீட்டை வழங்கிவிட்டு பின்னர் வாகன உரிமையாளிடம் இருந்து வசூலிக்கும்.

.
இந்த செய்தியை பதிவிடுவதின் நோக்கம், இழப்பீடு தொகையானது இறந்தவரின் சம்பாதிக்கும் திறனை பொறுத்து கோடிகளில் கூட தீர்மானிக்கப்படும் என்பதை அனைவரும் அறிவதற்காகத்தான்.

.
ஆகவே, முறையான டிரைவிங் லைசென்ஸ் வைத்து வண்டியை ஒட்டுங்கள்.  லைசென்ஸ் இல்லாத உறவினர் மற்றும் நண்பர்களிடம் வண்டியை ஓட்ட கொடுக்காதீர்கள் (அது சொற்ப தூரத்திற்காக இருந்தாலும்). லைசென்ஸ் இல்லாத தங்கள் குழந்தைகளிடம் வாகனங்களை ஒட்ட அனுமதிக்காதீர்கள். பலர் லைசென்ஸ் வைத்திருப்பார்கள் ஆனால் அது காலாவதி ஆகி பல மாதங்கள் ஆகியருக்கும். ஆகவே, லைசென்ஸ் முடிவடைவதற்கு முன்னால் காலம் தாமதிக்காமல் புதிப்பித்து கொள்ளுங்கள்.  இவற்றில் இருந்து தவறும் பட்சத்தில், வாகனத்தின் உரிமையாளர் என்ற முறையில், யாரவது ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினால், பல இலட்சங்கள்ளில் நஷ்டஈடு வழங்கநேரிடும்.

.....செய்திக்கு இந்து நாளிதழ்க்கு நன்றி

No comments:

Post a Comment