ஒரு மருத்துவர் அனைத்து நேரங்களிலும் நோயாளியை காப்பாற்றவே முயற்சி செய்கின்றார். அவர் மருத்துவ சேவை குறைபாடுடன் நடந்து கொள்வதால் அவருக்கு எந்தவித இலாபமும் இல்லை. அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளிக்கு ஏதாகிலும் ஆகிவிட்டால் உறவினர்கள் வழக்கிடுவார்களோ என்ற தொடர் பயம் மருத்துவர் மனதில் ஏற்பட்டால், அறுவை சிகிச்சையின் போது கத்தியை பிடித்திருக்கும் மருத்துவரின் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும். அந்த நிலை நோயாளிக்கு நன்மை பயக்காது. இவ்வாறான பயத்தில் மருத்துவர்கள் ரிஸ்க் எடுத்து நோயளியை காப்பாற்ற தயங்கினால் அது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டை வைக்குமுன், ஒன்றுக்கு பல முறை தீர ஆலோசனை செய்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment