Pages

Monday, 25 April 2016

M.D. Medicine Qualified doctor cannot call himself as Cardiologist

மருத்துவத்துறையில் பொது மருத்துவத்தில் முதுநிலை (M.D. Medicine) படிப்பு படித்த ஒருவர், தன்னை ஒரு இதயநோய் நிபுணர் என்று பிரகடனப்படுத்தி நோயாளிக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?
.
R.P. No.4023/2011 – தேசிய நுகர்வோர் ஆணையம்.
.
இதயத்தில் குறை (Mitral Stenosis with Mitral Regurgitation (MS with MR) இருக்கும் பெண்ணிற்கு M.D. Medicine படித்த மருத்துவர் வைத்தியம் பார்க்கும் நிலையில் அந்த பெண் கர்பமாகின்றார். கர்ப்ப காலத்தில் இதய பிரச்சனை அதிகமாகியதால், மற்றொரு இருதய நோய் நிபுணர் 8-வது மாதத்தில் பரிசோதித்துவிட்டு உடனடியாக அவருக்கு சிசரியேன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதால் அவருக்கு சிசரியேன் செய்யப்பட்டு ஆண் மகவு பிறக்கின்றது. குழந்தை பிறப்பிற்கு பின்னர் தாயுக்கு பிரச்சனை ஏற்பட்டு ஐ.சி.யு.-ல் வைக்கப்பட்டு நான் மணி நேரம் கழித்து இறந்து அந்த பெண் இறந்துவிடுகின்றார்.
.
.
மேற்படி பிரச்சனையில் மருத்துவ சேவை குறைபாடு உள்ளது என்று நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் புகார் செய்து கடைசியாக வழக்கு தேசிய நுகர்வோர் ஆணையத்திடம் வருகின்றது. ஆணையத்திடம் வைக்கப்படும் வாதங்களில் முக்கியமான வாதமாக, M.D. Medicine படித்த ஒருவர் தன்னை இதய நோய் நிபுணர் என்று பிரகடனப்படுத்தி நோயாளிக்கு வைத்தியம் பார்த்தது என்பது மருத்துவ சேவை குறைபாடு என்று வாதாடப்படுகின்றது. முதலாவதாக வைத்தியம் பார்த்த மருத்துவர் தனது ப்ரிஸ்கிரிப்ஷன் பேடில் Consultant Physician and Cardiologist என்று எழுதியிருந்ததை அவர் மறுக்கவில்லை.
.
.
எம்.டி. பொது மருத்துவம் படித்த மருத்துவர் ஒருவர் தன்னை இதய நோய் நிபுணர் என்று அறிவித்து இதய நோய்க்கு வைத்தியம் பார்க்க முடியுமா? என்ற வினாவிற்கு இந்த வழக்கில் விடை அளிக்கப்படுகின்றது.
.
.
1) எம்.டி. பொது மருத்துவம் படித்தவர் தன்னை இதய நோய் நிபுணர் என்று தன்னை அழைத்து கொள்ளமுடியாது. (இவர்கள் தங்கள் மருத்துவ ப்ரிஸ்கிரிப்ஷன் பேடில் “இதய நோய் மருத்துவர்“ என்று பிரகடனப்படுத்தி கொள்ளக்கூடாது)
.
.
2) As per Indian Medical Council (Professional Conduct, Etiquette and Ethics) Regulations 2002 dated 11th March, 2001, the duties and responsibilities of the physician have been notified.
Clause-B Sub-clause 1.1.3 states as under:
.
“ No person other than a doctor having qualification recognized by Medical Council of India and registered with Medical Council Of India/State Medical Council(s) is allowed to practice Modern System of Medicine or Surgery.”
.
Similarly, Clause B-1.2.1 states as under:
“ the physician should practice methods healing founded on scientific basis and should not associate professionally with anyone who violates this principle.”
.
Even otherwise, undergoing several trainings, attending workshops in Cardiology did not confer qualification of cardiologist. Hence it is not recognized by MCI or Rajasthan State Medical Council.
.
.
கீழ்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.
.
உச்சநீதிமன்ற Malay Kumar Ganguly Vs Dr. Sukumar Mukharjee & ors, வழக்கில், ஒரு மருத்துவர் அவர் சிகிச்சை வழங்கும் துறையில் சிறப்பு படிப்பு படிக்காதவர் என்றால் அங்கு மருத்துவ சேவை குறைபாடு இருந்ததாகவே அனுமானம் செய்யப்படும்.
.
.
உச்சநீதிமன்ற Jacob Mathew V State of Punjab & Anr, என்ற வழக்கில், ஒரு மருத்துவர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலான துறையில் தேவைப்படும் படிப்பு (requisite skill) படிக்கவில்லையென்றால், அங்கு ஏற்படும் சேவை குறைபாட்டிற்கு மருத்துவரே பொறுப்பாவார்.
.
.
ஆகவே, மேற்கண்ட ஆணையின் படி மருத்துவத்துறையில் சிறப்பு படிப்பு படித்தவர்கள் மட்டுமே (சிறப்பு படிப்பு என்பது இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பாக இருக்க வேண்டும்) அந்த துறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். தவறும் பட்சத்தில், மருத்துவரின் சேவை “மருத்துவ சேவை குறைபாடு“ எனும் பத்த்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நோயாளிக்கு இழப்பீடு வழங்கும் நிலை ஏற்படலாம்.
.
.
இந்த வழக்கில் தேசிய நுகர்வோர் ஆணையம் கூறிய முக்கிய கருத்துகள்.
.
is most common in present days that nursing homes, hospitals provide facilities like diagnostic Laboratory, Radiology or Sonology units without a specialists like Radiologist, Pathologists. Such units are managed by unqualified or untrained staff. It appears that such doctors have erased the Hippocratic Oath from their mindset and more active in a business of profiteering by coercive methods and by creating false impression in the minds of patients at large. The Apex Court in various judgments has clearly observed that; unless the person hold a necessary qualification, should not perform job of the Specialist. I would like to set this as an advisory /direction to the statutory bodies like Medical Council of India (MCI) and Health Ministry to initiate steps to strike down such practices of medical professional who are posing as a specialist or mis- representing as a super specialist without any approved qualification by statute or controlling authority. In other words it is a “QUACKRY” that treating the patients in absence of valid degree. Such misleading display of qualifications or misrepresentation will harm the quality of health system in India. Subsequently the innocent patients are victimized financially and also lose their precious life.
.
.
முறையாக மருத்துவத்தில் உயர்படிப்பு இல்லாமல் நோயாளிக்கு அந்த துறையில் சிகிச்சை அளிப்பது என்பது போலி டாக்டர்கள் எனும் பதத்தில் அடங்கும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

No comments:

Post a Comment