Pages

Monday, 15 May 2017

மயக்க மருந்து கொடுப்பதற்கு முன் நோயாளியை முன் பரிசோதனை செய்யவில்லை


Decided on 16.8.2007 NATIONAL CONSUMER DISPUTESREDRESSAL COMMISSION, NEW DELHI
Baburao Vithal Lohakpure & ORS. Vs.Suniti Devi Singhania Hospital And Medical Research CentRe & ORS
 Consumer Complaint No. 44 of 1997 

Though the patient was admitted to the hospital on 23.3.1995 a day prior to the operation, Anaeasthetiste did not examine her nor did he conduct preoperative anaesthetic check up. At 2.15 p.m. the Anaeasthetis and Surgeon started preparing her for the operation. The Anaesthetist tried to insert the endotrachea tube but he was unable to do so. He then removed the tube and put her on artificial respiration. All her vital signs at that time were normal. He mentioned the difficulty in inserting the tube to the Surgeon and Staff Nurse heard him say this as well. Despite this difficulty the Aneasthetist continued his attempts under anaesthesia. The operation was not a vital life saving procedure, which could have been easily postponed.


Elective Surgery-களில் (அவசர அறுவை சிகிச்சை தவிர்த்து) மயக்கவியல் மருத்துவர் நோயாளியை முன்னரே பார்த்து அவரது மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் நோயாளியானவர் அறுவை சிகிச்சைக்கு தயாரா என்று தீர்மானிக்க வேண்டும். இதை Pre Anaesthetic Check-up (or Anaesthesia Assessment)  என்று அழைப்பார்கள். இந்த வழக்கில் மயக்கவியல் மருத்துவர் Pre-anaesthetic check-up செய்யவில்லை.  மயக்கவியல் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு முன்னரே நோயாளியை சோதிக்கின்றார் ஆனால் நோயாளி அறுவை சிகிச்சைக்கு தயாரா என்று எந்தவித ஆவணங்களிலும் எழுதவில்லை (pre-anaesthetic records not maintained).  நோயாளியின் இறப்பிற்கு, மயக்கவியில் மருத்துவர் முறையாக Pre Anaesthetic Checkup பண்ணவில்லை.
.
General Anaesthesia கொடுப்பதற்கு endotrachea tube போட பல முறை முயற்சி செய்தும் மயக்க மருத்துவரால் போடமுடியவில்லை. இது அவசர அறுவை சிகிச்சை இல்லை என்பதால் அவர் தொடர்ச்சியாக அதை செய்து கொண்டிருக்காமல், அறுவை சிகிச்சையை தள்ளி போட்டிருக்க வேண்டும் ஆகவே மருத்துவ சேவை குறைபாடு உள்ளது என இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.
.
குறிப்பு - Pre Anesthetic Record is very important to face any litigation. இது ஒன்றுதான், நோயாளி மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னால் முறையாக பரிசோதிக்கப்பட்டார் என்பதற்கும், அவர் நல்ல நிலையில் இருந்தார் என்பதற்கும் மற்றும் அதன் அடிப்படையிலேயே மயக்க மருந்து கொடுக்கப்பட்டது என்பதற்கும் சிறப்பான ஆவண சாட்சியாக அமையும். மருத்துவமனை நிர்வாகம் Pre-anaesthetic check-up -க்கு கட்டாயம் மயக்கவியல் மருத்துவர்களை நிர்பந்தப்படுத்த வேண்டும். இன்று அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் மயக்கவயில் மருத்துவரிடம் Pre-anaestheic Check up (or Assessment) பெறுவது என்பது கட்டாயமான செயலாகும். 
.
நோயாளியின் உறவினர்களும் மயக்கவியல் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு முன்னர் வந்து நோயாளியை பார்த்தார் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
.
இந்த முறையானது அவசர அறுவை சிகிச்சைக்கு பொருந்தாது. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு நடக்க இருக்கும் (Electrive Surgery) முன் தீர்மானிக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கு மட்டுமே பொருந்தும்

No comments:

Post a Comment