Pages

Wednesday 28 June 2023

தகவல் கேட்பதற்கு, அலுவலக நடைமுறை பற்றி தெரிந்திருப்பது அவசியம்

 பொது மக்களிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த, தகவல் அறியும் உரிமை சட்ட சமூக ஆர்வலர்கள்ர விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துகின்றார்கள். இது மிகவும் வரவேற்கதக்கது. ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை பெற, தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பற்றி தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது அல்ல. தகவலை முறையாக பெற அரசு அலுவலகத்தின் அனைத்து நடைமுறைகளையும் தெரிந்திருப்பது அவசியம். பொது மக்களிடமிருந்து ஒரு தபால் அரசு அலுவலகத்தில் வந்தடைந்தால், அந்த தபால் யாரால் முதலில் பார்க்கப்பட்டு சுருக்கெழுத்து இடப்படும், எந்த பதிவேட்டில் பதியப்பட்டு பின்னர் அந்த தபால் யவர் வழியாக கடைசியாக எந்த இளநிலை அலுவலரை சென்றடையும், அந்த இளநிலை அலுவலர் அந்த தபாலை எந்த பதிவேட்டில் பதிவு செய்யவார் (தன் பதிவேடு), அந்த தன் பதிவேடு எப்படி பராமரிக்கப்பட வேண்டும், அந்த தன் பதிவேட்டினை எந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அந்த தன் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும் அகிய அனைத்து நடைமுறைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், ஒவ்வொரு அலுவலகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளை அலுவலகம், அதன் அதிகாரிகள் போன்ற விபரங்களை அறிய வேண்டும்.

.
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டத்தில், மேற்படி சட்டத்தை மட்டும் எடுத்துரைக்க அதிக பட்சம் 2 மணி நேரம் போதுமானது. மீதம் உள்ள நேரத்தில், ஒவ்வொரு அரசு துறையிலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்களை அழைத்து, அந்த துறை சார்ந்த விழிப்புணர்வை, குறிப்பாக அந்த துறையின் நடைமுறைகள், செயல்பாடுகள், அதிகாரிகள் ஆகிய விபரங்களை எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறான விழிப்புணர்வு கூட்டம் மட்டுமே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உதவியுடன் சமூதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.

No comments:

Post a Comment