Pages

Wednesday 28 June 2023

புதிய கார் வாங்குபவர்களின் கவனத்திற்கு


.
புதிய கார் வாங்குபவர்கள் பலர், ஷோரூமிலிருந்து காரை நேரடியாக accessories வாங்கும் கடைக்குதான் ஒட்டி செல்வார்கள். குறைந்த பட்சம் 15 நாட்களுக்காவது காரில் புதிய accessories மாட்டாமல் ஒட்டி பாருங்கள். அப்போதுதான் அந்த காரின் உண்மையான குறைகள் மற்றும் நிறைகள் தெரியும். உதாரணமாக இவ்வாறு 15 நாட்கள் ஒட்டும்போது காரில் ஒரு சத்தமும் வரவில்லை ஆனால் accessories மாட்டிய பிறகு சத்தம் வந்தால், அதற்கான காரணத்தை இலகுவாக கண்டு கொள்ளலாம். காரில் accessories மாட்டிய பிறகு எதாகிலும் பிரச்சனை என்று, குறிப்பாக சத்தம் வருகின்றது என்று கார் கம்பெனியின் சர்வீஸிற்கு கொண்டு சென்றால், அவர்கள் accessories மாட்டியதால்தான் சத்தம் வருகின்றது என்று கூறினால் அவர்களிடம் தர்க்கம் பண்ண முடியாது. மேலும் என்ன accessories காரில் போட போகின்றீர்கள் என்பதை முன்கூட்டியே youtube-ல் சென்று பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக காரின் உள்ளே போடும் mat-களில் இப்போது 5 வகைகளில் கிடைக்கின்றது. 7-D mat காருக்கு அழகை கொடுக்கும். கார் கதவுகளில் Damping sheet பொருத்தினால் Speaker sound நன்றாக இருக்கும் மற்றும் Door noise வராது. பொதுவாகவே காரோடு வரும் Head Light அவ்வளவு வெளிச்சமாக இருப்பதில்லை என்ற குறை இருக்கும். அந்த வெளிச்சம் அரசு அனுமதித்த வெளிச்சத்திற்கு உட்பட்டது. இவ்வாறான நேரத்தில் முன்னர் அதிக Watts கொண்ட Halogen பல்பை மாற்றுவார்கள். இப்போது, LED, HID லைட்கள் வந்துவிட்டது. அதிக அளவிலான கெல்வின் உள்ள விளக்குகளை மாட்டாதீர்கள். அதிக அளவிலான கெல்வின் உள்ள விளக்குகள் வெள்ளை நிறத்தை கொடுக்கும் ஆனால் சரியான visibility இருக்காது. 4600 அளவிலான கெல்வின் கொண்ட விளக்குள் சரியாக இருக்கும். உங்கள் புது காரை இரவில் ஒட்டி உங்களுக்கு மேற்படி விளக்குகள் தேவைப்படுகின்றதா என்பதை உறுதி செய்து, மாற்றுங்கள். ஆக மொத்தம், புதிய காருக்கு accessories மாட்டுவதில் அவசரம் காட்டாதீர்கள்.

No comments:

Post a Comment