Friday, 2 January 2026
Sunday, 28 July 2024
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 4(1)(b)-ல் குறிப்பிட்டுள்ள தகவல்களை பெறுவது எப்படி?
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முக்கிய நோக்கமான வெளிப்படைத்தன்மை என்பதை நிறைவேற்றும் பிரிவு 4(1)(b) ஆகும். இந்தப் பிரிவில் குறிப்பிட்டுள்ள தகவல்களை அனைத்து அரசு அலுவலகங்களும் தானாக முன் வந்து பொது மக்கள் அறியும் வண்ணம் அனைத்து வகைகளிலும் (அலுவலக அறிவிப்பு பலகை) மற்றும் இணையத்தளச் சேவை வழியாகவும் வெளியிடவேண்டும். தமிழக அரசானது அவர்களது https://www.tn.gov.in/rti/proactive.htm இணையத்தள முகவரியில் செயலகத்திலுள்ள அனைத்து துறைச்சார்ந்த பிரிவு 4(1)(b) விபரங்களை வெளியிட்டிருந்தாலும், பல தகவல்கள் முழுமையாகவும் மற்றும் சமீபத்திய தகவல்களாகவும் வழங்கப்படவில்லை. நிரந்திரமான தகவல்களைஅவர்கள் static என்றும் மாறுதலுக்குரியதை dynamic என்றும் வெளியிட்டுள்ளார்கள். நான் தற்போது ஒவ்வொரு துறையின் 4(1)(b) விபரங்களை கோரி இணைப்பில் கண்டவாறு மனு தாக்கல் செய்து வருகின்றேன். சட்டத்துறையானது எனது மனு கிடைக்கப்பெற்ற பிறகு, 11.06.2024 வரையிலான அவர்களது dynamic தகவல்களை update செய்து வழங்கியுள்ளார்கள்.
.
பிரிவு 4(1)(b) தகவல்களானது செயலகத்தில் உள்ள துறைகள் மட்டும் அல்ல, ஒவ்வொரு
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தில் இயங்கும் ஒவ்வொரு துறைகளும் பொதுமக்களின்
நலன்கருதி வெளியிடவேண்டிய தகவல்களாகும். தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களின் தலையாய
கடமை என்னவெனில், ஒவ்வொரு துறையிலிருந்து அவர்களின் இணையத்தளச் சேவை அல்லது அறிவிப்பு
பலகையில் பொது மக்கள் அறியும் வண்ணம் பிரிவு 4(1)(b)-ல் குறிப்பிட்ட அனைத்து தகவல்களை
வெளியிடச் செய்ய முயற்சி எடுப்பதே. பிரிவு 4(1)(b) தகவல்களை கோரும் வகையிலான மனுவினை பார்வைக்கு இணைத்துள்ளேன்.
Tuesday, 28 May 2024
Sunday, 10 March 2024
Saturday, 17 February 2024
Saturday, 13 January 2024
மாநில தகவல் ஆணையங்கள் அனைத்திலும் hybrid hearing முறையில் விசாரணை
IN THE SUPREME COURT OF INDIA
CIVIL ORIGINAL JURISDICTION
Writ Petition (Civil) No. 360 of 2021
மனுதாரர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 32-ன் கீழ் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பை இந்த நீதிப்பேராணையின் வாயிலாக கோருகிறார். பெரும்பாலான மாநில தகவல் ஆணையங்கள், மாநிலங்களின் தலைநகரங்களில் அமைந்து, அங்கு மட்டுமே அதன் நடவடிக்கைகளை நடத்துவதால், அங்கு சென்று வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளும் மனுதாரருக்கு அதிக செலவினங்களை ஏற்படுத்துகின்றது. எனவே, மனுதாரர்கள் மாநில தகவல் ஆணையத்தின் வழக்கு விசாரணையில் நேரடியாக ஆஜராவதற்கு பதிலாக, மனுதாரரின் விருப்பத்தின்பேரில், hybrid hearing மூலமாக ( நேரடியாக விசாரணையில் கலந்து கொள்ளவது, மற்றும் மாற்றாக பிற முறையிலான, வீடியோ கான்பரன்சிங், வாட்ஸ்ஆப் வீடியோ மூலமாக கலந்து கொள்வது) வழக்கில் ஆஜராக அனுமதிக்கப்படவேண்டும் என்றும் மற்றும் பிற பரிகாரங்கள் கோரியும் இந்த நீதிப்பேராணையை தாக்கல் செய்கின்றார்.
இந்த நீதிப்பேராணையில், ஒவ்வொரு மாநில தகவல் ஆணையமும் அவர்கள் தரப்பிலிருந்து மேற்படி hybrid hearing அந்த மாநில தகவல் ஆணையத்தின் நடைமுறையில் இருக்கின்றதா என்பதை பற்றிய ஒரு அபிடவிட்டை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றார்கள். அவ்வாறே, மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையமும் hybrid mode முறையானது (அதாவது நேரடி விசாரணை முறையுடன் virtual hearing முறையும் சேர்ந்தது) நடைமுறையில் உள்ளதாக அவர்களது அபிடவிட்டில் கூறியுள்ளார்கள். இது ஆணையின் பாரா 14-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மாண்புமிகு உச்சநீதிமன்றமானது பாரா 23-ல் கீழ்கண்டவாறு ஆணையிடுகின்றது.
மேற்படி ஆணையின் பாரா 14-ல் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் hybrid hearing இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், பாரா 23-ல் ஆணையிட்டவாறு, இந்த நடைமுறையானது அனைத்து மாநில தகவல் ஆணைங்களால் 31.12.2023க்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையிலும், இவ்வாறான விசாரணை முறையில் எந்த முறையை தேர்ந்தெடுப்பது என்பது மனுதாரர் மற்றும் மேல்முறையீட்டாளரின் விருப்பம் என்ற முறையிலும், மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையமானது மனுதாரரர் மற்றும் மேல்முறையீட்டாளரின் விருப்பத்தின்பேரில், விசாரணைக்கு hybrid mode hearing (நேரடியாகவோ (Physical hearing) அல்லது வீடியோ கான்பரன்சிங், வாட்ஸ்ஆப் வீடியோ மூலமாகவே (virtual hearing)) கலந்து கொள்ள அனுமதிக்கும் என்றே புரிதல் கொள்ள வேண்டும்.
ஆகவே, 31.12.2023-க்கு பிறகு மேற்படி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, மனுதாரர்/மேல்முறையீட்டாளர் வழக்கு விசாரணையில் virtual hearing முறையில் கலந்து கொள்வதை தேர்ந்தெடுத்து கொள்ள மேற்படி மாண்புமிகு உச்சநீதிமன்ற ஆணையானது வழிவகை செய்வதால், விசாரணைக்கான அறிவிப்பினை மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் பெற்றவுடன், மனுதாரர்/மேல்முறையீட்டாளரானவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம், virtual hearing-ல் கலந்து கொள்ள இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்துவது என்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அவ்வாறான நடைமுறைக்கு அவர்களை தயார் படுத்திகொள்ள வசதியாக இருக்கும்.
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையானது தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்துவோருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பான ஆணையாகும். இந்த ஆணையால், மனுதாரர் சென்னைக்கு சென்று வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளும் வகையிலான போக்குவரத்து செலவினங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். (இந்த hybrid hearing நடைமுறையானது ஒன்றும், மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு புதிதானது அல்ல. கொரோனா காலத்தில் வாட்ஸ்ஆப் வீடியோ மூலமாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களால் இந்த நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது)
Sunday, 6 August 2023
Thursday, 20 July 2023
மருத்துவ சேவைக் குறைபாடு வழக்கு
நான் ஆலோசனை கூறிய ஒரு வழக்கு.
மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?
மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?
Friday, 14 July 2023
தங்களது ஆதார் எண்ணுடன் எத்தனை வங்கி கணக்குள் இணைக்கப்பட்டுள்ளன?
Saturday, 8 July 2023
Thursday, 6 July 2023
புதிய சட்டக்கல்லுாரிகளின் வருகையால், வருங்காலத்தில் வழக்கறிஞர் தொழில் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?
அதிக அளவிலான புதிய சட்டக்கல்லுாரிகளின் வருகையால், வருங்காலத்தில் வழக்கறிஞர் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?
Wednesday, 28 June 2023
அரசு அலுவலகத்தில் தன்-பதிவேடு பராமரிப்பு
ஒரு அலுவலகத்தில்
முக்கியமான ஒரு ஆவணம் தன் பதிவேடு (Personal Register) ஆகும். இது ஒவ்வொரு அலுவலக உதவியாளராலும் பராமரிக்கப்பட
வேண்டிய பதிவேடாகும்.
ஒவ்வொரு உதவியாளரும்,
ஒரு மனு அவரிடம் வந்தவுடன் இந்த தன்-பதிவேட்டில் அதன் மனுவின் முழு விபரத்தினை அதற்கு கொடுக்கப்பட்ட கோப்பு எண்ணுடன் எழுத வேண்டும். பிறகு எந்த நாளில் அந்த மனுவானது நடவடிக்கைக்காக
அலுவலக கண்காணிப்பாளர்,
அலுவலக அதிகாரி முன்னர் வைக்கப்பட்டது என்று விபரத்தினை எழுதவேண்டும். அந்த மனுவிற்கான அனைத்து நடவடிக்கையும்
அந்த பதிவேட்டில்
பதிவு செய்ய வேண்டும். பதிவேட்டில் ஒரு மனுவை எழுதியவுடன், அதற்கு ஒரு சீனியாரிட்டி அங்கு கிடைத்துவிடுவதால், ஒரு மனுவை விட்டு, மற்ற மனு மீது நடவடிக்கையை
தொடரமுடியாது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள், தங்கள் மனு சார்ந்த தகவல்களை கோரும்போது,
1) மனுவிற்கு கொடுக்கப்பட்ட கோப்பு எண்
2) எந்த தேதியில் மனுவானது தன்-பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
3) மனு பதிவு செய்யப்பட்ட
தேதியிலிருந்து தஅஉ சட்ட மனுவிற்கு பதில் அளிக்கும் தேதி வரையிலான தன் பதிவேட்டின் நகல்
4) கோப்பு குறிப்புகளின் நகல், ஆகியவைகளை
பொது தகவல் அலுவலரிடம் கோரினாலோ, அந்த மனுவின்மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கையும் வெட்ட வெளிச்சமாகிவிடும். தன்-பதிவேடு பராமரிப்பது என்பது அலுவலக உதவியாளர்களுக்கு அதிக வேலைப்பழுவை
ஏற்படுத்தும் விஷயம் என்பதால், பல உதவியாளர்கள்
அதை ஒழுங்காக அல்லது முற்றிலுமாக பராமரிப்பதில்லை.
அதை பராமரிப்பதை
உறுதி செய்ய வேண்டியது துறைத்தலைவர் ஆவார். தன்-பதிவேட்டினை ஒரு அலுவலக உதவியாளர் பராமரிக்கவில்லை
என்றால், அந்த உதவியாளர் மீது அலுவலக விதிகளின்படி துறைத்தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.
(b)-images-0.jpg)
(b)-images-1.jpg)
(b)-images-2.jpg)
(b)-images-3.jpg)
(b)-images-4.jpg)
(b)-images-5.jpg)
