Pages

Showing posts with label Books. Show all posts
Showing posts with label Books. Show all posts

Wednesday, 7 January 2015

சட்ட பொருள் விளக்கம் (INTERPRETATION OF STATUTES )


சட்டக்கல்வி படிக்கும்போது முக்கியமான இரண்டு பாடங்கள் JURISPRUDENCE (சட்டவியல்) INTERPRETATION OF STATUTES (சட்ட பொருள் விளக்கம்). இரண்டுமே சிறிது கடினமான பாடமாகும். இந்த பாடங்களில் தேர்வு சதவீதம் மிக குறைவாகவே இருக்கும்.

பலர் நீதிபதிகளின் தீர்ப்பை பற்றி விமர்சிக்கிறார்கள். சட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டியதுதானே, ஏன் நீதிபதிகள் சட்டத்தில் இல்லாததை தீர்ப்பாக பகர்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்?  இதற்கெல்லாம், விளக்கம் தேவை என்றால் ‘சட்ட பொருள் விளக்கம்’ என்ற பாடத்தைதான் படிக்க வேண்டும்.

நீதிபதிகளின் தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் ஏன் விமர்சிப்பதில்லை? அப்படி விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்பதைவிட நீதிபதியானவர் சட்டத்திற்கு பொருள் விளக்கம் கொடுத்து தீர்ப்புகளை பகர அதிகாரம் படைத்தவர் என்பது அவர்களுக்கு தெரியும்.

சட்டத்தில் உள்ளதை கூற நீதிபதிகள் தேவையில்லை. அதற்கு ஆர்பிட்ரேட்டர்கள் (நடுநிலையாளர்கள்) போதும். சட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, இயற்றப்பட்ட சட்டத்திற்கு வலிமை கொடுப்பவர்கள்தான் நீதிபதிகள்.

சட்ட பொருள் விளக்கத்தை பற்றி தமிழில் அறிந்து கொள்ள வழக்கறிஞர் ஐயா, திரு. பி.ஆர்ஜே. அவர்கள் எழுதிய புத்தகத்தை படித்து பாருங்கள்.


Wednesday, 1 October 2014

சட்டப்புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?

நண்பர்களே, இந்த தளத்தில் அடிக்கடி வினாவப்படும் கேள்வி ‘ சட்டப்புத்தகங்கள் எங்கே கிடைக்கும்?

ஒவ்வொரு மனிதனும் தனது தாய்மொழியில்தான் சிந்திக்கிறான். ஆகவே, நாம்  தாய்மொழியில் கற்கும்போது, அந்த விஷயங்கள் நம் மனதில் நிரந்திரமாக பதிகிறது. ஆகவே, சட்டத்தை படிக்க ஆர்வம் உள்ளவர்கள், முதலில் நமது  தாய்மொழியான தமிழில் அதை படியுங்கள்;.  தமிழர்கள் அனைவரும் சட்டத்தில் புலமை பெற்று விளங்கவேண்டும் என்று வழக்கறிஞர் ஐயா திரு. பி.ஆர். ஜெயராஜன் அவர்கள் நமக்கு பல சட்டபுத்தகங்களை தமிழில் சிறப்பாக எழுதி வழங்கியுள்ளார். நான் எனது சட்டப்படிப்பு  தேர்வுகளை எழுதும்போது, முதலில் ஐயாவின் புத்தகங்களை தமிழில் படித்து, சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்வேன். பின்னர் ஆங்கில புத்தகங்களையும் படித்து தேர்வுகளை எதிர்கொண்டேன். ஐயா அவர்களின் சட்ட புத்தகங்களில்  மிக எளிமையாக, முறையான உதாரணத்துடன் ஒவ்வொரு சட்டப்பிரிவையும் விளக்கி இருப்பார்கள்.  நண்பர்களே, சட்டத்த்தை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஐயாவின் புத்தகங்களை வாங்கி படியுங்கள். ஏற்கனவே நான் கூறியவாறு, சட்டப்புத்தகங்கள் எவ்வளவுதான் எளிய நடையில் இருந்தாலும், ஒரே மூச்சில் முழுவதையும் படிக்காமல், ஒவ்வொரு தலைப்பையும் புரிந்து நிதானமாக படியுங்கள்.  ஐயாவின் அனைத்து புத்தகங்களின் பட்டியலையும், அவை கிடைக்கும் இடத்தையும் தங்களின் பார்வைக்கு கொடுத்துள்ளேன். இன்று, தமிழில் எனக்கு இருக்கும் சட்ட அறிவிற்கும், தெரிந்த சட்ட சொல்களுக்கும் காரணம் ஐயா பி.ஆர்.ஜெ. அவர்கள்தான். அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.எனக்கு தெரிந்தவரை,  ஐயா பி.ஆர்.ஜெ-யின் புத்தகங்கள் தவிழாத தமிழக வழக்கறிஞர்களின் கைகள் மிக சொற்பமானவை