Sunday, 10 March 2024
Saturday, 17 February 2024
Thursday, 20 July 2023
மருத்துவ சேவைக் குறைபாடு வழக்கு
நான் ஆலோசனை கூறிய ஒரு வழக்கு.
மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?
மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?
Wednesday, 28 June 2023
கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு உரிய சிகிச்சை தேவை
பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு Non Alcoholic Fatty Liver Disease (NAFLD) (கல்லீரலில் கொழுப்பு படிவது) என்ற நிலை இருக்கும். இடையில், இந்த நோய் எந்தவித தாக்கத்தையும் காண்பிக்காமல் சில வருடங்கள் கழித்து அனைத்து பிரச்சனைகளையும் காண்பித்து, கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்து, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும். ஆகவே, கல்லீரலின் நிலையை ஆரம்பித்திலேயே Fibro scan கொண்டு கண்காணித்து உரிய life style changes செய்து கொள்வது இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும். இந்த மருத்துவ பிரச்சனைக்கான சிறப்பு மருத்துவரான திருமதி. மரு.V.S.ஹேமமாலா MD DM (Gastroenterologist) என்பவர் சென்னையில் Hepatologist ஆக பணிபுரிகின்றார். இவர் அமெரிக்காவில் கல்லீரல் சம்பந்தமாக Fellowship படித்திருக்கின்றார். நோயாளியின் அனைத்து சந்தேகங்களுக்கும் பொறுமையாக பதில் அளிக்கின்றார். நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக fatty liver இருப்பவர்கள், அல்லது அதிக மதுப்பழக்கம் உள்ளவர்கள் இவரையே அல்லது இவர் போன்று கல்லீரல் சம்பந்தமாக சிறப்பு மருத்துவ பட்டம் படித்தவர்களையோ சந்தித்து, தங்களது கல்லீரலின் நிலையை பரிசோதித்து கொள்வது நல்லதாகும். (இவரது கணவர் திரு.இளங்கோ சேது - கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதில் திறமையானவர். )
இரத்த பரிசோதனைக்காக லேப்களுக்குச் சென்றால்..... .
இரத்த பரிசோதனைச் செய்யும் லேப்களுக்குச் சென்றால், ஒருவருக்கு இரத்தம் எடுக்கும் முன், ஒரு பஞ்சில் ஸ்பிரிட் எடுத்து, இரத்தம் எடுக்கப் போகும் தோல் பகுதியில் துடைப்பார்கள். பின்னர் அந்த இரத்த குழாய் தெரிவதற்காகக் கையுறை அணியாத அவர்களின் விரலால் அந்த இடத்தை அழுத்துவர்கள் (கவனிக்கவும் – முதலில் ஸ்பிரிட் வைத்து துடைத்த இடத்தை அவர்கள் விரலால் அழுத்துவார்கள். இப்போது ஏற்கனவே ஸ்பிரிட்டால் துடைத்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்) அப்போது அவர்கள் விரல்களில் ஏதாகிலும் கிருமிகள் இருந்தால், இரத்தம் எடுக்க ஊசியால் குத்தபோகும்
தோலில் அமர்ந்துவிடும். அந்த இடத்தில் இரத்தம் எடுப்பதற்கான ஊசியைக் குத்தும்போது, தோலில் உள்ள கிருமிகள் இரத்த குழாய்களுக்குச் செல்ல வாய்ப்புண்டு. ஒருவருக்கு இரத்தம் எடுத்து முடித்தவுடன், இரத்த
கசிவினைத் தடுக்க ஊசியால் துளையிட்ட இடத்தில் பிளாஸ்டர் ஒட்டுவார்கள். அவ்வாறு பிளாஸ்டர்
ஒட்டும்போது, ஊசியால் துளையிட்டதால் கசிந்த
இரத்தமானது இரத்தம் எடுப்பவரின் விரல்களில், ஒட்டுவதற்கு வாய்ப்பு உண்டு.
பின்னர்க் கையுறை அணியாத அதே விரல்களால்,
மற்றவருக்கு இரத்தம் எடுக்கும்முன் இரத்த குழாய் தெரிவதற்காக அழுத்துவார்கள்.
இப்போது அவர்கள் விரல்களில் உள்ள இரத்த கறையானது இரத்தம் எடுக்கப் போகும் மற்ற நபரின்
தோலில் அமர்ந்து, அந்த இடத்தில் ஊசி குத்தும்போது, தோலில்
அமர்ந்துள்ள இரத்த கறையில் உள்ள கிருமிகள் இரத்தம் எடுக்கும் நபரின் இரத்த குழாய்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. இதைத் தடுப்பதற்கு என்னதான் தீர்வு? இரத்த மாதிரி எடுப்பதற்கு முன்னால், இரத்தம் எடுப்பவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாகக் கையுறை அணிய வேண்டும்.
.
ஒரு பிரபலமான லேப்பில் யுரின் சாம்பிள் எடுக்கும் பாட்டிலுக்கும் ரூ.10 தனியாகக் கட்டணம் போடுவார்கள். லேப் சார்ஜ் ரூ.1500 மேல் கட்டணம் வந்தாலும் அங்கிருப்பவர்கள் ரூ.5 விலையுள்ள கையுறையை அணியமாட்டார்கள். அடுத்த தடவை நீங்கள் இரத்த பரிசோதனைக்கு லேப்பிற்குச் சென்றால், இரத்தம் எடுக்கும் முன் அவர்களை கையுறை அணிய நிர்பந்தப்படுத்துங்கள். (கையுறை தயாராக வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சோம்பறித்தனம் அதை அணிவதில்). கையுறை அணிய மறுத்தால், அங்கு பரிசோதனைச் செய்வது என்பது உங்களுக்கு உடலநலத்திற்குப் பெரிய அளவிலான ஆபத்தாக முடியலாம். இவர்கள் எல்லோரையும் கண்காணிக்கும்
அதிகாரம் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநருக்கு
உள்ளதால், இந்த தவற்றினை அவர்களின் பார்வைக்கு நடவடிக்கை எடுக்க, கொண்டு செல்லுங்கள். மேலும் இவ்வாறு கையுறை அணியாமல் ஒருவருக்கு பரிசோதனைக்காக இரத்தம் எடுப்பது சேவை குறைபாடாக அமையும். இந்தப் பதிவு இரத்தம் பரிசோதனை செய்யும் லேப்பிற்கு மட்டுமல்ல, இரத்த பரிசோதனைச் செய்யப்படும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொருந்தும். இது ஒரு விழிப்புணர்வு
பதிவு. உங்கள் நண்பர்களின் பார்வைக்கும் இந்த பதிவினை கொண்டு செல்லுங்கள்.
Sunday, 20 October 2019
அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை ஏன் தாமதம் ஆகின்றது?
Friday, 27 July 2018
மருத்துவ காப்பீட்டில் உள்ள பிரச்சனைகள்
.
நோயாளி எடுத்திருக்கும் பாலிசியின் அடிப்படையில் அவருக்க ரூ.50 ஆயிரம் வரை கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க வேண்டும். பின்னர் ஏன் அந்த மருத்துவமனைக்கு நோயாளி தனியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கேள்விக்காக அந்த இன்சூரன்ஸ் கம்பெனியிடம் பேசினேன். அதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி கூறிய பதில் மிக ஆச்சிரியமாக இருந்ததது.
.
“ நோயாளி மருத்துவமனைக்கு பில்லை நேரடியாக செட்டில் பண்ணி அந்த பில்லை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் நோயாளிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்துவிடுவோம். ஆனால், பணம் கட்டமால் Cashless முறையில் சிகிச்சை பெற முற்பட்டால் நாங்கள் அந்த மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்குவோம் ஏனெனில் அந்த பெரிய மருத்துவமனையானது எங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியில் அவர்கள் மருத்துவமனையை சேர்க்க விண்ணப்பம் செய்யும்போது, கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சையை ரூ.25 ஆயிரத்திற்கு பண்ணுவதாக ஒத்து கொண்டுள்ளதால், நாங்கள் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்குவோம். என்றார்கள்.
.
நான் அவர்களிடம் கேட்டேன் “ ஒரு மருத்துவமனை உங்களிடம் அவர்கள் பெயரை சேர்ப்பதற்காக கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சை ரூ.5 ஆயிரத்திற்கு பண்ணுவோம் என்றால் கூட நீங்கள் அதற்கு ஒத்து கொள்வீர்களா? என்றதற்கு, பதில் இல்லை.
.
Cashless Mediclaim என்பதில் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பெரிய மருத்துவமனைகளும் இணைந்து ஒரு காப்பீட்டாளருக்கு கொடுக்கும் தலைவலியை பாருங்கள். இன்சூரன்ஸ் கம்பெனியும் மருத்துவமனையும் தங்களுக்கு சாதகமாக ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்களாம். அதற்கு மருத்துவ காப்பீடு பாலிசி வைத்திருக்கும் நுகர்வோர் கட்டுப்படவேண்டுமாம். இதற்கு ஒரே தீர்வு நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள்தான்.