ரு பெண் மருத்துவ காப்பீடு 2 இலட்சத்திற்கு எடுத்துள்ளார். அவருக்கு கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைக்காக ஒரு சிறு மருத்துவமனையை அணுகியபோது, அதன் மருத்துவர் கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைக்காக ரூ.25 ஆயிரம் செலவாகும் என்று கூறினார். ஆனால் அந்த மருத்துவமனை சிறு மருத்துவமனை என்பதால், இன்சூரன்ஸ் கம்பெனியானது அந்த சிறு மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்வதை அனுமதிப்பதில்லை. ஆகவே, பெரிய மருத்துவமனையில் வைத்து அந்த சிறு மருத்துவமனையின் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய தயாரக இருக்கும் நிலையில், அந்த பெரிய மருத்துவமனையானது அந்த நோயாளியிடம் “எங்கள் மருத்துவமனைக்கு இன்சூரன்ஸ் கம்பெனியானது கர்ப்பபை பை நீக்க அறுவை சிகிச்சைக்கு வெறும் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்கும் ஆக, எங்கள் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் எங்கள் கட்டணம் பொதுவாக ரூ.50 ஆயிரம். ஆகவே, பாக்கி ரூ.25 ஆயிரத்தை எங்கள் மருத்துவமனைக்கு நோயாளி வழங்கினால் எங்கள் மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று கூறினார்கள்.
.
நோயாளி எடுத்திருக்கும் பாலிசியின் அடிப்படையில் அவருக்க ரூ.50 ஆயிரம் வரை கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைக்கு இன்சூரன்ஸ் கம்பெனி வழங்க வேண்டும். பின்னர் ஏன் அந்த மருத்துவமனைக்கு நோயாளி தனியாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கேள்விக்காக அந்த இன்சூரன்ஸ் கம்பெனியிடம் பேசினேன். அதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி கூறிய பதில் மிக ஆச்சிரியமாக இருந்ததது.
.
“ நோயாளி மருத்துவமனைக்கு பில்லை நேரடியாக செட்டில் பண்ணி அந்த பில்லை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் நோயாளிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்துவிடுவோம். ஆனால், பணம் கட்டமால் Cashless முறையில் சிகிச்சை பெற முற்பட்டால் நாங்கள் அந்த மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்குவோம் ஏனெனில் அந்த பெரிய மருத்துவமனையானது எங்கள் இன்சூரன்ஸ் கம்பெனியில் அவர்கள் மருத்துவமனையை சேர்க்க விண்ணப்பம் செய்யும்போது, கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சையை ரூ.25 ஆயிரத்திற்கு பண்ணுவதாக ஒத்து கொண்டுள்ளதால், நாங்கள் ரூ.25 ஆயிரம் மட்டுமே வழங்குவோம். என்றார்கள்.
.
நான் அவர்களிடம் கேட்டேன் “ ஒரு மருத்துவமனை உங்களிடம் அவர்கள் பெயரை சேர்ப்பதற்காக கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சை ரூ.5 ஆயிரத்திற்கு பண்ணுவோம் என்றால் கூட நீங்கள் அதற்கு ஒத்து கொள்வீர்களா? என்றதற்கு, பதில் இல்லை.
.
Cashless Mediclaim என்பதில் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பெரிய மருத்துவமனைகளும் இணைந்து ஒரு காப்பீட்டாளருக்கு கொடுக்கும் தலைவலியை பாருங்கள். இன்சூரன்ஸ் கம்பெனியும் மருத்துவமனையும் தங்களுக்கு சாதகமாக ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்களாம். அதற்கு மருத்துவ காப்பீடு பாலிசி வைத்திருக்கும் நுகர்வோர் கட்டுப்படவேண்டுமாம். இதற்கு ஒரே தீர்வு நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்கள்தான்.

No comments:
Post a Comment