வாகனத்தில் சென்னை செல்வதற்குள் நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடியில் ரூ.300-க்கு அதிகமாக வரி செலுத்த வேண்டியதுள்ளது.
வெளிநாடுகளிலும் ஒரு முக்கிய நகருக்கு செல்ல இங்குள்ளது போல் நான்கு வழிச்சாலைகளையும் மற்றும்; அதே இடத்தை அடைய சாதாரண சாலைகளும் உண்டு. நாம் விரைவாக செல்லவேண்டும் என்றால் பணம் கொடுத்து சிறப்பு வழிச்சாலைகளை உபயோகப்படுத்தி கொள்ளலாம். இல்லையெனில் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அந்த நகரை அடைய சாதாரண சாலைகளை உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
ஆனால் நாம் சென்னை செல்ல வேண்டும் என்றால் கட்டணமில்லாத சாதாரண சாலைகள் எங்கு உள்ளன? நமது தலைநகருக்கே கட்டணம் கொடுத்துதான் பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். ஒருவர், வடமதுரையில் இருந்து மணப்பாறை செல்லவேண்டும் என்றால்கூட நான்கு வழிப்பாதையை மட்டுமே சுங்கசாவடியில் பணம் செலுத்தி உபயோகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார். அப்படியானால் புதிய வாகனங்கள் வாங்கும் போது மாநில அரசால் 'சாலை வரி' எதற்காக வசூலிக்கப்படுகின்றது?
தற்போது உள்ள நான்கு வழிச்சாலைகள் மத்திய அரசுக்கு சொந்தம் என்று அவர்கள் சுங்கவரி வசூலிப்பதும் மாநில அரசுகள் புதிய வாகனம் வாங்கும்போது சாலை வரி என்ற போர்வையில் வரி வசூலிப்பதும், ஒரே சாலை வசதிக்கு இரட்டை வரியை அமல்படுத்துவதாகும். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நிலைக்கதக்கதா?

No comments:
Post a Comment