வங்கியில்
டெப்பாசிட்டாக வைக்கும் பணத்திற்கு வருமான வரி பிடித்தம்
(கொஞ்சம் பெரிய பதிவு. பொறுமையாக படிக்கவும். அனைவரும்
தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்)
இன்று
வங்கியில் நடந்த ஒரு நிகழ்வு
வாடிக்கையாளர்:
சார், ஏன் எனது வைப்புத் தொகைக்கான வட்டியில் 20 சதவீதம் பிடிமானம் செய்துள்ளீர்கள்?
வங்கி
அதிகாரி: நீங்கள் பான் நம்பர் கொடுக்கவில்லை. ஆகவே, 20 சதவீதம் பிடித்தம் செய்து வருமான வரி அலுவலகத்திற்கு செலுத்தியாகிவிட்டது.
வங்கி
அதிகாரி: உங்களுக்கு பிடித்தம் செய்ய வேண்டாம் என்றால், 15ஜி என்ற படிவம் உள்ளது. அதை நிரப்பி கொடுங்கள்.
வாடிக்கையாளர்:
சார், இதை முதலிலேயே நீங்கள் சொல்லியிருக்கலாம். கொடுங்கள்.
நான் உடனடியாக படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கிறேன்.
(வாடிக்கையாளர் விரைவாக படிவத்தை பூர்த்தி செய்து
கொடுத்துவிட்டார். இனிமேல் வருமான பிடித்தம் செய்யமாட்டார்கள் என்று அவர் மனதில்
ஒரு சந்தோஸம்)
இந்த
நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்து நான், அந்த வாடிக்கையாளரிடம்,
சார், நீங்க எங்கே வேலைபார்க்கிறீர்கள்
‘நான் தமிழ்நாடு அரசில் .....துறையில் கண்காணிப்பாளராக இருக்கிறேன்”;.
சார், அப்படியானால், நிச்சயமாக உங்கள் வருட வருமானம் 2 இலட்சத்திற்கு மேல் இருக்கும் அல்லவா?
ஆமாம்
சார். எனது வருட வருமானம் 4 இலட்சத்தை தாண்டும்.
பின்னர்
ஏன் சார் 15ஜி படிவம் கொடுத்தீர்கள்.? படிவம் 15ஜி யார் கொடுக்கலாம் என தெரியுமா உங்களுக்கு?
தெரியலை
சார். 15ஜி கொடுத்தால், வருமான வரி பிடித்தம் செய்யமாட்டார்கள் என வங்கியில் கூறியதால் அதை
கொடுத்தேன்.
......
பின்னர்
அவருக்கு 15ஜி பற்றி விளக்கி கூறினேன். அவருடைய பான் கார்டு
எண்ணை வைப்பு தொகை கணக்கில் பதிவு செய்ய வங்கியிடம் கொடுக்க சொன்னேன்.
15ஜி படிவத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
யாருடைய
வருமானம் 2 இலட்சத்திற்கு மேல் (வருமான வரி இலக்கிற்கு மேல்)
செல்லவில்லையோ அவர்கள் மட்டுமே 15ஜி படிவத்தை கொடுக்கலாம். முதியோர்கள்
15எச் கொடுக்கலாம்.
வருமான
வரி செலுத்தும் வகையில் உங்கள் வருமானம் இருந்தால் உங்களது பான் எண்.-யை
கொடுங்கள். 10 சதவீதம் உங்கள் வட்டியில் இருந்து முன் வரியாக
பிடித்தம் செய்து உங்கள் பான் எண்ணில் ஏற்றப்படும். அதை வருமான வரி இணையதளத்தில் சென்று View Income Tax Credit
26AS என்று பார்த்து கொள்ளலாம்.
உங்களுடைய
வருமானம், வருமான வரி செலுத்தும் வகையில் இருந்தால், எக்காரணத்தை கொண்டும் 15ஜி படிவத்தையோ அல்லது 15எச் படிவத்தையே பூர்த்தி செய்து வங்கிகளில்
கொடுக்காதீர்கள். இது பற்றி விபரம் மேலும் அறிய உங்கள் ஆடிட்டரை
கலந்தாலோசியுங்கள்.
படிவம்
15ஜி-ல் நீங்கள் கையொப்பம் இடும் உங்களின்
உறுதிமொழியின் நகலை கீழே வழங்கியுள்ளேன். படிக்கவும்.
Declaration/Verification
*I/We………………………………do
hereby declare that to the best of *my/our knowledge and belief what is stated
above is correct, complete and is truly stated. *I/We
declare
that the incomes referred to in this form are not includible in the total
income of any other person u/s 60 to 64 of the Income‐tax Act, 1961. *I/We further,
declare
that the tax *on my/our estimated total income, including *income/incomes
referred to in Column 22 above, computed in accordance with the provisions
of
the Income‐tax Act, 1961, for the
previous year ending on .................... relevant to the assessment year
..................will be nil. *I/We also, declare that *my/our
*income/incomes
referred to in Column 22 for the previous year ending on ....................
relevant to the assessment year .................. will not exceed the maximum
amount
which is not chargeable to income‐tax.
இந்த
இணையதள முகவரியில் இது பற்றிய ஆங்கில செய்தி ஒன்று உள்ளது. படிக்கவும்.
http://www.moneycontrol.com/master_your_money/stocks_news_consumption.pup?autono=965491
No comments:
Post a Comment