Pages

Monday, 8 September 2014

அனைத்து ஆவணங்களிலும் ஒரே பெயர்.....



அனைத்து ஆவணங்களிலும் ஒரே பெயர்.....

நமது நாட்டில் மட்டுமே, நமது பெயர்  ஒவ்வொரு ஆவணங்களிலும் வெவ்வெறாக குறிப்பிடப்படும்.  உதராணமாக வாக்காளர் அட்டையை எடுத்துக் கொண்டால், ஒருவரது பெயர் மட்டுமே குறிப்பிடப்படும் அதன் கீழே அவருடைய தகப்பனார் பெயர் குறிப்பிடப்படும்.  உதாரணமாக: ஒருவர் பெயர் முருகன் என்றும் அவரது தகப்பனார் பெயர் ராமசாமி என்று வைத்து கொண்டால், வாக்காளர் அட்டைகளில் இவை சரியாக குறிப்பிடப்படும்.

ஆனால், ஆதார் அட்டையில் பெயர் என்ற இடத்தில் ராமசாமி முருகன் அல்லது முருகன் ராமசாமி என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கு காரணம் ஆதார் அட்டை விபரங்களை நிரப்பும்போது, நமது இனிஷியலை விரிவாக்கம் செய்ய கூறியதால், பலரின் பெயர்கள் தகப்பனார் பெயரையும் அடங்கி இருக்கும்.

தகப்பனார் பெயரை நமது பெயரில் இணைக்கும்போது தேவையில்லாத பிரச்சனைகளைத்தான் சந்திக்க வேண்டும். நமது தேர்தல் ஆணையத்தின் வாக்களர் அட்டையில் பெயர்களை குறிப்பிடும் முறைதான் சரியானதாகும். 

எந்த ஆவணங்களிலும் நமது தகப்பனார் பெயர் குறிப்பிடப்படுகின்றதோ, அங்கு திரும்பவும் இன்ஷியலையோ அல்லது இன்ஷியலை விரிவாக்கம் செய்யது நமது பெயரிலோ சேர்த்து எழுதக்கூடாது. எங்கு தகப்பனார் பெயர் எழுதவில்லையோ, அங்கு இன்ஷியலை சேர்த்து கொள்வதில் தவறில்லை.

உங்கள் ஆதார் அட்டையையும் வாக்களார் அட்டையும் எடுத்து ஒரு முறை பாருங்கள்.

இரண்டிலும் உங்கள் பெயர் சரியாக இருக்கிறதா (அதாவது தகப்பனார் பெயர் இல்லாமல்). இல்லையென்றால், ஆதார் அட்டை திருத்தம் செய்ய அதற்கான படிவத்தை நிரப்பி அனுப்பி வையுங்கள். அவர்கள் தகப்பனார் பெயரை நீக்கி உங்கள் பெயரை மட்டும் அவர்கள் பதிவேட்டுகளில் பதிவு செய்வார்கள். பின்னர் உங்களுக்கு புதிய கார்டு ஒன்று அனுப்பி வைப்பார்கள்.
தயவு செய்து உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தை சார்ந்த நபர்களின் அனைத்து ஆவணங்களிலும் (குறிப்பாக குழந்தைகளின் ஆவணங்கள்) பெயர்கள் விலாசம் அனைத்தும் ஒரே மாதிரி இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். (ரேஷன் கார்டு, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வாக்களர் அட்டை, டிரைவிங் லைசென்சு..)

எந்த ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும் என்பதற்கு இந்த இணையதளத்தை பார்க்கவும். <https://resident.uidai.net.in/update-data>..  இந்த இணையதளத்தில் இருந்து அதற்கான படிவத்தை இறக்கம் செய்து கொள்ளலாம்.  இணையதளம் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.

(பிரச்சனை எங்கு வரலாம் என்றால், நீங்கள் திருத்தத்திற்காக வழங்கும் ஆவணத்தில் உங்கள் பெயர் சரியாக இருக்கவேண்டும். மேல்கூறிய உதாரணத்தில், ஆதார் அட்டையில் முருகன் என்று மட்டுமே பெயர் வருமாறு திருத்தம் செய்ய கோர சமர்பிக்கும் உங்கள் வாக்களர் அட்டையில் ஆங்கிலத்தில் ஆரசரபயn என்பதிற்கு பதிலாக ஆழரசரபயn என்று குறிப்பிட்டிந்தால்பிரச்சனைதான்.  ஆகவே, திருத்தம் செய்ய ஆதாரமாக வழங்கும் ஆவணங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்று பார்த்து அதை சமர்ப்பிங்கள்)



No comments:

Post a Comment