பதிவு
செய்யப்பட்ட சங்கங்களின் கடப்பாடுகள்
சங்கங்களை
உருவாக்குவது என்பது அனைவருக்கு பிடித்தமான விஷயமாக மாறிவருகின்றது. சங்கங்களை
உடனடியாக பதிவு செய்து பதிவு எண் பெறுவதில் காட்டும் முனைப்பு பின்னர் சங்கத்ததை
சட்டப்படி உயிர் கொடுத்து வருவதில் காண்பிப்பதில்லை. இன்று மாவட்ட சங்க
பதிவாளரிடம் பதியப்பட்டிருக்கும் சங்கங்களில் 10 சதவித சங்கங்களுக்குகூட சட்டப்படியான உயிர் இல்லை என்பதுதான் உண்மை. ஏன் இந்த நிலமை?
சங்ககத்தை
உருவாக்கி பதிவு பண்ணினால் மட்டும் போதாது. சங்க தனிநிலை சட்ட விதிகளின் படி, நிர்வாகக்குழு கூட்டங்களை கூட்டி, அந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும்
தீர்மானம் அனைத்தையும் (உறுப்பினர் யவரும் சேர்க்காத தீர்மானம்) அந்த தீர்மான
தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் சங்க பதிவாளரிடம் படிவம் 7-யுடன் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும்.
ஏதாகிலும்
உறுப்பினர்கள் சேர்ந்தாலும், நீக்கம் செய்யப்பட்டாலும்
அல்லது அவர்கள் மறைந்தாலும், மற்றும் புதிய
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது சார்ந்த தீர்மான் நகலுடன், படிவும் 7-யுடன் சேர்த்து 3 மாதத்திற்குள் பதிவு
செய்யப்படவேண்டும்.
சங்க
வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகும்போது, தணிக்கையாளரை கொண்டு சங்க விதிகளின் படி தணிக்கை
செய்து, ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம்தேதிக்குள் கூட்டி அதற்கான அறிவிப்பை ஆண்டு
பொதுக்குழு கூட்டத்திற்கு 21 நாட்களுக்கு முன்னர்
வழங்கி, அந்த கூட்டத்தில் அந்த தணிக்கையை ஏகமனதாக
ஒப்புக்கொண்ட தீர்மானத்தையும் கீழ்கண்ட ஆவணங்களையும் 31ம் தேதி மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்கவேண்டும்.
ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மானத்தில், ஒருவரை உறுப்பினராக சேர்த்தாலே, நீக்கினாலோ,
அல்லது நிர்வாகக்குழுவினர்
தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலோ, 31ம் தேதி டிசம்பருக்குள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டத்தின்
பிரிவு 16 மற்றும் 1978 தமிழ்நாடு சங்கங்களின் பதிவு விதி 22ன் படி கீழ்கண்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
1)2013-2014 ஆம் ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு
மற்றும் இருப்புநிலை ஏடு அறிக்கை
2)2013-2014 முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க உறுப்பினர்களாக
இருந்தவர்கள் பட்டியல் - படிவம் 6
3)சங்கம் செயலாற்றி வருவதற்கான உறுதிமொழி
4)2013-2014முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க நிர்வாகிகளின்
பட்டியல்
5)29.09.2014 அன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மான நகல்
6)உறுப்பினர்களை நீக்கியதற்கான விபரம் அடங்கிய படிவம் 7
இந்த
நடைமுறையில் ஒரு முறை தவறினாலும், அதற்கு பிறகு தாக்கல் செய்யும் எந்த ஆவணங்களையும் கோப்பிற்கு எடுத்து
கொள்ளமாட்டார்கள். அதை தனி பைலில் வைத்து வருவார்கள். பின்னர் நாம், சென்னையில் உள்ள பதிவாளர் ஜெனரலுக்கு மனு செய்து, அவர்கள் வந்து நமது சங்க ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பிறகே எடுத்து கொள்வார்கள்.
எப்போது
தங்கள் ஆவணங்கள் கோர்வைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையோ, அன்றே உங்கள் சங்கம் செயலிலந்த சங்கமாகிவிடுகின்றது.
அதற்கு பிறகு அந்த சங்கத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு இல்லை. உதரணமாக, அந்த சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்றை தாக்கல்
செய்யவே அல்லது ஒரு வழக்கில் எதிர்வாதியா இருக்க அந்த சங்கத்திற்கு தகுதியில்லை.
இன்று
இப்படி செயலலிழந்த பல சஙகங்கள், பல வழக்குகளை தாக்கல்
செய்யும் வேளையில்,
சங்க பதிவாளருக்கு தஅஉ
சட்டத்தில் கேள்வி எழுப்பி, அந்த சங்கம் செயலிலந்து
விட்டது என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த வழக்கை ஆரம்பித்திலேயே தள்ளுபடி செய்துவிட
வைத்துவிடலாம்.
No comments:
Post a Comment