நண்பர்களே, இந்த தளத்தில் அடிக்கடி வினாவப்படும் கேள்வி ‘
சட்டப்புத்தகங்கள் எங்கே
கிடைக்கும்?
ஒவ்வொரு
மனிதனும் தனது தாய்மொழியில்தான் சிந்திக்கிறான். ஆகவே, நாம்
தாய்மொழியில் கற்கும்போது, அந்த விஷயங்கள் நம் மனதில் நிரந்திரமாக பதிகிறது. ஆகவே, சட்டத்தை படிக்க ஆர்வம் உள்ளவர்கள், முதலில் நமது
தாய்மொழியான தமிழில் அதை படியுங்கள்;. தமிழர்கள் அனைவரும் சட்டத்தில் புலமை பெற்று
விளங்கவேண்டும் என்று வழக்கறிஞர் ஐயா திரு. பி.ஆர். ஜெயராஜன் அவர்கள் நமக்கு பல
சட்டபுத்தகங்களை தமிழில் சிறப்பாக எழுதி வழங்கியுள்ளார். நான் எனது சட்டப்படிப்பு தேர்வுகளை எழுதும்போது, முதலில் ஐயாவின் புத்தகங்களை தமிழில் படித்து, சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்வேன். பின்னர் ஆங்கில
புத்தகங்களையும் படித்து தேர்வுகளை எதிர்கொண்டேன். ஐயா அவர்களின் சட்ட
புத்தகங்களில் மிக எளிமையாக, முறையான உதாரணத்துடன் ஒவ்வொரு சட்டப்பிரிவையும்
விளக்கி இருப்பார்கள். நண்பர்களே, சட்டத்த்தை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஐயாவின் புத்தகங்களை வாங்கி படியுங்கள். ஏற்கனவே நான்
கூறியவாறு, சட்டப்புத்தகங்கள் எவ்வளவுதான் எளிய நடையில்
இருந்தாலும், ஒரே மூச்சில் முழுவதையும் படிக்காமல், ஒவ்வொரு தலைப்பையும் புரிந்து நிதானமாக
படியுங்கள். ஐயாவின் அனைத்து
புத்தகங்களின் பட்டியலையும், அவை கிடைக்கும் இடத்தையும்
தங்களின் பார்வைக்கு கொடுத்துள்ளேன். இன்று, தமிழில் எனக்கு இருக்கும் சட்ட அறிவிற்கும், தெரிந்த சட்ட சொல்களுக்கும் காரணம் ஐயா பி.ஆர்.ஜெ. அவர்கள்தான். அவர்களுக்கு
இந்த பதிவின் மூலம் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.எனக்கு தெரிந்தவரை, ஐயா பி.ஆர்.ஜெ-யின் புத்தகங்கள் தவிழாத தமிழக வழக்கறிஞர்களின் கைகள் மிக சொற்பமானவை

அருமையான பயனுள்ள தகவல்கள், நன்றி ந்ண்பரே!
ReplyDelete