Pages

Wednesday, 26 November 2014

What is leadership Quality?

ஒரு முறை எனது கப்பல் அமெரிக்காவில் உள்ள நியுயார்க் துறைமுகத்தில் ஆயில் இறக்கி கொண்டிருந்தது.  வழக்கமாக துறைமுகத்திற்கு வந்ததும், எங்கள் கம்பெனியானது ஏஜென்ட் மூலமாக அனைவரின் சம்பளத்தை டாலராக கேப்டனிடம் கொடுக்கும்.  எனது பணியில், ஊழியர்களுக்கு சம்பளம், முன்தொகை பட்டுவாடா பண்ணுவது ஒன்றாகும்.  ஊழியர்களுக்கு அவர்கள் சம்பாதித்த ஊதியத்திற்கு ஏற்பசம்பளமானது முன்தொகையாகத்தான் கொடுத்து வரப்படுமே தவிர, மாதம் மாதம் கணக்கிட்டு முழுத்தொகையாக செட்டில் பண்ணுவதில்லை. ஆனால் ஒருவர் தனது பணி ஒப்பந்தம் முடித்து இந்தியா செல்லும்போது, அவருக்கு முழு பணமும் செட்டில் பண்ணி விடுவோம்.

நியுயார்க் துறைமுகத்தில் வைத்து 5 பணியாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தை முடித்து இந்தியா செல்ல இருந்தார்கள். ஆகவே, அவர்களை தவிர  (அவர்களுக்கு அவர்கள் கப்பலை விட்டு இறங்கும்போது முழுத்தொகையும் கொடுக்க வேண்டும் என்பதால்) மற்ற அனைவருக்கும் அட்வான்ஸ் வழங்கினேன்.

இவ்வாறு என்னிடம் இருந்து அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட எனும் நபர் அன்று மாலை உடம்பு சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றதில், அவர் தொடர்ந்து கடல் பயணம் மேற்கொள்ள தயாரில்லை என்று மருத்துவர் சான்றிதழ் வழங்கிவிட்டாதால், கேப்டன் என்னை அழைத்து லீனஸ், நாளை இவரையும் சேர்த்து மொத்தம 6 பணியாளர்களுக்கு சம்பள கணக்கை முடித்து சம்பளத்தை கொடுத்துவிடு' என்று கூறிவிட்டார்.

எனது மனதில் வீட்டுக்கு போகும் (5 நபர்களுக்கு) நான் அட்வான்ஸ் தொகை எதுவும் கொடுக்கவில்லை என்பது மட்டுமே நினைவில் இருந்தது. அவர்களுடன் அ என்பவரும் இந்தியா செல்ல இணைந்து விட்டதால், இவர் முந்தினநாள் என்னிடம் பெற்ற அட்வான்ஸ் தொகையை இவர் சம்பள கணக்கில் கழிக்க தவறி விட்டேன். அ என்பவரும் சம்பள கணக்கை முடித்து பணம் பெறும்போது ‘’சார், நான் நேற்று 2000 டாலர் அட்வான்ஸ் வாங்கியுள்ளேன் என்று என்னிடம்  அவர் கூறவில்லை.  இவ்வாறாக, அ என்பவர் 2000 டாலர் என்னிடம் அதிகம் வாங்கி கொண்டு இந்தியா சென்றுவிட்டார். நிச்சயமாக என் தவறுதான்.  (இந்த தவற்றிற்கு இன்னொரு காரணம், அமெரிக்காவில் அந்த நேரத்தில் எனது கப்பலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால், கோஸ்ட்கார்டு வந்து கப்பலில் அனைத்தையும் செக் பண்ணிகொருந்ததால், எனக்கு அதிக வேலைபழுவும் இருந்தது.).

நான்கு நாள் கழித்து எனது கப்பல் நியுயார்க்கு துறைமுகத்தில் இருந்து நைஜீரியா சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆர அமர உட்கார்ந்து கணக்கை பார்க்கும் போது அ என்பவர் 2000 டாலர் அதிகமாக வாங்கி சென்றுவிட்டார் என்பதை கண்டு கொண்டேன். கப்பலில் இங்கிலர்ந்து நாட்டை சார்ந்த கேப்டன் லாரிலார்டு பணியிலிருந்தார்.  மணி காலை 11.45 இருக்கும். அவர் அவரது ஆபிஸில் இருந்து புத்தகம் படித்து கொண்டு ஒரு பெக் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரிடம் சென்று கேப்டன் நான் தப்பு செய்து விட்டேன். அ என்பவர் 2000 டாலர் அதிகமாக வாங்கி சென்றுவிட்டார்; என்று நடந்தவைகளை விளக்கி கூறினேன். அவர் உடனடியாக, கம்பெனிக்கு கீழ்கண்டவாறு ஒரு தகவல் அனுப்பினார்

     While I was settling the final salary account to Mr.A, I had erroneously paid an extra amount of USD 2000.  Kindly arrange to recover from 'A

     அவர் நினைத்திருந்தால் அவர் என்னிடம், அந்த 2000 டாலரையும் எனது கணக்கில் அட்வான்ஸ் தொகையாக காண்பிக்க சொல்லிவிட்டு, அந்த பணத்தை அ என்பவரிடம் இருந்து நான்தான் இதை வசூல் செய்யவேண்டும் என்று கூறியிருக்கலாம். ஆனால் அவர் செய்யாமல் அந்த தவற்றையே, தான் செய்தாக கம்பெனிக்கு கூறினார்.  (கம்பெனி உடனே அ என்பவருக்கு விரைவில் மறு ஒப்பந்தப்பணி கொடுத்து அவரது சம்பளத்தில் இருந்து அந்த பணத்தை பிடித்தம் செய்தது)

     இங்குதான் அந்த கேப்டனின் லீடர் சிப் குவாலிட்டியை நான் கண்டேன். தனக்கு கீழே வேலைபார்க்கும் ஒருவர் செய்த தவற்றிக்கும் தான் பொறுப்பேற்று கொண்டது மட்டுமல்லாமல் என்னை ஒரு வார்த்தைகூட கடினமாக பேசாத அவர் குணத்தை கண்டு அதிசயத்தேன்.

     நான் அந்த கப்பலை விட்டு இறங்கும்போது, அவர் எனக்கு ஒரு சிறப்பான பெர்மாமன்ஸ் ரிப்போர்ட் கொடுத்தார். அப்போது நான் அவரிடம் கேப்டன் நான் தங்களிடம் பணி செய்தபோது ஒரு தவறு செயதிருக்கிறேன்; என்று நினைவூட்டியதற்கு அவர் லீனஸ், தவறுகள் செய்யாதவன் மனிதனில்லை. தவறு என்று தெரிந்தவுடன் என்னிடம் வந்து அந்த தவறை மறைக்காமல் (நான் நினைத்திருந்தால், எனது சம்பளத்தில் நான் டால்ர் 2000 பெற்றுக்கொண்டதாக காண்பித்து, பின்னர் எந்த வகையிலாவது அ-விடம இருந்து வசூலித்து இருக்கமுடியும்) சொன்னதில் இருந்து நீ ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமானவன் மேலும் கப்பலில் யார் தவறு செய்தாலும் அவர்தான்  பொறுப்பு என்று கூறினார். இந்த சம்பவம் நடந்து இன்றோடு 15க்கு மேற்பட்ட வருடங்கள் கடந்தோடிவிட்டன. ஆனால் இன்றும் என் மனதில் என்று கேப்டன் லாரிலார்டு அவர்களின் நினைவுகள் நீங்காமல் உள்ளன. 


    



No comments:

Post a Comment