Pages

Saturday, 13 December 2014

நமது வங்கிகளில் லாக்கர் பயன்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் பாதுகாப்பானதா?




வங்கிகளில் லாக்கர் உள்ளவர்கள் அதை பயன்படுத்த, வங்கிகளில் உள்ள அதிகாரியை  அணுகவேண்டும். அவர் லாக்கர் உள்ளவரின் கையொப்பத்தை ஒரு லெட்ஜரில் பெற்றுக்கொண்டு அதை அவரின்  பதிவு செய்யப்பட்ட கையொப்பத்துடன் ஒப்பிட்ட பிறகு, (பல நேரங்களில் கையொப்பத்தை ஒப்பிடுவது கிடையாது) வங்கி அதிகாரி லாக்கர் அறைக்கு சென்று  அவரிடம் இருக்கும் ஒரு சாவியை லாக்கரில் போட்டு திறப்பார் பின்னர் லாக்கர் வசதி உள்ளவர் அவருடைய சாவியை போட்டவுடன் லாக்கர் திறக்கும்.  உடனடியாக, ஆபிஸர் அந்த இடத்தை விட்டு சென்று  விடுவார். இப்போது அந்த அறையில் லாக்கர் உள்ளவர் மட்டுமே இருப்பார்.  பொதுவாக லாக்கர் அறைக்கு சென்றவர்கள் குறைந்தது 10 நிமிடங்களாவது இருப்பார். தனது லாக்கர் உபயோகத்தை முடித்துவிட்டு வங்கி அதிகாரியிடம் சொல்லிவிட்டு (பலர் சொல்லுவதில்லை) சென்ற பிறகுதான் வங்கி அதிகாரி மற்றொருவரை லாக்கர் ரூமில் அனுமதிப்பார்.


தனியாக லாக்கர் அறையில் இருக்கும் ஒருவர், மற்றவரின் லாக்கரை ஏதாகிலும் முறையில் திறந்து அதில் உள்ள பொருள்களை எடுத்தால் என்ன செய்வது? லாக்கர் அறையில் விதிகளின்படி  கேமராக்கள் பொறுத்தப்படுவதில்லையாதலால் அவ்வாறான தவறுகளை கண்டு பிடிப்பது மிக கடினம்.


வெளிநாடுகளில், ஒவ்வொரு லாக்கருக்குள் தனியாக வெளியே எடுக்கும் வகையில் ஒரு பெட்டக வசதி உண்டு. ஆபிஸர் லாக்கரை திறந்தவுடன், அவர் முன்னரேலாக்கர் உரிமையாளர் அவரது லாக்கரில் உள்ள பெட்டகத்தை எடுத்துக்கொண்டு (அதற்கும் தனி லாக் வசதி உண்டு), மற்றொரு தனி அறைக்கு சென்று விடவேண்டும். அங்குதான் உங்கள் பொருள்களை வைப்பதோ அல்லது எடுக்கவோ செய்யலாம். அந்த அறையில் கேமராக்கள் பொறுத்தப்பட்டிருக்காது.


உங்கள் வேலை முடிந்தவுடன், ஆபிஸரை அழைத்து, அவருடன் சென்று அந்த பெட்டகத்தை மறுபடியும் லாக்கர் அறையில் உள்ள உங்கள் லாக்கரில் வைத்து பூட்டிவிடவேண்டும். அதாவது, லாக்கர் அறையில் அனைத்து நேரங்களிலும் வங்கி அதிகாரி உங்கள் கூட இருப்பார். இந்த வகையில் தப்பானவர்கள் மற்றவர்களின் லாக்கரை திறக்க வாய்ப்பே இல்லை.  உங்கள் பெட்டகத்தை கையாளும்போது மட்டுமே, வங்கி அதிகாரி அந்த தனி அறையை விட்டு வெளியே செல்வார். மேற்படி லாக்கர் அறையானது கேமராக்களால் அனைத்து நேரங்களிலும் கண்காணிக்கப்படும். இந்தமுறைதான் மிகவும் பாதுகாப்பாக வாடிக்கையாளர்களின் லாக்கர்களை கையாளும் முறையாகும்.




No comments:

Post a Comment