சட்டக்கல்வி படிக்கும்போது முக்கியமான இரண்டு பாடங்கள் JURISPRUDENCE (சட்டவியல்) INTERPRETATION OF STATUTES (சட்ட பொருள் விளக்கம்). இரண்டுமே சிறிது கடினமான பாடமாகும். இந்த பாடங்களில் தேர்வு சதவீதம் மிக குறைவாகவே இருக்கும்.
பலர் நீதிபதிகளின் தீர்ப்பை பற்றி விமர்சிக்கிறார்கள். சட்டத்தை அப்படியே அமல்படுத்த வேண்டியதுதானே, ஏன் நீதிபதிகள் சட்டத்தில் இல்லாததை தீர்ப்பாக பகர்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்? இதற்கெல்லாம், விளக்கம் தேவை என்றால் ‘சட்ட பொருள் விளக்கம்’ என்ற பாடத்தைதான் படிக்க வேண்டும்.
நீதிபதிகளின் தீர்ப்புகளை வழக்கறிஞர்கள் ஏன் விமர்சிப்பதில்லை? அப்படி விமர்சித்தால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என்பதைவிட நீதிபதியானவர் சட்டத்திற்கு பொருள் விளக்கம் கொடுத்து தீர்ப்புகளை பகர அதிகாரம் படைத்தவர் என்பது அவர்களுக்கு தெரியும்.
சட்டத்தில் உள்ளதை கூற நீதிபதிகள் தேவையில்லை. அதற்கு ஆர்பிட்ரேட்டர்கள் (நடுநிலையாளர்கள்) போதும். சட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, இயற்றப்பட்ட சட்டத்திற்கு வலிமை கொடுப்பவர்கள்தான் நீதிபதிகள்.
சட்ட பொருள் விளக்கத்தை பற்றி தமிழில் அறிந்து கொள்ள வழக்கறிஞர் ஐயா, திரு. பி.ஆர்ஜே. அவர்கள் எழுதிய புத்தகத்தை படித்து பாருங்கள்.
No comments:
Post a Comment