Pages

Wednesday, 7 January 2015

நீதிபதியும் என்னையும் உங்களை போன்ற மனிதர்தான்.......

உங்களிடம் ஒரு பழம் உள்ளது. அதை மூன்று பேர் கேட்கிறார்கள். 


முதலாமவர் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டு இன்னும் சில மணிகளில் தூக்கிலிடப்பட போகிற கைதியாவர். அவர் கடைசி ஆசையாக அந்த பழத்தை உங்களிடம் கேட்கிறார்.


இரண்டாவமர் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண். பல நாட்கள் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கும் அவர்அந்த பழத்தை தனது பசியை ஆற்ற கேட்கிறார்?


மூன்றாமவர் ஒரு சிறு குழந்தை.  சில நாட்கள் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கும்  குழந்தை மிகுந்த பசியுடன்   அந்த பழத்தை உங்களிடம் கேட்கிறது.


நீங்கள் இந்த மூவரில் யாருக்கு உங்கள் கையில் உள்ள பழத்தை கொடுப்பீர்கள்?

(இந்த பதிவை முகநூலில் பதிவு செய்தததிற்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு எது சரியாக படுகின்றதோ அதை குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்கள்.)


ஒவ்வொரு மனிதருக்கும் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. ஒருவரின் முடிவு அவருக்கு சரியானதாகபடும். ஆனால் மற்றவருக்கு அந்த முடிவு சரியானதாக தோன்றாது. உதாரணத்திற்கு நான் இதற்கு முன்னர் பதிவு செய்த பழக்கதையைபாருங்கள். ஒவ்வொருவரும் அவர்களின் பார்வையில் அவர்களுக்கு நியாமாக பட்டதை, 'பழம் யாருக்கு சென்றடைய வேண்டும்', என்று பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் பதிவு செய்தது அவர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு நியாயமாக பட்டவையாகும்.

ஒரு சாதாரண பழத்தை பிரித்து கொடுப்பதிலே நம் அனைவராலும் ஒருமித்த கருத்திற்கு வரமுடியவில்லை. காரணம், ஒவ்வொருவரின் முடிவும் அவரது தனிப்பட்ட முடிவாகும். அவரவர் ஆராய்ந்து பார்த்ததில் அந்த முடிவு அவருக்கு சரியாக படுகின்றது.

இதுபோலத்தின் நீதியும். பலர் நீதிபதிகள் சரியில்லை என்று புகார் கூறுகின்றார்கள். நீதிபதிகள் தவறாக நீதி வழங்கியதாக புகார் கூறுகின்றார்கள். நீதிபதியின் நிலமையும் உங்கள் நிலமை போலத்தான். அவர் மனதில் எது நியமாக சரியாக பட்டதோ அதையே அவர் தீர்ப்பாக வழங்குகிறார்.

இந்த பழக்கதை பதிவில் - ஆரம்பத்தில், 3வது நபர்,  குழந்தை அந்த பழத்தை ஆசையுடன் கேட்கிறது என்று போட்டிருந்தேன். அப்போது அந்த குழந்தைக்கு பழத்தை கொடுக்கலாம் என யாருமே சொல்லவில்லை. பின்னர் ஆசைஎன்ற வார்த்தையை எடுத்துவிட்டுஅந்த குழந்தை சில நாட்கள் பசியுடன் உள்ளதுஎன்று பதிவு செய்தேன். உடனே அந்த குழந்தைமேல் இரக்கம் கொண்டு அந்த குழந்தைக்கு பழத்தை கொடுக்க வேண்டும் என்று பதிவு செய்தார்கள். ஆக, ‘ஆசைஎன்பது பசிஎன்று மாறியவுடன் ஒருவரின் தீர்ப்பு எப்படி மாறுகின்றது. அதுபோலத்தான், உங்கள் வழக்கில் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்களும் முன் தீர்ப்புகளும், நீதிபதியின் தீர்ப்பை மாற்ற வலிமை பெற்றது.

மேற்படி கதையில் பழத்தை நீங்கள் விரும்பும் ஒருவருக்கு கொடுத்து அவர் சாப்பிட்டு விட்டால், மற்ற இருவருக்கும் அந்த பழம் கிடைக்காமல் மற்ற இருவர் பக்கம் உள்ள விருப்பம் செத்துபோய்விடும் ஆனால், மற்றவர்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை இழந்துவிடக்கூடாது என்றுதான் நீதித்துறையில் முதல் மேல்முறையீடு, இரண்டாம் மேல் முறையீடு, எஸ்.எல்.பி. என்று பல அடுக்குகளில் மேல் முறையீட்டு முறையை நீதித்துறை நிர்வாகம் கொண்டுள்ளது. ஆக, உங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் மேல் முறையீட்டிற்கு சென்று முறையீடுவதை தவிர்த்து நீதிபதிகளையும் நீதித்துறையும் குறை சொல்வதில் நியாமில்லை.

மேற்படி பழக்கதையின் கருத்து என்னவென்றால், நீதிபதியும் என்னையும் உங்களை போன்ற மனிதர்தான். அவருக்கு எது நியமாக படுகின்றதோ அதையே, அவர் அதற்கான காரணங்களை தீர்ப்பில் கூறி, தீர்ப்பு பகர்கின்றார். இது தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் உள்ள தகவல் ஆணையர்களுக்கும் பொருந்தும்


(இந்த பதிவு உங்களுக்கு திருப்தி அளிக்காமல் போகலாம். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒருவருக்கு சரியாக தெரிவது மற்றவருக்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை)

No comments:

Post a Comment