Pages

Wednesday, 7 January 2015

மருத்துவம் படிக்காதவர்கள் மட்டுமா போலி டாக்டர்கள்?


      மருத்துவம் படிக்காதவர்கள் மட்டுமா போலி டாக்டர்கள்?
      அடிக்கடி நாளிதழ்களில் படிக்கிறோம் போலி டாக்டர்கள் கைது’. மருத்துவ படிப்பை முறையாக படிக்காதவர்கள் மட்டும்தான் போலி டாக்டர்களா?

      எம்.பி.பி.எஸ் படித்த பிறகு, முறையான இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாகராம் இல்லாத படிப்புகளின் பெயர்களையும் பெல்லோஷிப்களையும் எம்.பி.பி.எஸ் பெயர்களுக்கு பின்னர் அலங்காரமாக மக்களை ஏமாற்றும் வகையில் போடும் அத்தனை மருத்துவர்களுமே போலி டாக்டர்கள்தான்.

      இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாகரம் இல்லாத மருத்துவ படிப்புகளை பெயருக்கு பின்னால் போட்டு மக்களை ஏமாற்றும் எம்.பி.பி.எஸ் மருத்துவர்களை இந்திய மருத்துவ கழகம், ஏன் கண்டிப்பதில்லை?

      கஷ்டப்பட்டு ,மூன்று வருடங்கள் பட்டபடிப்பு படித்து தங்கள் படிப்பை MD, MS என்று போடும் மருத்துவர்களிடையே, எதுவும் படிக்காமல் ஏதாவது நான்கு பெரிய ஆங்கில எழுத்து டிகிரியை வாங்கி? அதை எம்.பி.பி.எஸ் -க்கு பின்னால் போட்டு மக்களை ஏமாற்றும், இந்த படித்த டாக்டர்களுக்கு என்ன தண்டணை?


      (பல வருடங்களுக்கு முன்னர் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வியில் பல மருத்துவ பட்டயப்படிப்புகளை நடத்தியது. அந்த பட்டங்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் செய்யப்பட்டதல்ல. அந்த பட்டங்களை பெற்ற பல எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் அதை இன்றும் தங்கள் டிகிரியாக போட்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.)


No comments:

Post a Comment