Pages

Monday, 2 February 2015

CLAT exams - தேசிய சட்டப்பள்ளிகளில் 5 வருட சட்டப்படிப்பு

தேசிய சட்டப்பள்ளிகளில் 5 வருட சட்டப்படிப்பு

பிளஸ் 2 க்கு பிறகு படிக்கும் உயர்கல்வியில் தேசிய அளவிலான சட்டப்பள்ளிகளில்  சட்டப்படிப்பு படிப்பதும் இப்போது பிரபலமாகி வருகின்றது. பெங்களுரில் உள்ள தேசிய  சட்டப்பள்ளிகளில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஒரு இலட்சம் வரை ஊதியம் வழங்க கம்பெனிகள் தயாராக இருக்கின்றன.

தேசிய சட்டப்பள்ளிகளில் 5 வருட சட்டப்படிப்பில் சேரவேண்டும் என்றால் கிளாட் (Common Law Admission Test)   என்ற நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் கீழ்கண்ட 16 தலைசிறந்த சட்டப்பள்ளி / சட்டப்பல்கலைகழகத்தில் உள்ள கல்லூரிகளில் சேரலாம்.

  1. National Law School of India University, Bangalore (NLSIU)
  2. National Academy of Legal Study & Research (NALSAR) University of Law, Hyderabad
  3. National Law Institute University, Bhopal (NLIU)
  4. The West Bengal National University of Juridical Sciences, Kolkata (WBNUJS)
  5. National Law University, Jodupur (NLUJ)
  6. Hidayatullah National Law University, Raipur (HNLU)
  7. Gujarat National Law University, Gandhinagar (GNLU)
  8. Dr. Ram Manohar Lohiya National Law University, Lucknow (RMLNLU)
  9. Rajiv Gandhi National University of Law, Patiala (RGNUL)
  10. Chanakya National Law University, Patna (CNLU)
  11. National University of Advanced Legal Studies, Kochi (NUALS)
  12. National Law University Odisha, Cuttack (NLUO)
  13. National University of Study & Research in Law, Ranchi (NUSRL)
  14. National Law University & Judicial Academy, Assam, Guwahati (NLUJAA)
  15. Damodaram Sanjivayya National Law University, Visakhapatnam (DSNLU)
  16. The TamilNadu National Law School, Tiruchirappalli (TNNLS)

இந்த தேர்வுக்கு ஆன் லைனில் 2016 வருடம் மார்ச் மாதம் 31ம் தேதி வரை பதிவு செய்யப்படுகின்றது.. இந்த நுழைவுத்தேர்வுக்கான கட்டணம் ரூ.4000 ஆகும்.  இந்த தேர்வில் 200 கேள்விகளை எதிர் கொள்ளவேண்டும். 

நுழைவுத்தேர்வு முடிவுகள் 2016 மே மாதம் 8ம் தேதி வெளியிடப்படும். நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்படி சட்டப்பள்ளி / சட்டப்பல்கலைகழகத்தில் உள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இந்த நுழைத்தேர்வின் விபரங்களையும் தெரிந்து கொள்ள http://clat.ac.in என்ற இணைய தளத்தை சென்று பார்க்கவும்.

குறிப்பு: திருச்சியில் (மணப்பாறை அருகில்) அமைந்துள்ள உள்ள  தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியில் படிக்கவும் கிளாட் நுழைவுத்தேர்வுக்கான மதிப்பெண் அவசியம். அது போலவே தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைகழத்தில் உள்ள சட்டப்பள்ளியில் சேரவும் கிளாட் மதிப்பெண் அவசியம்).  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைகழகத்தில் சீர் மீகு சட்டப்பள்ளி (The School of Excellence in Law)  செயல்பட்டு வருகின்றது. அதில் சேருவதற்கு கிளாட் நுழைவுத்தேர்வு அவசியமில்லை. இங்கு பிளஸ் 2வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கே பெற்றோர்களுக்கோ மேற்படி தலைசிறந்த சட்டக்கல்லூரிகளை பற்றி அதிக அளவில் புரிதல் இல்லை.

தற்போது தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் 5 வருட சட்டப்பள்ளியில் சேர கிளாட் அவசியம் என்றாலும்கூட தற்போது கிளாட் மார்க்கை 25 சதவீதத்திற்கு மாற்றி மீதி 75 சதவீதத்தை பிளஸ் 2-ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கொண்டு ஆக மொத்தம் 100 சதவீதத்தற்கு ரேங் லிஸ்ட் தயார் செய்து அட்மிஷன் வழங்குகிறார்கள். கிளாட் எழுதாதவர்களுக்கும் நல்ல மதிப்பெண் இருந்தால் அட்மிஷன் போனவருடம் (2014-15) வழங்கினார்கள். செமஸ்டர் பீஸ் ரூ.40 ஆயிரம் அளவில் இருக்கும்.

கிளாட் இல்லாமல் 5 வருடம் மற்றும் 3 வருடம் சட்டப்படிப்பிற்கான சென்னையில் உள்ள சீர்மிகு சட்டப்பள்ளியில் (சோயல்) சேரலாம். இங்கு மார்க் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும். வருடாந்திர பீஸ் ரு.65 ஆயிரம்.

இதுபோல சென்னையில் உள்ள விஐடி மற்றும் சவிதா பல்கலைகழகத்திலும் சட்டப்படிப்பில் சேரலாம். இங்கு வருடாந்திர பீஸ் 1 இலட்சம் வரையில் இருக்கின்றது என கேள்விபட்டேன். நேரடியாக விசாரித்து கொள்ளவும். ஆனால் இங்கு கிளாட் தேவையா என்பது பற்றி எனக்கு புரிதல் இல்லை. மன்னிக்கவும.

இதுபோக தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் (சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்துhர்,) போன்றவைகளில் மார்க் அடிப்படையில் 5 மற்றும் 3 வருட சட்டப்படிப்புகளின் சேர்க்கை நடைபெறும். இங்கு வருடாந்திர பீஸ் நான்காயிரத்திற்கு குறைவானதாகும்.

சேலத்தில் தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு மார்க் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறுகின்றது. இங்கு பீஸ்  70 ஆயிரம் அளவில் இருக்கின்றது.

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகின்றது. தேர்வாக மதிப்பெண் 45 எடுக்க வேண்டும். இன்டெர்னல் மதிப்பெண் இல்லாததால் தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் 60 மதிப்பெண் பெறுவது மிக கடினமான ஒன்றாகும். . தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் முதல் வகுப்பில் தேர்வாவது என்பது மிக கடினமான ஒன்றாக இருக்கின்றது. ஆனால், சட்டம் படித்து முடித்தவுடன் கம்பெனிகளில் லீகல் ஆபிஸராக பணிபுரிய வேண்டுமென்றால் 55-60 சதவீதம்மேல் மொத்த மதிப்பெண் சதவீதம் எதிர்பார்ப்பார்கள். சட்ட படிப்பு முடித்தவுடன் வழக்குரைஞராக தொழில் செய்ய போகிறிர்கள் என்றால் அரசு சட்டக்கல்லூரிகளில் படிக்கலாம்.

அரசு சட்டக்கல்லூரிகளில் வகுப்புகள் காலை அல்லது மாலை நடைபெறுவதால், வகுப்பிற்கு செல்லாத நேரங்களில் ஒரு மூத்த வழக்கறிஞரிடம் சேர்ந்து சட்ட அனுபவம் தேடலாம். இந்த முறையில் சட்டப்படிப்பு முடிக்கும்போது, ஓரளவுக்கு நீதிமன்ற நடைமுறை தெரிந்தவராக இருப்பதால், வழக்குகளை நேரடியாக எடுத்து வாதாடலாம். ஆனால், மற்ற கல்லூரிகளில், வகுப்புகள் காலை ஆரம்பித்து மதியம் குறைந்தது 4 மணி வரை இருக்கும். இங்கு மூத்த வக்கில் ஆபிஸ் சென்று எதுவும் கற்றுக்கொள்ள வாய்பிருப்பதில்லை. ஆனால், இங்கு இன்டெர்னல் மதிப்பெண் இருப்பதால் இலகுவாக முதல் வகுப்பில் தேரலாம். அந்த மதிப்பெண்னை கொண்டு கம்பெனிகளில் வேலைக்கு செல்லலாம்.

 தற்போது தமிழக அரசானது எம்.எல். அட்மிஷனை பி.எல்.-லில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்துகின்றது. தற்போதைய நிலமையில் தமிழக அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மிக குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வாவதால், அவர்களுக்கு எம்.எல். படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகின்றது. ஏனெனில் அதிக மதிப்பெண் பெற்று வரும் மாணவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைக்கின்றது. ஆகவே, வழக்கறிஞராக தொழில் செய்வது மட்டுமே உங்கள் விருப்பம் என்றால், தமிழக அரசு சட்டக்கல்லூரிகளில் படிக்கலாம்.

What is LSAT?


The Law School Admission Test (LSAT) is a half-day, standardized test administered four times each year at designated testing centers throughout the world. The test is an integral part of the law school admission process in the United States, Canada, and a growing number of other countries. It provides a standard measure of acquired reading and verbal reasoning skills that law schools can use as one of several factors in assessing applicants.// http://www.lsac.org. Gindal Global law school's admission is based on LSAT exam. website: www.pearsonvueindia.com/lsatindia


Other Law College Admission Procedure

Indian Law Society Law College , Pune
 Admission is based upon merit i.e. marks in the qualifying examination. There is no entrance test. http://www.ilslaw.edu/

University Law College Bangalore
 Admission is based upon merit i.e. marks in the qualifying examination. http://bangaloreuniversity.ac.in/university-law-college/

The National University of Law, Delhi
It conducts the All India Law Entrance Test (AILET) 2015 on 3rd May 2015 (Sunday) for admission to the B.A., LL.B. (Hons.), LL.M and Ph.D. Programmes. For details, please visit their website www.nludelhi.ac.in



1 comment: