ஒரு அரசு ஊழியர் நல்லது செய்தால் உடனே அவரைப்பற்றி முகநூலில் பாராட்டி எழுதுகின்றார்கள். இன்று காலையில் ஒரு பஸ் கண்டக்டர், பயணி தவறவிட்ட பணத்தை திரும்ப கொடுத்தாக அவரை பாராட்டும் வகையில் ஒரு பதிவு வந்தது. நானும் ஒரு ‘லைக் கொடுத்தேன்’. இதோடு, நமது கடமை முடிந்துவிட்டதா? அரசு ஊழியரின் நேர்மையான சேவையை யவர் உணர்ந்தார்களோ அவர்கள், அந்த ஊழியர் சார்ந்த துறையின் மேலதிகாரிக்கு மற்றும் அந்த மாவட்ட கலெக்டருக்கு அவரின் சிறந்த சேவையைப்பற்றி கடிதம் எழுதி நமது பாராட்டுக்களை சமர்பிக்க வேண்டும். . (இதை நான் பல நேரங்களில் செய்திருக்கின்றேன்). முகநூலில் ஒரு அரசு ஊழியரின் சிறந்த சேவை ஆயிரம் ‘லைக்’ பெற்றாலும், அவர் துறை சார்ந்த அதிகாரிக்கு எழுதப்படும் ஒரு கடிதத்திற்கு ஈடாகாது.
No comments:
Post a Comment