Pages

Tuesday, 2 June 2015

சட்டப்படிப்பு ...ஒரு பார்வை

    சட்டப்படிப்பு ...ஒரு பார்வை
    .
    எனது மகளின் LSAT-INDIA (B.A.,LLB (Hons) மற்றும் LLM) நுழைவுத்தேர்வக்காக சென்னை VIT Campus போன வருடம் சென்றிருந்தேன். நுழைவுத்தேர்வு எழுத வந்தவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் CBSC-ல் 12ம் வகுப்பு முடித்தவர்கள். Most of the students are from Creamy Layer family. இவர்கள் தங்கள் குழந்தைகளை சட்டப்படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதை காண முடிந்தது.
    ...
    .
    (LSAT India Entrance Exam for joining Jindal Global Law School, Delhi, VIT Law School, Chennai)
    .
    (CLAT Entrance Exam for joining National Law Schools, T.N. National Law School, Trichy, Shashtra Law School, Thanjur etc)
    .
    அங்கு சென்றதில் அறிந்தது:
    .
    1) சட்டப்படிப்பிற்கு அடுத்த 5 ஆண்டுகளில் மிக பிரகாசமான எதிர்காலம் உள்ளதைப் பற்றிய புரிதல் Creamy Layer பெற்றோர்களுக்கு உள்ளது.
    .
    2) 2020-ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள Legal Law Firms- இந்தியாவில் வரும்போது, தற்போதைய IT Field போல Law Graduate-களுக்கு அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்புகள் அமையும் என்பதை தெளிவாக மேற்படி பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.
    .
    3) நுழைவுத்தேர்வுக்கு வந்திருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் இந்தியாவில் உள்ள தலைசிறந்த சட்டக்கல்லூரிகளை பற்றிய புரிதல் இருந்தது (NLS, Bangalore, NASLAR Hyderabad, Jindal Global Law School, Sonipat, SYMBIOSIS, Pune, NLS Joduphur etc). இந்த கல்லூகளில் சேரும் முறைகளை பற்றி நன்கு அறிந்திருந்தார்கள்.
    .
    4) பெற்றோர்கள் அனைவருக்கும் First Preference-யாக சென்னையில் உள்ள The School of Excellence in Law-ல் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆசை. ஆனால், OC-98, BC-95 MBC-93 என்னும் அளவில் சேர்க்கை நடைபெறுவதால், CBSC மாணவர்களுக்கு வாய்ப்பு குறைகின்றது. மாற்றாக, அவர்கள் VIT Law School (Rs.90,000 per year) , Shastra Law School (Rs.90,000 per year) Savitha Law School (Around 1.5-2 Lakhs Per year), Tamil Nadu National Law School, Trichy (Rs.2 Lakhs per year) -களில் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகின்றார்கள்.
    .
    5) தனியார் சட்டப்பள்ளிகளில் டெல்லியில் உள்ள Jindal Global Law School தலைசிறந்தது என்று அறிந்திருந்தும், வருடாந்திர கட்டணம் ரூ.8 இலட்சம் என்பதற்காக தயங்குகின்றார்கள்.
    .
    6) பெரும்பாலான குழந்தைகள் CLAT Entrance Exam எழுதியுள்ளார்கள்.
    .
    7) இன்று தனியார் சட்டப்பள்ளிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு தலை சிறந்த சட்டக் கல்லூரிகளில் படித்தவர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளதாகவும், திறமையானவர்களுக்கு UGC சம்பளத்துடன் அதிக சம்பளம் கொடுத்து பணி அமர்த்த தனியார் சட்டக்கல்லூரிகள் தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது

No comments:

Post a Comment