ஒரு மூத்த வழக்கறிஞர் கூறியது....
.
1)
பல
வருடங்களுக்கு
முன்னர்
நடந்த
சம்பவம்....
.
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில், மாண்புமிகு நீதியரசர் வந்து அமர்கின்றார். இருதரப்பு
வழக்கறிஞர்களும் தங்கள் பக்கத்தில் லா ஜார்னல்களை அடுக்கி வைத்துள்ளார்கள்.
நீதியரசர்: என்ன இத்தனை புஸ்தகங்கள்....
வழக்கறிஞர்கள்: முன் தீர்ப்புகளை கொண்ட லா ஜார்னல்ஸ், மை லார்டு.
நீதியரசர்: முதலில் இந்த புத்தகங்களை இங்கிருந்து நகட்டுங்கள். இதெல்லாம் உங்கள்
ஆபிஸில் வைத்து புரட்டி பார்த்து கொள்ளுங்கள்.
நீதிமன்றத்தில் “ சட்டம் என்ன சொல்கின்றது“ என்பதை மட்டுமே பேசுங்கள்.
...........................
2. முன் காலத்தில் மாண்புமிகு நீதியரசர்களிடம் நமது வழக்குக்கு சாதகமான சட்டப்பிரிவுகளை
மட்டுமே மேற்கோள் காட்ட வேண்டும். சட்டத்தில் ஒரு வெற்றிடம் இருந்து, மாண்புமிகு நீதியரசர்களால்
வேறு பொருண்மை கொடுக்கப்பட்டால் மட்டுமே, லா ஜார்னல்களில் அது ரிப்போர்ட் ஆகும். அதன்
நகலும் லா கமிஸன் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
.
அந்த மூத்த வழக்கறிஞரின் வருத்தம்......
.
இப்போது எல்லாம் நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் பெரும்பாலும் தங்களுக்கு
சாதகமாக இருக்கும் சட்டப்பிரிவுகளை எடுத்துரைப்பதற்கு பதிலாக, முன் தீர்ப்புகளை கொண்டே
தங்கள் வாதங்களை முன் வைக்கின்றார்கள்.
.
முந்தைய காலத்தில், சட்டத்தில் உள்ள வெற்றிடம் நீதியரசர்களால் நிரப்ப்பட்ட
சட்ட வலிமை பெற்ற தீர்ப்புகள் மட்டுமே லா ஜார்னலில் இடம் பிடித்தது. ஆனால் தற்போது,
ஏற்கனவே சட்டத்தில் சொல்லப்பட்ட விஷயத்தை சொல்லும் தீர்ப்புகளை லா ஜார்னலில் வெளியிடுகின்றார்கள்.
ஒட்டு மொத்தமாக, சட்ட வலிமை பெற்ற தீர்ப்புகளை வெளியிட்ட காலம் போய், தினசரி பத்தரிகைகளில்
செய்தி வருவதுபோல, லா ஜார்னல்களிலும் தீர்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. அதற்கு ஏற்றது போல, பல லா ஜார்னல்கள், வியாபர நோக்குடன்
உலா வர ஆரம்பித்துவிட்டன.
No comments:
Post a Comment