Pages

Monday, 25 April 2016

மயக்கவியல் மருத்துவர் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்...

மயக்கவியல் மருத்துவர் கூறும் ஆலோசனைகளை கேளுங்கள்...
.
.
அறுவை சிகிச்சைக்கு மயக்கம் கொடுப்பதற்கு ஒரு நோயாளி முற்றிலுமாக தகுதியானவரா என்று அறுவை சிகிச்சைக்கு முன்னரே மயக்க மருத்துவரால் பரிசோதிக்கப்படுவது மிக அவசியம். (இந்த நடைமுறை எமர்ஜென்சி அறுவை சிகிச்சைகளுக்கு பொருந்தாது).
.
அறுவை சிகிச்சைக்கு செல்லும் ஒவ்வொரு நோயாளியையும், மயக்கவியில் மருத்துவரானவர் அறுவை சிகிச்சைக்கு முன்னர் வந்து நோயாளியை பார்த்தாரா என்பதை நோயாளியும் அவரது உறவினரும் உறுதி செய்து கொள்வது அவசியம். நோயாளியை முதன் முதலாக பார்த்த மயக்க மருத்துவரே நோயாளியின் அறுவை சிக்ச்சைக்கு மயக்கம் கொடுப்பது சிறந்ததாகும். ஏனென்றால் அவர் ஏற்கனவே நோயாளியை பரிசோதித்து இருக்கின்றார்.
.
அவ்வாறு பரிசோதிக்க வரும் மயக்கவியல் மருத்துவர் வேறு ஏதாகிலும் பரிசோதனை சொன்னால், கட்டாயம் அதை செய்ய வேண்டும். அந்த பரிசோதனையின் அடிப்படையில் மயக்கவியல் மருத்துவர், அறுவை சிகிச்சைக்கு தகுதியானவரா என்று சான்றழித்த பின்னர் (Fit for Surgery) அறுவை சிகிச்சை மேற்கொள்வதுதான் நோயாளியின் நலனுக்கு நல்லது.
.
பரிசோதனைக்கு வரும் மயக்கவியல் மருத்துவரிடம், நோயாளிக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் ஒளிவு மறைவின்றி கூறுவது நோயாளியின் கடமை மற்றும் அவரது உறவினர்களின் தார்மீக கடமையாகும். நோயாளியின் பிரச்சனைக்கேற்ப எந்த மாதிரியான மயக்கமருந்தை செலுத்த வேண்டும் என்று தீர்மானிப்பதில் அவை பெரு பங்கு வகிக்கும்.
.
அறுவை சிகிச்சை அரங்கில் எதிர்பாராதவிதமாக நடைபெறும் பிரச்சனைகளில் முற்றிலுாமாக நோயாளியை காப்பாற்ற போவது மயக்கவியல் மருத்துவரே. ஆகவே, அவரிடம் எந்தவித நோயையும் மறைக்ககூடாது.
.
மயக்கவியல் மருத்துவர், ”ஒரு வாரம் கழித்து மருந்து மாத்திரை சாப்பிட்டு திரும்பவும் செக்அப்-க்கு வாருங்கள் ” என்றால் எரிச்சல் படக்கூடாது. உதாரணமாக நோயாளிக்கு அதிக சளி, இருமல் இருந்தால், அதை மருந்து மாத்திரைகளினால் குறைத்துவிட்டு, நோயாளி முற்றிலும் குணமான பிறகு மயக்க மருந்து கொடுப்பதுதான் நோயாளியின் நலனுக்கு நல்லது.
.
மயக்கவியில் துறையை பற்றி அதிக விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், அரசு மருத்துவமனைகளில் மயக்கவியல் மருத்துவர்கள், ஒரு நோயாளியை ஒரு வாரம் கழித்து மருந்து சாப்பிட்டு வாருங்கள் என்றாலே நோயாளிகள் மிகவும் கோபப்படுகின்றார்கள். இதில் பெரிய பிரச்சனை என்றால், அறுவை சிகிச்சை மருத்துவர்கள் “மயக்கவயில் மருத்துவர் சரி என்றால் உடனே ஆபரேஸன் பண்ணிவிடலாம்“ என்று பொதுவாக கூறிவிடுவதால், மயக்கவயில் மருத்துவர் ஒரு வாரம் கழித்து மறு செக்கப்புக்கு வரச்சொல்லும்போது, நோயளியானவர் அவரது அறுவை சிகிச்சையானது மயக்கவியல் மருத்துவரால் தள்ளிப்போடப்படுகின்றது என்ற நிலைக்கு வந்து வடுகின்றார்கள்.
.
மயக்கவியில் மருத்துவர்கள், இன்னும் ஒரு வாரம் கழித்து மாத்திரை சாப்பிட்டு வாருங்கள் என்றோ, அல்லது மருததுவ கல்லுாரியில் சென்று இருதய சம்பந்தமாக பெரிய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு வாருங்கள் என்றால், நோயாளியின் நலனுக்காகவே மயக்கவியல் மருத்துவர் கூறுகின்றார் என்பதை உணர்ந்து அவர் அறிவுரையின்படி நடந்து கொள்ள வேண்டும்.
.
அறுவை சிகிச்சைக்கு முன்னர் ஆபரேஸன் தியேட்டருக்கு நல்ல நலத்துடன் சென்ற நோயாளி, ஆபேரேஸன் முடிந்து நல்ல முறையில் வெளியே வர ஒவ்வொரு மயக்கவியல் மருத்துவரும் அனைத்து முயற்சிகளும் எடுப்பார்கள். ஆகவே, மயக்கவியல் மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது மிக அவசியம்.
.
ஒரு மயக்கவியல் மருத்துவர், ஆபரேஸனை ஒரு வாரம் கழித்து வைத்து கொள்ளலாம் என்றால், நோயாளியின் உயிருக்கும், நலனுக்கும் அந்த மயக்கவியல் மருத்துவர் அதிக முக்கியவத்தும் கொடுக்கின்றார் என்று நினைவில் கொள்ள வேண்டும்.
.
வெளிநாடுகளில், நோயாளி எந்த மருத்துவமனையில் ஆபரேஸனுக்கு சென்றாலும், நோயாளியானவர் அவரது அனைத்து பரிசோதனைகளையும் எடுத்து சொன்று அந்த மருத்துவமனை சாராத மயக்கவியல் மருத்துவரிடம் “நான் அறுவை சிகிச்சைக்கு தயாரா?“ என்று தனியான ஒரு சான்றிதழ் வாங்கி கொள்வார். அந்த அளவிற்கு வெளிநாடுகளில் அறுவைசிகிச்சைக்கு முன்னர், மயக்கவியல் மருத்துவருக்கும் அவர் வழங்கும் சான்றிதழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
.
நடந்த சம்பவம்
நாகப்பட்டடிணத்தில் ஒருவர் வாசெக்டமி ஆபரேஸனுக்காக ரெடியாக இருக்கின்றார். பொதுவாது அறுவை சிகிச்சைக்கு முன்னர். நோயாளி பதட்டப்படக்கூடாது என்ற வகையில் சிறிது துாக்கம் வரும் வகையில் ஒரு ஊசி போடுவார்கள். இவருக்கு அவ்வாறு ஊசி போடச்செல்லும்போது, அந்த நர்ஸிடம் அவர் “ மயக்க மருத்துவர் வந்துவிட்டாரா? அவரிடம் நான் பேச வேண்டும். அதன் பின்னரே நீங்கள் மற்ற ஊசிகளை போடவேண்டும் என்று கூறிவிட்டார். பின்னர் மயக்க மருத்துவர் வந்தவுடன் மயக்க மருத்துவர் மயக்கவியில் படிப்பை எங்கு முடித்தார், தற்போது எங்கு பணிபுரிகின்றார் என்ற விபரங்களை கேட்ட பிறகே, பிற நடைமுறைகளை பின்பற்ற அனுமதித்தார்.
.
அறுவை சிகிச்சை அரங்கில் ஏற்படும் எதிர்பாரத விபரிதங்களில் இருந்து நோயாளியை காப்பாற்றுவதில் மயக்கவியல் மருத்துவர்தான் முழுப்பங்காற்றுபவர். ஆகவே, அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவர் கூறும் ஆலோசனைகளை நோயாளியின் நலனுக்காகவே கூறுகின்றார் என்று அவர் பேச்சிற்கு மதிப்பு கொடுக்க வேண்டியது நோயாளியின் நலன் கருதி அவசியமாகும்.

No comments:

Post a Comment