அரசு மருத்துவமனையில் நடக்கும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தவறானால் அதிக பட்ச இழப்பீடு ரூ.20,000
.
இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பிறகு ஒரு பெண் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் அதன் பின்னரும் கருத்தரித்ததால், மருத்துவ சேவை குறைபாடு என்று ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மீது இழப்பீடாக ரூ.3 இலட்சமும் மற்றும் மருத்துவ செலவாக ரூ.5000 கேட்டு வழக்கிடுகின்றார். இந்த வழக்கு இரண்டாம் மேல் முறையீட்டிற்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகின்றது. மாண்புமிகு நீத...ிமன்றமானது, G.O.Ms. No.183, Health and family Welfare department dated 11.9.2006 அடிப்படையில் ரூ.20000-மட்டுமே வழங்கப்படவேண்டும் அதனுடன் சேர்த்து ரூ.5000 மருத்துவ செலவிற்காக வழங்கப்படவேண்டும் என்று தீர்பளித்தது.

குறிப்பு – பெண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் 100 சதவீதம் உத்திரவாதம் அளிக்க முடியாது. அதற்காகத்தான், அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அதன் பின் வரும் மாதங்களில் மாதவிடாய் வரவில்லை என்றால், உடனே அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவரை தொடர்பு கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி, அதை முற்றிலும் நோயாளி புரிந்து கொண்டதற்கு சம்மதமாக, அவர்களிடம் இருந்து எழுத்துமூல சம்மதத்தையும் பெற்று கொள்கின்றார்கள்.
.
ஆனாலும், பலர் அறுவை சிகிச்சைக்கு பிறகு மாதவிடாய் வரவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரையின் படி மருத்துவமனைக்கு வந்து மகப்பேறு மருத்துவரை சந்திப்பதில்லை.
.
மருத்துவர்களின் அறிவுரைகளை மதித்து நடப்பது நோயாளியின் கடமையாகும்.
.
முழு விபரத்திற்கு பார்க்க – 2010 (1) MWN (civil) 720

No comments:
Post a Comment