Pages

Monday, 25 April 2016

அரசு மருத்துவமனை பக்கமே போகமால் அரசு மருத்துவமனையை குறை சொல்லும் கூட்டம்

அரசு மருத்துவமனை பக்கமே போகமால் அரசு மருத்துவமனையை குறை சொல்லும் கூட்டத்தை என்ன சொல்ல? இன்று அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆபரேஷன் தியேட்டர்களில் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும் விதமாக தினமும் எடுக்கும் நடவடிக்கையை போன்று எந்த தனியார் மருத்துவமனைகளிலும் செய்யப்படுகின்றதா என்று ஐயமாகவே உள்ளது. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் முறையாக swab எடுத்து microbiology Dept இருந்து சான்றிதழ் பெறுவது அரசு மருத்துவமனை மட்டுமே.
.
அரசு மருத்துவமனைகள் மோசமாக சில இடங்களில் இருப்பதற்கு மக்களே காரணம்.... அரசு மருத்துவமனைதானே என்று கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்று பல தவறான நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் உயர்தர கார்ப்பரேட் மருத்துவமனையில் காலடி வைத்ததும் தனது வாலை சுருட்டி அடக்கி கொண்டு ஓராமாக உட்கார்ந்து கொள்வார்கள். அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் “இது நம்ம் மருத்துவமனை...நாம்தான் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்“ என்று நினைத்து செயல்பட்டால், ஒவ்வொரு அரசு மருத்துவமனையம் கார்ப்பரேட் மருத்துவமனை போல காட்சியளிக்கும்.
.
ஒரு விஷவண்டு கடித்து உடம்பில் தோல் தடுப்பு மற்றும் அரிப்பு ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றால், அவர்கள் உங்களை வரிசையில் உட்கார வைத்து மருத்துவர் கூப்பிடுவதற்குள், சொறிந்து சொறிந்து களைத்து போவீர்கள். ஆனால், ஒரு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றால், சில நிமிடங்களில் மருத்துவர் உங்களுக்கு ஒரு அவில் ஊசி போட்டு, சொறியல் மற்றும் தோல் தடுப்பில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். தமிழகத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் கிடைக்கும் உடனடியான மருத்துவ சேவை எந்த தனியார் மருத்துவமனையிலும் கிடைக்காது என்பதை உறுதியாக சொல்கின்றேன். (அனுபவத்தில் எழுதியது - ஒரு முறை கம்பளி புச்சி கடித்து தோல் அரிப்பு ஏற்பட்டது. அதற்கு அரசு மருத்துவமனையில் சென்ற அடுத்த 5 நிமிடத்தில் அவில் ஊசி போட்டார்கள். குணமடைந்தேன்.)

No comments:

Post a Comment