மருத்துவ சேவை குறைபாடு வழக்கில் கால வரையறை
(Limitation period in Medical Negligence cases)
.
V.N. SHRIKHANDE (DR.) v. ANITA SENA FERNANDES IV (2010) CPJ 27 (SC)
...

மருத்துவ சேவை குறைபாடு வழக்குகளில் வழக்கு மூலத்தை ஒரு குறிப்பிட்ட வரையறையை (சம்பவத்தை கொண்டோ அல்லத நேரத்தை) கொண்டு மட்டுமே தீர்மானிக்க முடியாது. பின்னால் ஏற்படும் விளைவுகளை கொண்டும் தீர்மானிக்கலாம்.
.
Cause of Action' in Medical negligence
No strait-jacket formula can be applied for determining cause of action – The cause of action will be deemed to have arisen on date when negligence was done - If effect is latent, cause of action will arise on date when patient discovers harm.
.
வழக்கு மூலம் என்றால் என்ன? ஒரு வழக்கை தாக்கல் செய்வதற்கு வழக்கு மூலம் என்பது அவசியமானதாகும். ஏனென்றால் வழக்கு மூலம் உருவான தேதியிலிருந்துதான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அதிக பட்ச கால அளவானது கால வரையறைச் சட்டம் 1963-ன் படி தீர்மானிக்கப்படும்.
.
.
உதாரணமாக அ என்பவர் புரோநோட்டு பெற்றுக்கொண்டு ஆ-க்கு 15.3.2010 அன்று பணம் கொடுக்கின்றார். ஆ பணத்தை திருப்பி அளிக்கவில்லை என்றால், அ அந்த பணத்தை நீதிமன்றத்தில் வழக்கிட்டு பெற, 14.03.2013 தேதிக்குள் வழக்கு தாக்கல் செய்து விடவேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு வழக்கிற்கும் சட்டமானது ஒரு கால வரையறையை தீர்மானித்துள்ளது. (ஆனாலும், இந்த சட்டத்தின் பிரிவு 5-ன படி கால தாமதத்தை மன்னிக்கும் வகையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதிமன்றம் அனுமதியளிக்கும் பட்சத்தில் கால வரையறைக்கு பின்னரும் வழக்கை தாக்கல் செய்யலாம்)
.
இப்போது மருத்துவ சேவை குறைபாடு வழக்கிற்கு வருவோம். உதாரணமாக, ஒரு மருத்துவர் 15.03.2010 அன்று அறுவை சிகிச்சை செய்கின்றார். நோயாளிக்கு 15.03.2015 அன்று வயிற்கு வலி ஏற்படுகின்றது. ஸ்கேன் செய்து பார்க்கும் போது, முன்னர் அறுவை சிகிச்சை செய்யும்போது ஒரு வயிற்றில் பஞ்சு (Foreign object - Sponge) விடப்பட்டதாக அறிக்கை கொடுக்கின்றார்கள். உடனே அதை மற்றொரு மருத்துவமனையில் 15.03.2015 அன்று அறுவை சிகிச்சை செய்து அகற்றுகின்றார்கள். இப்போது நோயாளி முதல் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது மருத்துவ சேவை குறைபாடு என 15.04.2015 அன்று வழக்கிடுகின்றார். முதல் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது வழக்கிடும் காலம் வரையறை 14.03.2013 அன்றே முடிவடைந்து விடுகின்றதா (மூன்று வருட காலம்) (இரண்டு வருட காலம் - நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் புகார் அளிப்பதற்கு) எனற கேள்வி எழுகின்றது?
.
ஆனால், நோயாளியானவர் முதல் மருத்துவர் மீது 14.03.2018 வரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் (நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றத்தில் 14.03.3017வரை புகார் தாக்கல் செய்யலாம்). ஏனெனில் வழக்கு மூலம் 15.03.2010ல் இருந்து 15.05.2015 வரை தொடர்கின்றது. மேலும் அவருக்கு முதல் அறுவை சிகிச்சையின் காரணமாக எப்போது அவருக்கு பிரச்சனை ஏற்படுகின்றதோ அன்றிலிருந்தே கால வரையறை கணக்கிடப்படுகின்றது.
.
இதைத்தான் உச்சநீதிமன்றம் மேற்படி தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.
A case related to Foreign Object - Sponge: [III (2013) CPJ 191 (NC)]

No comments:
Post a Comment