Pages

Thursday, 2 March 2017

உயில் மாதிரி படிவம்.

உயில் மாதிரி படிவம். உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள். இன்றே உங்கள் குடும்ப நலனிற்காக உயில் எழுதுங்கள்.
.
(பொதுவாக உயில் எழுத எல்லோருக்கும் விருப்பம்தான்.. ஆனால் ஷெட்யுலில் குறிப்பிடப்படவேண்டிய தகவல்களை தேடி எடுத்து வைத்து கொண்டு எழுதவதில்தான் சிறிது சோம்பேறித்தனம் அனைவரிடமும் சற்று தலை துாக்கும். ஒரு ஞாயிற்று கிழமையை இதற்காக ஒதுக்கி வைத்து ஒரு முறை எழுதுங்கள் அதன் பிறகு, பிந்தைய நாட்களில் மாற்றம் செய்வது எளிதான வேலையாகத்தான் இருக்கும்)
.
அடுத்த ஞாயிற்றுக் கிழமையை உங்கள் குடும்பநலன் கருதி உயில் எழுவதற்காக ஒதுக்கி வையுங்கள்.
(உயில் எழுதும்போது சொத்து விபரம் ஏதாகிலும் தப்பாகிவிடுமோ என்ற பயம் தேவையில்லை. உதாரணமாக மதுரை கே.கே.நகரில் எனது பெயரில் உள்ள வீடு என்பதே சொத்து விபரத்திற்கு போதுமானது. அதைத்தாண்டி அந்த சொத்து விபரத்தைப் பற்றி முழு விளக்கமும் அளிக்கலாம் அதாவது சர்வே எண். வீட்டு எண் மற்றும் வீட்டிற்கான வரி எண் ஆகியவை)

குறிப்பு - எழுதப்படும் சொத்துக்களில் ஏதாகிலும் வில்லங்கம் (அடைமானத்தில் இருந்தால்) அதன் முழுவிபரத்தையும் குறிப்பிடுங்கள். 


1 comment: