Pages

Friday, 9 June 2017

Cap on Mediclaim

பொதுக்காப்பீடு என்பது ஒருவருக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதாகும். இப்போது மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஒரு பிரச்சனையை நாம் சந்திக்க இருக்கின்றோம். 
.
இருதய அடைப்பை சரி செய்யும் Angioplasty அதன் பின்னர் ஸ்டென்ட் வைக்கும் முறைக்கு 2 இலட்சங்கள் இதுவரை செலவானது. அதை மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் கொடுத்து வந்தது. தற்போது, மத்திய அரசாங்கம் இவ்வாறான ஸ்டென்டிற்கு அதிக பட்ச விலை ரூ.29,600-க்கள் இருக்கவேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் “நாங்கள் ஸ்டென்டின் விலைக்கு ரூ.29,600 மட்டுமே” தருவோம் என்று அடம் பிடிக்கின்றார்கள். சமீபத்தில் ஒரு காப்பீடு நிறுவனம் தனது வாடிக்கையாளருக்கு “நீங்கள் நேரடியாக பணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டால், நாங்கள் ஸ்டென்ட் விலை ரூ.29,600 மட்டுமே தருவோம்“ என்று கூறியுள்ளார்கள். 
.
இவ்வாறு இந்த ஸ்டென்டிற்கு National Pharmaceutical Pricing Authority (NPPA)அதிக பட்ச விலை நிர்ணயம் செய்தபிறகு ஒரு மருத்துவர் பத்திரிகையில் கூறியது
“It is good that more people will now be able to afford this life-saving device; however, in the long run I see high-quality stents disappearing from our market because of the cap. It would have been a better idea to divide stents into different categories, including specialised stents, and then fix the price. These devices can’t be divided into just two broad categories,” says senior cardiologist (தமிழாக்கம்) ”இவ்வாறனா குறைந்த விலை நிர்ணயக்கபட்டதால், தரமான ஸ்டென்டுகள் இந்திய சந்தையில் இருந்து மறைந்து போகும். இரண்டு தரங்களை மட்டும் நிர்ணயக்காமல் பல தரங்கள் நிர்ணயம் செய்து அதன்படி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார். 
.
இவ்வாறான ஸ்டென்டுகளில் bio-absorbable stent விலை அதிகமானது. இப்பொழுது மருத்துவ காப்பீடு வைத்திருப்பவருக்கு உள்ள இரண்டு வழிகள். 1) ரூ.29,600 மதிப்புள்ள ஸ்டென்ட் பொருத்த வேண்டும் 2) அதிக விலை கொடுத்து வேறு வகையான ஸ்டென்ட் பொருத்தினால் அதற்கான விலை வித்தியாசத்தை கையில் இருந்து கொடுக்க வேண்டும் ( இனிவரும் காலங்களில் அதிக தரமான ஸ்டென்ட் இந்தியாவில் கிடைக்குமா என்பது அடுத்த கேள்விக்குறி.... இல்லையேல் அந்த ஸ்டென்டிற்காக வேறு நாட்டிற்கு மருத்துவத்திற்காக செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்)
.
இப்போது எனது கேள்வி மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்கு. 
.
அரசு சொல்லிவிட்டது என்பதால் நாங்கள் ரூ.29,600 மட்டும்தான் ஸ்டென்டிற்கு தரமுடியும் என்று அடம் பிடிப்பது சரியா? காப்பீடு நிறுவனத்தின் கடமை காப்பீட்டாளருக்கு ஏற்பட்ட இழப்பினை சரிசெய்வதுதான். 
.
இதை வேறு உதாரணத்துடன் பார்ப்போம். இன்று முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் பல அரசு மருத்துவமனைகளில் கர்ப்பபை நோய்களுக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்கைள் செய்யப்படுகின்றன. அதற்கு காப்பீடு நிறுவனம் ரூ.15000 வழங்குவதாக வைத்து கொள்வோம். ஒரு காப்பீட்டாளருக்கு தனியார் மருத்துவமனையில் அதே அறுவை சிகிச்சை செய்யப்டும்போது, அதிக பட்சமாக ரூ.15,000 மட்டுமே தருவேன் ஏனெனில் இந்த அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் ரூ.15,000 மட்டுமே நடைபெறுகின்றது என்று காப்பீட்டு நிறுவனத்தால் கூறினால், அது சரியா?
.
அரசு மருததுவமனையில் பயன்பாட்டாளர் எந்தவித தொகையும் நேரடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தவில்லை ஆனால் தனியார் நிறுவனத்தில் ஒருவர் 10 இலட்ச மருத்துவ காப்பீட்டிற்கு வருடம் ரூ.15,000 ப்ரிமியம் செலுத்தி காப்பீடு எடுத்துள்ளார், இன்று பெரிய தனியார் மருத்துவமனைகளில் கர்ப்பபை அறுவை சிகிச்சைக்கு ரூ.1 இலட்சம் வரை கட்டணம் வசூலிக்கும்போது, எப்படி ரு.15,000 மட்டும் தரமுடியும் என்று சொல்ல முடியும். அதுபோலத்தான், Angioplasty செய்து ஸ்டென்ட் வைக்கும் நிலையில், அவர் எடுத்திருக்கும் காப்பீடு அளவிற்கான மருத்துவ செலவு அனைத்தையும் செட்டில் பண்ணுவதே சரியானதாகும். 
.
காப்பீடு என்பது காப்பீட்டாளருக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதாக இருக்க வேண்டுமே தவிர, அதில் ஒவ்வொன்றிலும் ஒரு Cap வைப்பது என்பது சரியானது அல்ல. இன்று மருத்துவ காப்பீடு எடுப்பவர்கள் எல்லாம், பெரிய மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ளத்தான் காப்பீட்டை எடுக்கின்றார். அதில் தேவையற்ற Cap வைப்பது என்பது காப்பீடு செய்வது என்பதையே கேள்வி குறியாக்கிவிடும். 
.
காப்பீட்டாளரின் முழு செலவை ஏற்றுக்கொள்ளாத நிறுவனத்திடம் மருத்துவ காப்பீடு செய்வது என்பது வீணாணது. இனி வரும் காலங்களில் காப்பீடு செய்யும்போது, எந்தவித Cap இல்லாமல் அனைத்து மருத்துவ செலவுகளையும் கொடுக்கும் காப்பீட்டு நிறுவனங்களை தேர்ந்தெடுங்கள்.

No comments:

Post a Comment