1998ம் ஆண்டு வணிக
கப்பலில் எனது பணிக்கான காண்ரக்ட் முடிந்தது. இந்தியா திரும்பி வர எனது கப்பல் கம்பெனி
எனக்கு மதியம் 3.00 மணி விமானத்திற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை 12 மணி அளவில் என்னை ஏர்போட் அழைத்து செல்ல
வேன் வந்தது. வேன் டிரைவர் என்னை US Port Emigration அலுவலகம் கொண்டு சென்று Exit என்று
எனது பாஸ்போர்ட்டில் அடித்து வாங்கிய பிறகுதான், என்னை ஏர்போர்டில் இறக்கிவிடவேண்டும்.
துறைமுக Exit Stamping இல்லாமல் என்னால் விமான ஏறமுடியாது.
.
வேன் டிரைவர் என்னுடன்
பேசிக்கொண்டே வந்ததில், துறைமுக Emigration Office செல்ல மறந்துவிட்டார். விமான நிலையம்
அருகே வந்தபிறகுதான் தன் தவற்றை உணரந்து, வேனை Port Emigration Office-க்கு திருப்பினார். Port Emigration Office-க்கு வந்து சேரும்போது மணி
1 மணி. அந்த நேரம் அவர்களது அலுவலக lunch
time என்று போர்டு வைத்திருந்தார்கள். யாரும் இல்லை. அவர்கள் உணவு அருந்தி முடித்தவுடன் வந்து எனக்கு
stamping பண்ணினால் அதற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு விமான நிலையம் சென்று விமானத்தை சரியான நேரத்தில் பிடிக்க வாய்ப்பில்லை.
.
வேன் டிரைவர் உடனே
உரத்த குரலில் ஆபிஸரை அழைத்தார். உள்ளே இருந்து ஒரு லேடி ஆபிஸர் வந்தார். அவரிடம் எனது
வேன் டிரைவர் தன் தவற்றை ஒத்துகொண்டார். ஒரு
நிமிடம் என்று கூறி, தனது சாப்பிட்ட கையை கழுவிவிட்டு, எனது பாஸ்போர்ட்டில்
Stamping பண்ணிவிட்டு என்னிடம் Bon voyage என்று கூறி அந்த அதிகாரி சாப்பிட சென்றுவிட்டார்.
.
அப்போது நான் நினைத்தது....இந்தியாவில்
இது சாத்தியமா? இந்தியாவில் ”எனது சாப்பாட்டு நேரம்.. அதை முடித்துவிட்டுதான் வருவேன்”
என்பார்.
.
தமிழகத்தில் உள்ள
டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் இருந்து Transcript வாங்க வேண்டியிருந்தது.
நான் செல்லும் நேரம், எனக்கு Transcript வழங்க வேண்டியவர், மதிய உணவு அருந்தி கொண்டிருந்தார்.
நான் அவரை பார்த்து “ சாரி மேடம். இது உங்கள் lunch time போல். எத்தனை மணிக்கு வரட்டும்?
என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உடனே தனது லஞ்ச் பாக்ஸை மூடி வைத்துவிட்டு, சார் ஒரு
நிமிடம் என்று சொல்லி தனது கைகளை கழுவிவிட்டு வந்து, அந்த Transcript காப்பிகளை கையில்
எடுத்து கொடுத்தார்.
.
அந்த நிமிடத்தில்....
சில கனங்கள் 1998-ம் வருடம் எனக்கு நடந்த மேற்கூறிய நிகழ்வு மனதில் ஓடியது. அமெரிக்காவில்
நடப்பது இந்தியாவிலும் நடக்கும் வகையில் இந்தியாவில் பணியாளர்கள் உள்ளார்கள் என்பதை
அறிந்ததும் மிக மகிழ்ச்சியாக இருந்தது.
No comments:
Post a Comment