மாவட்ட
அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகா அரசு மருத்துவமனையில் பணிபுரியும்
மருத்துவர்களே,
.
உங்கள்
மருத்துவமனையில் ஒரு துறையில் சிறப்பு
மருத்துவர்கள் இருந்தால் மட்டும் போதாது, அங்கு
அந்த நோய்க்காக சிறப்பு துறை அங்கு
இயங்கி வரவேண்டும்.
.
உதாரணமாக
உங்கள் மருத்துவமனையில் Department of
Cardiology இல்லையென்றால்,
இதய சம்பந்தமான நோய்களை கொண்டவர்களை உங்கள்
மருத்துவமனையில் பொது வார்டில் வைத்து
சிகிச்சை அளிக்காதீர்கள். உடனடியாக அருகில் உள்ள அரசுக்கல்லுாரி
மருத்துவமனைக்கு 108 மூலம் மாறுதல் செய்யுங்கள்.
.
“சமையல்காரர்
இருந்தால் மட்டும் போதாது, சமைப்பதற்கு,
சமையல் பாத்திரங்கள் மிக அவசியம்“.
.
இது சம்பந்தமான
ஒரு வழக்கின் தீர்ப்பு
.
Decided
on 6.10.2016
NATIONAL CONSUMER DISPUTES
REDRESSAL COMMISSION, NEW DELHI
.
A. NAGESWARA RAO Vs. ESI HOSPITAL & ANR.—Respondents
Revision Petition No. 61 of 2010 from Order dated
30.10.2009 in First Appeal No. 957/2008 of Andhra Pradesh State Consumer
Disputes Redressal Commission, Hyderabad
ஓரு மருத்துவர் தன்னை சிறப்பு மருத்துவர்
என்று தன்னை கூறிக்கொள்ள வேண்டும்
என்றால் அவர் அந்த துறையில்
சிறப்பு பட்டம் பெற்றவராக இருக்க
வேண்டும். உதாரணமான M.D. General Medicine படித்தவர்கள் தங்களை இதய நோய்
நிபுணர் (Cardiologist) என்று அழைத்து கொள்ளவோ,
மருந்து சீட்டில் போடவே கூடாது. இந்திய
மருத்துவ கவுன்சில் விதி 7.20ன் படி ” A Physician shall not claim to be specialist unless he has
special qualification in that branch”
.
.ஒரு துறைச்சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அந்த துறையில்
சிறப்பு மருத்துவம் படித்து மருத்துவர் இருந்தால் மட்டும்
போதுமானதா? இல்லை.
.
.அவ்வாறு
சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் அந்த சிறப்பு மருத்துவர்
சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளும்
இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு இதய அறுவை
சிகிச்சை நிபுணர், மாரடைப்பு வந்த இதய நோயாளிக்கு
சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மெடிக்கல்
வசதிகளும், Angiography செய்யும் வசதிகள் இருக்கவேண்டும். அந்த
மருத்துவமனையில் வசதிகள் இல்லையெனில், உடனடியாக
நோயாளியை அவருக்கு முழு சிகிச்சை அளிக்கும்
வகையிலான பெரிய மருத்துவமனைக்கு உடனடியாக
மாற்றம் செய்யப்படவேண்டும். தவறும் பட்சத்தில் அது
மருத்துவ சேவை குறைபாடாகும்.
.
.தீர்ப்பின்
முக்கியமான பகுதி.
“ Looking at the version of the OPs themselves, it becomes
clear that they should have referred her to a super-specialty hospital, where
patient could be given proper treatment under the care of some specialist in
Cardiology. On the other hand, they kept the patient admitted in the general
ward of their own hospital, and they have admitted that there was no Department
of Cardiology at their hospital
.
.
எனது தனிப்பட்ட கருத்து
.
.வருங்காலத்தில்
தனிநபர் மருத்துவ சேவை (Individual Private
Practice) முற்றிலும் அழிந்துவிடும். கார்ப்பரேட் மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனைகளில்
மட்டுமே மருத்துவ வசதி கிடைக்கும். First Generation Doctors –களுக்கு அனைத்து வசதிகளையும்
கொண்ட மருத்துவமனையை படித்து முடித்தவுடன் அமைப்பது
மிக கடினம். மருத்துவம் படிக்க
நினைக்கும் மாணவர்களே, நாளை கார்ப்பரேட் மற்றும்
அரசு மருத்துவமனைகளி வேலை செய்ய உங்களை
தயார் படுத்திகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment