Pages

Wednesday 28 June 2023

சான்றிதழ்கள் பிரிண்ட் செய்வதற்கு லேசர் பிரிண்டர்களை தவிர்க்க வேண்டும்.

 பத்திரங்கள், பள்ளி சான்றிதழ்கள் போன்றவற்றை லேசர் பிரிண்டர் பயன்படுத்தி அச்சு எடுக்கக்கூடாது

.
1) பிளாஸ்டிக் உறையில் அந்த ஆவணங்களை இட்டு வைக்கும்போது, லேசர் பிரிண்டர் உதவியுடன் ஆவணங்களில் அச்சாகும் எழுத்துகள் பிளாஸ்டிக்கில் ஒட்டிகொள்ளும் என்பதால், ஆவணங்களை பிளாஸ்டிக் உறையிலிருந்து எடுக்கும்போது, பாதி எழுத்துகள் ஆவணங்களில் இருக்காது.
2) லேசர் பிரிண்டர் உதவியுடன் அச்சாகும் ஆவணங்களில் எழுத்துகள் காலப்போக்கில் ஆவணத்திலிருந்து உதிர்ந்துவிட ஆரம்பிக்கும்
3) ஆவணங்கள் மடக்கப்பட்டாலோ, கசக்கப்பட்டாலோ, அந்த இடங்களில் லேசர் பிரிண்டர் உதவியுடன் அச்சாகும் எழுத்துகள் உதிர ஆரம்பிக்கும்.
.
இதை தவிர்க்க, Dot Matrix Printer அல்லது inkjet Printer-களை உபயோகப்படுத்துவதான் மூலம், எழுத்துகளின் அச்சானது அதிக காலம் ஆவணங்களில் எந்தவித பிரச்சனையில்லாமல் இருக்கும்.
.
இன்று பத்திர பதிவு துறையில் உள்ள பெரும்பாலன ஆவண எழுத்தர்கள் லேசர் பிரிண்டர்களை உபயோகப்படுத்தாமல், இன்ங்ஜெட் பிரிண்டர்களின் உதவி கொண்டு ஆவணங்களை பிரிண்டு எடுக்கின்றார்கள். ஆனால், இன்றும் பல பல்கலைக்கழகங்களில் லேசர் பிரிண்டர் உபயோகப்படுத்தி அச்சு எடுத்து சான்றிதழ்களை வழங்கி வருகின்றார்கள். கல்லுாரி சான்றிதழ்களானது பல வருடங்கள் மாணவர்களின் உபயோகத்திலிருக்கும் ஆவணம் என்பதால், சான்றிதழ்களை அச்சடிக்க லேசர் பிரிண்டர் உபயோகப்படுத்துவதை தடை செய்து, இன்ஜெக்ட் பிரிண்டர் உதவியுடன் சான்றிதழ்களை அச்சு செய்ய வேண்டும்.
All reactions:
A PS Raj, Advocates Nithya Nithya and 36 others
3 comments
4 shares
Like
Comment
Share

No comments:

Post a Comment