Pages

Wednesday 28 June 2023

செல்லும் ஊரில், உள்ளுர் நபர்களிடம் விசாரித்த பின்னர் நல்ல உணவங்களில் சாப்பிடுங்கள்.

 

சமீப காலங்களில் உணவு பாதுகாப்பு துறையிலிருந்து பல ஹோட்டல்களில் உள்ள இறைச்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதை காண முடிகின்றது. எமது நகர், பிரியாணிக்கு பெயர் போனது என்று அனைவருக்கும் தெரிந்ததே. பிரியாணி கடைகளில் இரவு 8.30 சென்றால், சைட்-டிஸ் முடிந்துவிட்டது என்று கூறுவார்கள். 9.30க்கு சென்றால் காலி பிரியாணிதான் இருப்பதாக கூறுவார்கள். இரவு 10 மணி ஆகிவிட்டால், பிரியாணி முடிந்துவிட்டது என்ற பதில்தான் வரும். அதாவது, கடை மூடும்போது, மிச்சம் எதுவும்இருக்காது.

.

இன்று நகரங்களில் உள்ள பல ஹோட்டல்களில், ஐஸ்கிரிம் கடைகளில் வைத்திருப்பது போன்று பெரிய ப்ரிசர்கள் வைத்துள்ளார்கள். அவர்கள் எதையும் வீணாக்குவதில்லை. இவ்வாறு மீதம் இருப்பதை, ப்ரிசரில் வைத்து மறுநாள் வழங்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, எந்த கடைகளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அனைத்து உணவு வகைகளும் தீர்ந்துவிட்டது என்று சொல்கின்றார்களே அந்த கடைகள்தான் மாமிச உணவு உண்பதற்கான சிறந்த உணவகமாகும்.

.

யுடிப்பில் சொல்வதின் அடிப்படையில், உணவகங்களை தேடிச்சொன்று சாப்பிடுவதை தவிருங்கள்.  ஒரு புதிய ஊருக்கு சென்றால், அந்த ஊரில் குறைந்தது 5 நபர்களிடம் அங்குள்ள நல்ல உணவகத்தை பற்றி விசாரித்த பிறகே அந்த ஹோட்டலுக்கு செல்லுங்கள். 

No comments:

Post a Comment