Pages

Wednesday 28 June 2023

சமூக வளைத்தளங்களில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பதிவிடும் நபர்கள் மீதான நடவடிக்கை

 பல சமூக வளைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் நமது நாட்டின் இறையான்மைக்கு எதிராகவும், தனிப்பட்ட நபர்களின் உரிமைக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கின்றது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நமது நாட்டின் இறையான்மைக்கும், பிறரின் தனிப்பட்ட உரிமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். யுடியுப் சேனல் தொடங்கிவிட்டோம், அதற்கு அதிக அளவிலான subscribers பெற்று அதன் வழியாக பணம் பெற வேண்டும் என்று தனிநபர்களுக்கு எதிரான அவதுாறான கருத்துகளை எந்தவித ஆதாரமின்றி பதிவு செய்கின்றார்கள். இது முற்றிலும் தடுக்க வேண்டியதாகும். பல சமூக வளைத்தளங்களின் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் ஒருவரின் மொபைல் துணையுடன் உருவாக்கப்படும் நிலையிலும், அந்த கணக்குகளானது உரிமையாளர் விபரம் தெரியாத அளவிற்கு போலியான பெயரில் உருவாக்கப்படுகின்றது.

.
மத்திய அரசானது உடனடியாக
1) சமூக வலைத்தளங்களின் விபரம் அனைத்தும் அதன் உரிமையாளரின் பெயர், அவரது மொபைல் எண் உட்பட ஒருங்கிணைந்த மத்திய அமைப்பிடம் பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பதியப்பட்ட உரிமையாளர்களின் தகவலை, ஒருவரின் தனிப்பட்ட நபரின் உரிமை பாதிக்கபடும்போது, அவர் உரிய காரணத்தை சுட்டிக்காட்டி கோரினால், பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து விபரங்களையும் வழங்க வேண்டும்.
2) அனைவரது மொபைல் எண்களின் முழு விபரங்களை, முகவரி உட்பட யவரும் பார்க்கும் வகையில் TRAI இணையத்தளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும். இதனால் மொபைல் எண் கொண்டு நடக்கும் அனைத்து மோசடிகளும் கட்டுக்கொள்ள கொண்டுவர ஏதுவாக இருக்கும். (30 வருடங்களுக்கு முன்னர் Telephone Directory-ல் அனைத்து தொலைபேசி எண்கள், யவரது பெயரில் எந்த முகவரியில் இருக்கின்றது என்ற விபரம் வழங்கப்பட்டிருக்கும். இன்று அதுபோன்ற விபரங்களை தற்போது TRAI வழங்குவது என்பது மிக இலகுவானதாகும்.
3) சமூக வலைத்தளங்களில் இறையான்மைக்கு எதிராகவே, தனிப்பட்ட நபரின் உரிமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான பதிவுகளை இடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி அதிகார அமைப்பினை உருவாக்க வேண்டும்.
All reactions:
A PS Raj, Rachinn Rachinn Rachinn and 9 others

No comments:

Post a Comment