Pages

Friday, 26 June 2020

தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கீழ் கண்ட விடயங்களுக்கு தகவல் தர தேவையில்லை - சரியா?


*தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கீழ் கண்ட விடயங்களுக்கு தகவல் தர தேவையில்லை என்று வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தி உலா வருகின்றன. அவைகள் சரியானதுதானா என்று  வரிசைப்படி பார்ப்போம்.* 


*1.துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை*

சரிதான். தஉச அமலுக்கு வந்த 120 நாட்களுக்குள் பிரிவு 4(1)(b)-ல் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் ஒவ்வொரு அதிகார அமைப்பும் தானகவே முன் வந்து தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை பல அரசு துறைகளில் வெளியடப்படவில்லை. அவ்வாறு வெளியிட்டிருந்தால், ஒரு குடிமகன் ரூ.10 கட்டணமாக செலுத்தி, பதிவு தபாலுக்கு ரூ.25 செலவழிக்க தேவை ஏற்படாது.


*2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.*

சரி.


*3. கோப்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய காலம் முடிந்து, / அழிக்கப்பட்டிருப்பின் தெரிவிக்க வேண்டியதில்லை.*

கோப்புகள் அழிக்கப்பட்டிருந்தால், எந்த தேதியில் அந்த கோப்புகள் அழிக்கப்பட்டன என்ற விபரத்தை வழங்க வேண்டும். தமிழ்நாடு தகவல் ஆணையம் பல முறையீடுகளில்,  கோப்புகள் அழிக்கப்பட்டிருந்தால், ரூ.50 பத்திரத்தில் பொது தகவல் அலுவலர் கோப்புகள் அழிக்கப்பட்டன என்று உறுதிமொழி வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


*4. கேள்விகளாய் இருந்தால் பதில் தெரிவிக்க வேண்டியதில்லை*

முற்றிலும் தவறு.  கேள்விகளாக தகவல்களை கேட்பதில் தடையேதுமில்லை. தஅஉ சட்டத்தில் எங்கும் தகவல்களை இப்படித்தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யப்படவில்லை. மாறாக *ஏன்* என்ற கேள்வியை எழுப்பி காரணம் அறிய தஅஉ சட்டத்தில் வழி வகையில்லை என்று கோவா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் எடுத்துரைத்துள்ளது.


*5 கேட்ட தகவலுக்கான கோப்பு இருந்தால் நகலாக வழங்கலாம்.*

சரி.*


*6. நாமாக விளக்கமோ நாம் அறிந்தவற்றையோ கூறக் கூடாது.*

*7. தெளிவுரைவிளக்கம்மொழிபெயர்ப்பு செய்து தர வேண்டியதில்லை.*

*8. கோரிக்கைபுகார்யூகம் அடிப்படையிலான கேள்விகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.*

பொது தகவல் அலுவலர் தனது சொந்த விளக்கம் அளிக்கக்கூடாது. ஆனால், அலுவலகத்தில் கோரிய தகவல்கள் பொருண்மைகளாக (Material fact) இருக்கும் பட்சத்தில் அவற்றை வழங்கியே ஆகவேண்டும். ஆனால் யூகமான கேள்வி (Hypothetical Questions) பதில் அளிக்க வேண்டியது இல்லை.  புகாருக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை ஏனெனில் அவை காரணம் அறிபவையாக இருக்கின்றது.


*9. மனுதாரர் முன்பு கொடுத்த சாதாரண மனுவைக் கேட்டால்  தெரிவிக்க வேண்டியதில்லை.*      

தவறு. தகவல் எந்த வடிவத்தில் இருந்தாலும் கொடுக்க வேண்டும். அது மனுதாரரின் புகாராக/மனுவாக இருந்தாலும், அதன் நகல் கோரினால் ரூ.2 ஒரு பக்கத்திற்கு பெற்றுக்கொண்டு வழங்க வேண்டும்.      


*10. மனுதாரர் கேட்கும் படிவத்தில் தர வேண்டியதில்லை*

*11. பல்வேறு கோப்புகளை தொகுத்து தர வேண்டியிருப்பின்விதிப்படி தொகுத்து தர வேண்டியதில்லை.*

சரி. ஆனால், தகவல்கள் எந்த வடிவத்தில் உள்ளதோ அதை மனுதாரருக்கு அறிவுறுத்தி, அந்த வடிவத்திற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.


*12. ஏன் எப்படிஎங்கு எதனடிப்படையில் போன்ற கேள்விகளுக்கும்ஆம் எனில் பதில் ,இல்லை எனில் பதில் போன்ற உபகேள்விகளுக்கும் பதில் தர வேண்டியதில்லை*

ஏன் என்ற கேள்விகளுக்கு மட்டுமே பதில் மறுக்கலாம். உபகேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடாது என்று தஅஉ சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. கோரும் தகவல்கள் பொருண்மைகளாக அரசு அலுவலகத்தில் இருந்தால் அவற்றை வழங்கியே ஆகவேண்டும்.


*13. சாதாரண திட்டங்களில் தந்த மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்க முடியாது*

தவறு. அலுவலத்தில் நடைபெறும் அனைத்து நடைமுறைகளையும் தெரியப்படுத்த வேண்டும். அதில் சாதாரண மற்றும் அசாதராண என்று எங்கும் பிரித்து பார்க்க தஅஉ சட்டத்தில் இடமில்லை.


*14. மனுதாரருக்காக வேறொருவர் கேட்க கூடாது (வக்கீல் தன் கட்சிக்காரருக்காக)*

சரி.


*15. மூன்றாம் நபர் குறித்த விபரம் நமது அலுவலக பணியாளர் பற்றிய எந்த விபரமும் தர வேண்டியதில்லை.(சம்பளம்கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை) மனைவி கூட மூன்றாம் நபர்*

தவறு. தஅஉ சட்டத்தில் பிரிவு 4(1)(b) ல் குறிப்பிட்டுள்ள அனைத்து விபரங்களும் வழங்க வேண்டும். அதில் ஊழியரின் ஊதியமும் அடங்கும். (கிப்ட், IT, memo, ஒழுங்கு நடவடிக்கை தவிர)


*16. பட்டா ட்ரான்ஸ்பர்சிட்டா போன்ற விபரங்கள் தெரிவிக்க வேண்டியதில்லை*

தவறு. அனைத்து அலுவலக நடைமுறைகளையும் தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து நடைமுறை விபரத்தையும் ஒருவர் பெறலாம்.


*17.SR Copy தர  வேண்டியதில்லை*

சரி. தனிப்பட்ட தகவலாகும்.


*18. பணி நியமனம் தொடர்பான நகல் தர வேண்டியதில்லை*

தவறு. வழங்க வேண்டும். ஒருவர் முறையாக பணியில் சேர்ந்திருக்கின்றாரா என்ற விபரத்தை அறிய அனைத்து குடிமகனுக்கு உரிமை உண்டு. ஆனால், அவர் பணியில் சேரும்போது வழங்கிய மருத்துவ சான்றிதழ் போன்றவற்றின் நகல் வழங்க தேவையில்லை.


*19. பணியாளரது தனிப்பட்ட விபரங்கள் (அ) அலுவலக தொடர்பாக வரப் பெற்ற விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரரது விபரம்தெரிவிக்க வேண்டியதில்லை*

சரி. ஆனால் பிரிவு 4(1)(b) –ல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களும் வழங்க வேண்டும்.


*20. வேண்டிய விபரங்களைப் பெற்று தொகுத்து அனுப்ப வேண்டியதில்லை*

சரி.


*21. மிக அதிக அளவு விபரம் கோரப்பட்டால்தெரிவிக்க வேண்டியதில்லை*

சரி. உதாரணமாக ஒரு அலுவலகத்தில் 2000 வருடத்தில் இருந்து 2016 வருடம் வரை பெற்ற கடிதங்கள் விபரம் போன்றவை.


*22. SR நகல் வழங்க வேண்டியதில்லை.பொது நலன் எனக் கருதினால் முதல் பக்கம் மட்டும் தரலாம்*

சரி. மூன்றாம் நபர் தகவல்கள். மறுக்கலாம்.


*23. ஒரே மாதிரியான தகவல்களை திரும்ப திரும்ப கேட்க கூடாது*

சரிதான்.


*24. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள போதுமனுதாரர் RTIல் மனு சமர்பித்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கலாம்*

நீதிமன்ற வழக்கு இருக்கும்போதும் தகவல்களை வழங்க மறுக்கக்கூடாது. 


*25. பதிவேடுகளில் இல்லாதவை. தகவல் அல்ல. வழங்க வேண்டியதில்லை*

சரி.


*26. பதில் செயல்முறை ஆணை குறிப்பாணை வடிவில் கூடாது*

அலுவலக பொருண்மைகள் பற்றிய தகவல்கள் மட்டுமே வழங்க வேண்டும்.


*தயவு செய்து இந்த தகவலை அதிகம் Share பண்ணுங்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வலிமையை குறைக்கும் வகையில் தவறான விஷயங்கள் இந்த சட்டத்தை பற்றி வாட்ஸ்ஆப்பில் உலா வருகின்றது*.

No comments:

Post a Comment