Pages

Friday, 26 June 2020

Can we ask questions in the form of 'Whether' in RTI?

தகவல் அறியும் உரிமை சட்டம்
.
2015-ல் மத்திய பொதுத்துறை நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட மனுவிற்கான இரண்டாவது மேல்முறையீடு விசாரணையானது கலெக்டர் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.
.
'Whether' என்று ஆரம்பித்து கேள்வி வடிவில் எதாகிலும் தகவல்களை கோரினாலோ அல்லது கோரும் தகவல்களுக்கு “ஆம் அல்லது இல்லை“ என்று பதில் அளிக்கும் வகையில் கேள்விகள் அமைந்திருந்தாலோ, அது தஅஉ சட்டம் பிரிவு 2(f) கீழ் தகவல்கள் என்ற பதத்தில் வராது என்று மத்திய தகவல் ஆணையம் ஒரு ஆணையில் கூறியிருந்தது. நான் கோரிய பெரும்பாலான தகவல்கள் கேள்வி வடிவத்திலேயே கோரியிருந்தேன். ஆகவே, மேற்படி பிரச்சனையை அவர்கள் முன் கீழ் கண்டவாறு முன்வைத்தேன்.
.
ஐயா,
.
நாளை “Whether Mr.X, Information Commissioner attended 2nd appeal of Mr.X vs. CPIO? என்று கோரினால், இதற்கான தகவல்களை வழங்குவீர்களா? அல்லது கோரிய தகவல்கள் Whether என்று கேள்வி வடிவத்தில் இருக்கின்றது அல்லது அதற்கான பதில் ஆம் என்று அமைகின்றது, என்று மறுப்பீர்களா?
 .
தகவல் உரிமை சட்டத்தில் தகவல்களை கேள்வி வடிவில் கேட்கக்கூடாது எங்கும் கூறப்படவில்லை. மேலும் தகவல்களை இவ்வாறுதான் கேட்கவேண்டும் என்றும் கூறப்படவில்லை. கோரும் தகவல்கள் அந்த அலுவலகத்தில் பொருண்மைகளாக இருந்தால் (material facts) அந்த தகவலை வழங்கியே ஆக வேண்டும்.
.
இன்று நான் உங்கள் முன் ஆஜர் ஆகியிருக்கின்றேன். நீங்கள் இரண்டாவது மேல்முறையீடு விசராணையை செய்திருக்கின்றீர்கள். இந்த நிகழ்வு மத்திய தகவல் ஆணையத்தில் பொருண்மைகளாக உள்ள நிலையில், எனது கோரிய தகவல்களுக்கு ஆம் என்று பதில் அளித்துதான் ஆகவேண்டும். ஆக, தகவல்களை வினாக்கள் வடிவத்தில் கேட்டதாலோ அல்லது அதற்கான பதில் ஆம் அல்லது இல்லை என்ற வடிவில் இருப்பதாலோ தகவலை வழங்க பொது தகவல் அலுவலர் மறுக்கக்கூடாது.
 .
இந்த பொருண்மைகள் எந்தவடிவத்தில் இருந்தாலும் வழங்க வேண்டும் என்பதால்தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் எனும் விளக்கத்தில் opinion and advice என்று கொடுத்துள்ளார்கள். இங்கு opinion and advice என்பது மத்திய தகவல் அலுவலரின் சொந்த கருத்துகள் அல்ல மாறாக அலுவலகத்தில் உள்ள பொருண்மைகளை சார்ந்தது என்று வாதிட்டேன். வாதத்தை ஏற்றுக்கொண்டு தகவல்கள் அனைத்தையும் வழங்க ஆணையிடுவதாக உறுதியளித்தார்.
.
ஆகவே, தகவல்களை கேள்விகள் வடிவில் கேட்கக்கூடாது என்று யாரகிலும் கூறினால் அது தவறான அணுகுமுறை மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிரானது. (விதிவிலக்கு - கோவா உயர்நீதிமன்ற உத்திரவின்படி “ஏன்“ என்று கேள்வி வடிவில் பிரச்சனைக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக விடை அறியக்கூடாது)

No comments:

Post a Comment