Pages

Tuesday, 13 September 2016

Facebook Group-ல் “Admin“ என்ற நிர்வாகப்பதவி


Facebook Group-ல்  Adminஎனும் நிர்வாகத்தை, அந்த Group உருவாக்கியவரே வைத்து கொள்வது என்பது அவருக்கு பாதுகாப்பானது
...................................................................................................
.
ஒரு முகநுால் குழுமத்தில் அட்மின்என்பது மிக முக்கியமான அதிகாரம் உள்ள நிர்வாகப்பதவி ஆகும். இந்த பதவியை குழுமத்தை ஆரம்பிப்பவர் கையில் வைத்திருப்பதுதான் அவருக்கு பாதுகாப்பானது. அந்த குழுமத்தில் பதியப்படும் அனைத்து பதிவுகளுக்கும் அட்மின்பொறுப்பானவராவார். இவ்வாறு அந்த குழுமத்தில் யவரின் புகழக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒருவர் பதிவிட்டு, அந்த பதிவு வெளியடப்பட்டால், அந்த குழுவின் அட்மின்” “அவதுாறு செய்தார்என்று அவர் சிவில் சட்டத்தின்படியும், இ.த.ச. படியும் தண்டிக்க வாய்ப்புண்டு. இவ்வாறான முக்கியமான அட்மின்அதிகாரத்தை மற்றவர்களுக்கு வழங்கும்போது, மிக கவனம் தேவை.
.
1) குழுமத்தை உருவாக்கியவரின் நோக்கத்திற்கு ஏற்ப மற்ற அட்மின்பதிவுகளை இட அனுமதிப்பாரா?
2) குழுமத்தை உருவாக்கியவரின் நோக்கத்தை கருத்தில் கொண்டு தவறான பதிவுகளை உடனே மற்ற அட்மின் நீக்கம் செய்வரா?
3) மற்ற அட்மின் குழும பக்கத்தை அடிக்கடி பார்ப்பவரா?
4) மற்ற அட்மின், குழுமத்தை உருவாக்கியவரின் எண்ணத்திற்கேற்ப உறுப்பினர்களை அனுமதிப்பரா?
.
Facebook Group உருவாக்கியவர் எண்ணத்தை மற்ற அட்மின்களும் கருத்தில் கொள்பவராக இருக்க வேண்டும். இல்லையென்றால், மற்ற அட்மின்செய்த சிறிய தவறுக்குகூட குழுமத்தை உருவாக்கியவர் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.
.
ஒரு குழுமத்தை உருவாக்கினால், அதை உருவாக்கியவரே அட்மின் ஆக இருப்பது நலம். மேலும், பதிவுகள் எதுவும் அட்மின் அனுமதி இல்லாமல் Facebook Group-ல் பதிவிட முடியாத வகையில் முகநாலில் செட்டிங்க் செய்து கொள்வது நலம்.
.
அதுபோலவே, ஒரு குழுமத்தை உருவாக்கியவர் மற்றவர்களை அட்மினாக போட்டால், அந்த குழுமத்தில் இடப்படும் பதிவுகள் அனைத்திற்கும் மற்ற அட்மின்களும் பொறுப்பாவார்கள். ஆகவே, மற்றவர்கள் அட்மின் பதவியை ஏற்றுக்கொள்ளும் முன்னர், அதனால்ப ஏற்படும விளைவுகள் பற்றி ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துக்கொள்ளுங்கள்.
.
உங்கள் நண்பர் உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் உங்களையும் குழுமத்தின் ஒரு அட்மின் ஆக இணைத்துவிட்டால், நீங்கள் எப்போதும் அட்மின்செட்டிங் சென்று நீங்களாகவே உங்களை நீக்கி கொள்ள முடியும். அதன் பின்னர் உங்களை சேர்த்த உங்கள நண்பரிடம், நீங்கள் அட்மின் ஆக இருக்க விருப்பமில்லை என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்துவிடுங்கள்.
.
கடைசியாக
.
தயவு செய்து Facebook Group நடத்தி வருபவர்கள், ஒருவரின் அனுமதியின்றி, எவரையும் தங்கள் குழுமத்தின் அட்மின்ஆக தானாக முன் வந்து இணைக்காதீர்கள்.
.

ஒரு Facebook  Group-ல் Additional Admin என்பது மிக பெருமையான விஷயம் அல்ல. மற்றவர்களின் தவறுக்கு பலியாக நேரிடும் வகையிலான மிக ஆபத்தான விஷயம்

No comments:

Post a Comment