Pages

Tuesday, 13 September 2016

The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending), Act 2014

The Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending), Act 2014
.
தெருக்களில் நடந்து செல்லும்போது, பல நேரங்களில் தெருக்கடைகளில் உள்ள பொருட்கள் வாங்குவதில் பலர் விருப்பப்படுவார்கள். சிலர், ரோட்டில் நடக்க முடியாத அளவில் கடைகளை வைத்து கொண்டு இவர்கள் தொந்திரவாக இருக்கின்றார்கள் என புலம்புவார்கள். 
.
தெருக்களில் கடைகள் வைத்திருப்பவர்கள் பலர் அந்த வியாபாரத்தையே நம்பி வாழ்ந்து வருவார்கள். அவர்களை பாதுகாக்கும் வண்ணம் இயற்றப்பட்டதே மேற்படி சட்டம். 
.
சட்டத்தின் முக்கிய கூறுகள்.
.
1) Town Vending Committee (TVC)
ஒன்று அமைக்கப்படவேண்டும். TVC இவ்வாறு வியாபாரம் செய்யும் இடங்களையும், எத்தனை தெருக்கடைகள் இருக்கலாம் என்பதையும் தீர்மானிக்கும். 
2) TVC
தெருவியாபாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும். 
3)
வாழ்வதற்கு எந்தவித வாழ்வாதாரம் இல்லாதவர்கள் சான்றிதழ் பெற்றவர் அல்லது அவரது குடும்பத்தார் தெருக்கடைகள் வைக்கலாம். 
4)
இதில் 3 பிரிவு உள்ளது – Stationary vender, mobile vendor or any other category specified by scheme
5)
ஒவ்வொரு தெருக்கடைக்காரும் நிர்ணயத்த கட்டணத்தை செலுத்த வெண்டும். 
6)
சான்றிதழ் பெற்ற ஒவ்வொருவரும் சட்டப்படியாக அந்த இடத்தில் வியாபாரம் செய்ய அதிகாரம் உண்டு
7)
தெருக்கடைக்காரர் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க கடமைப்பட்டவராவார். 
8)
இவர்கள் குறையை கேட்கும்வகையில் ஒரு கமிட்டி உருவாக்கப்படவேண்டும். 
9)
சான்றிதழ் பெற்ற இவர்களை காவல் துறையினர் தொந்திரவு படுத்தக்கூடாது. 
10)
இவ்வாறு தெருக்கடைகள் நடத்துபவர்கள் இந்த சட்டத்தின்படி தெருக்கடை நடத்தும் இடத்திற்கு எந்தவித உரிமையும் பெறமாட்டார்கள்.

No comments:

Post a Comment