Pages

Tuesday, 18 July 2017

மயக்கவியல் மருத்துவம்

மயக்கவியல் மருத்துவம் 


மயக்கவியல் துறை (Anaesthesia)
மயக்கவியல் துறை என்பது இன்றைய மருத்துவத் துறையில் ஒரு முக்கியமான துறையாக விளங்குகிறது. அனஸ்தீஸியா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொல்லானது கிரேக்க மொழியில் வலியின்மை’ எனும் வார்த்தையில் இருந்து வந்த சொல் ஆகும். பண்டைய  காலங்களில் அறுவை சிகிச்சைக்கு முன்னர்மயக்கம் தரும் மூலிகைளை  கொடுத்து ஒருவர் நன்கு மயக்கம் ஆனபிறகு அறுவை சிகிச்சை செய்தார்கள்.  பின்னர்பல அறிஞர்கள் நைட்ரஸ் ஆக்ஸைடுகார்பன்-டை-ஆக்ஸைடு உபயோகப்படுத்தி வலியை குறைக்கலாம் என்று கண்டறிந்தார்கள். 1846-ஆம் வருடம் அக்டோபர் திங்கள் 16ம் நாள் அமெரிக்காவில் நாட்டில் போஸ்டன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பல் மருத்துவர் டாக்டர்.வில்லியம் தாமஸ் கீரின் மார்ட்டன் என்பவர் ஈதர் எனும் வாயுவின் மூலம் எட்வர்டு கில்பர்ட் அபார்ட் என்பவருக்கு மயக்க கொடுக்கடாக்டர்.ஜான் கொலின்ஸ் வாரண் என்பவர் வெற்றிகரமாக நோயாளின் கழுத்தில் இருந்து ஒரு கட்டியை அறுவை சிகிச்சையை செய்து எடுத்தார். இதுதான் முதலாவதாக பொதுமக்கள் அறியும் வண்ணம் மயக்கம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்த நிகழ்ச்சியாகும். இந்த நாள்தான் உலக அனஸ்தீஸியா தினமாக (ஈதர் தினம்கொண்டாடப்படுகின்றது. இன்று மயக்கவியல் துறையில்Local Anaesthesia, Regional Anaesthesia, General Anaesthesia, Sedationஎன நான்கு முறையில் அனஸ்தீஸியா கொடுக்கப்படுகின்றது.

Local Anaesthesia என்பது எந்த இடத்தில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ அந்த இடம் உணர்வற்று போகும் வகையில் மயக்கவியல் மருந்தை அந்த இடத்தில் தெளிப்பான் மூலம் தெளித்து அல்லது களிம்பை தடவி அல்லது ஊசி மூலம் செலுத்தி அறுவை சிகிச்சையின் பொழுது அந்த இடத்தில் மட்டும் வலியில்லாமல் செய்வதாகும். இது குறைந்த நேர சிறு அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தும் முறை. இந்த முறையில் நோயாளி முற்றிலுமாக நினைவுடன் இருப்பார். தேவைப்பட்டால்நோயாளிக்கு சிறிது தூக்கம் வரும் அளவிற்கான மருந்துகள் கொடுத்து சிறிது மயக்க நிலையில் வைத்திருப்பார்கள். உதாரணமாகபல் பிடுங்கும்போது இந்த முறைதான் மயக்கவியல் முறைதான் பயன்படுத்தப்படுகின்றது.

Regional Anaesthesia என்பது மயக்க மருந்தினை நரம்புகளின் அருகில் செலுத்தி அந்த நரம்பு மண்டல பகுதியை வலியற்றதாக்குவதாகும். உதாரணமாக காலில் எழும்பு முறிவு ஏற்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்போது,   முதுகுத்தண்டின் (spinal cord)  வழியாக செல்லும் நரம்புகளின் (nerves)அருகில் மயக்க மருந்தை செலுத்துவதன் மூலம் நோயாளியின் இடுப்பிற்கு கீழே வலியற்று போகச் செய்வதாகும். இங்கு நோயாளி நல்ல நினைவுடனே இருப்பார். அவரால் இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்களை அசைக்க முடியாத நிலையிலும்அங்கு எந்த வலியையும் உணர முடியாத நிலையிலும் இருப்பார். அவரால் நடைபெறும் அறுவை சிகிச்சைகளை முற்றிலுமாக உணர முடியும். ஆனால் நோயாளியின் பயத்தை போக்கும் விதமாக அவருக்கு தூக்கம் வரும் அளவிற்கான மருந்துகள் கொடுத்து  மயக்க நிலையில் வைத்திருப்பார்கள். இவ்வாறு முதுகுத்தண்டின் (spinal anaesthesia) வழியாக செல்லும் நரம்புகளின் அருகில் மயக்க மருந்தை செலுத்தும் மயக்கவியல் முறையானது வயிற்று பகுதியில் செய்யும் அறுவை சிகிச்சைகளான சிசரியேன்கர்ப்பைபை நீக்கம்குடல் இறக்கம்  போன்றவைக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. எந்த நரம்புகளின் அருகில்  மருந்தை செலுத்துவதுஎந்த அளவிற்கு மருந்து செலுத்துவது என்பதை தேர்ந்தெடுப்பதின் அடிப்படையில் எந்த நரம்பு மண்டல பகுதி மற்றும் எவ்வளவு நேரம் உணர்வற்று போகவேண்டும் என்பது மயக்க மருத்துவரால் தீர்மானிக்கப்படுகின்றது. இந்த மயக்கவியல் முறையில் அதிகபட்சமாக 3 மணிநேரம் வரையிலான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றது.

General Anaesthesia என்பது மயக்க மருந்தால் ஒருவரை முற்றிலுமாக மயக்க நிலையில் கொண்டு செல்வதாகும். இந்த நிலையில் அவருக்கு எந்த உணர்வும் இருப்பதில்லை.  மேலும் அவரால் சொந்தமாக சுவாசிக்க முடியாது என்பதால் பாயில்ஸ்’ என்ற இயந்திரத்தின் உதவியுடன் மயக்கவியல் மருத்துவர் அவருக்கு தொடர்ந்து ஆக்ஸிஸனை வழங்குவார்.இந்த மயக்கவியல் முறையில் நோயாளியை அதிக நேரம் மயக்கவியல் முறையில் வைத்திருக்க முடியுமாதலால் பெரிய அறுவை சிகிச்சைகளும்தலைமுகம்இதயம் சார்ந்த அறுவை சிகிச்சைகளும் இந்த மயக்கவியல் முறையில்தான் செய்யப்படுகின்றன

Sedation என்பது குறைந்த அளவு மயக்கவியல் மருந்துகளை உட்செலுத்தி ஒருவரை துhங்கும் நிலைக்கு கொண்டு சென்று சிறிய அறுவை சிகிச்சை செய்யும் முறையாகும்.  இதில் வலியை உணரமாட்டார்.

ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படுபவருக்கு  எந்தவித மயக்கவியல் முறையில் கையாளப்படவேண்டும் என்பதை தீர்மானிப்பவர் மயக்கவியல் மருத்துவராவார்.  மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடக்கும்போதுநோயாளிகளின் நாடித்துடிப்புஇரத்த அழுத்தம்சுவாசம் போன்றவைகளை மயக்கவியல் மருத்துவர்  கண்காணித்து கொண்டிருப்பார்மேற்படி விஷயங்களில் ஏதாகிலும் மாற்றம் ஏற்படும்பொழுதுஅதற்கென மருந்துகளை செலுத்தி அறுவை சிகிச்சை முடியும் வரை நோயாளியை நல்ல நிலையில் வைத்திருப்பார். மயக்கவியல் மருத்துவரின் முக்கிய கடமையானது அறுவை சிகிச்சை முடியும் வரை நோயாளியின் அருகில் இருப்பதாகும்.

ஒருவருக்கு அறுவை சிகிச்சை தேவை என அறுவை சிகிச்சை மருத்துவர் பரிந்துரைத்தவுடன்,மயக்கவியல் மருத்துவரால் முற்றிலுமாக பரிசோதிக்கப்பட்டு (Pre-assessment) அறுவை சிகிச்சை செய்ய தகுதியானவர்’ என்று மயக்கவியல் மருத்துவரால் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகுதான்அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் மயக்கவியல் மருத்துவர் ஏதாவது பரிசோதனைகள் செய்ய சொன்னால்அவைகள் அனைத்தையும் கட்டாயம் செய்யுங்கள். உங்கள் உடல் நிலையைப் பற்றி முழுவதும் அறிந்தால்தான்,  என்ன முறையிலான மயக்கமுறை உங்களுக்கு கொடுக்கவேண்டும் மேலும் எந்தெந்த மயக்க மருந்துகளை கொடுக்கலாம் என்பதை மயக்கவியல் மருத்துவரால் தீர்மானிக்க முடியும். அறுவை சிகிச்சையின்போது எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டால் அந்த இடத்தில் உங்கள் உயிரை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பவர் மயக்கவியல் மருத்துவரே. ஆகவே சிறு அறுவை சிகிச்சையாக இருந்தாலும் மயக்கவியல் மருத்துவரின்றி அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்கவும்.
.
.


(பொது மக்களுக்கு மயக்கவியல் மருத்துவத்தை பற்றி ஒரு புரிதலை உருவாக்க, திரட்டப்பட்ட  தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது -  தவறுகள் இருந்தால், தயவு செய்து சுட்டி காட்டவும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - லி.லீனஸ்)

No comments:

Post a Comment