Pages

Thursday, 26 July 2018

அறுவை சிகிச்சை நிபுணரானவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்த பிறகு,...


அறுவை சிகிச்சை நிபுணரானவர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்த பிறகு, அதன் பின்னால் நோயாளிக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்கு,  நோயாளி ஏற்கனவே வேறு ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்,  அதனால்தான் அவருக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னரும் இந்த உடல்நலக்குறைகள் ஏற்பட்டன என்று கூறி எந்த துறையின் மருத்துவரும் தப்பிக்க முடியாது.  (அறுவை சிகிச்சைக்கோ, மயக்கவியல் மருத்துவத்திற்கு ஒரு நோயாளி உடல் அளவில் தயாராக இல்லை என்றால், அவரை  higher Centre –க்கு அனுப்புவதுதான் சரியே தவிர, மருத்துவர்கள் நோயாளியின் உடல்நலத்துடன், தன்னிச்சையாகவே அல்லது உயர்அதிகாரியின் ஆணையின் பேரில் compromise செய்து, மருத்துவம் செய்யக்கூடாது)
.
II (2018) CPJ 342 (NC)
.

நோயாளிக்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. அதன் பின்னர் நோயாளியின் மூட்டில் தொற்றுநோய் (infection) ஏற்பட்டது. மருத்துவமனை நிர்வாகமானது, நோயாளியானவர் ஏற்கனவே Rheumatoid Arthritis என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர் ஆகையால் அவர்களுக்கு மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்தபிறகு தொற்றுநோய்  ஏற்பட என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது.  அதற்கு மாண்புமிகு நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றமானது, அறுவை சிகிச்சை நிபுணர் மூட்டு மாற்று சிகிச்சையில் தனித்துவம் பெற்றவர், அவரிடம் இருந்து நோயாளிக்கு சிறப்பாக சிகிச்சை முறை எதிர்பார்க்கப்படும் நிலையில், மருததுவமனை முன் வைத்த வாதத்தை மன்றம் நிரகாரித்து, மருத்துவமனை மேற்படி புகார்தாரருக்கு இழப்பீடு வழங்க ஆணையிட்டுள்ளது. இவ்வழக்கின் ஆணையானது National Consumer Redressal Commission-யாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment