Decided on 18.5.2017
NATIONAL CONSUMER DISPUTES
REDRESSAL COMMISSION, NEW DELHI
SUTAPA DASGUPT (DR.) & ANR. Vs. TAPAN KAR & ANR.
Revision Petition No. 315 of 2016 against Order dated 30.10.2015
in Appeal No. 142 of 2013 of West Bengal State Consumer Disputes Redressal
Commission
.
சிசரியேன் பண்ணிய பிறகு, நோயாளியின் கால்கள் இரண்டும் அசைக்க முடியவில்லை என்பதை மருத்துவ சேவை குறைபாடு என்று புகார் அளிக்கப்படுகின்றது. இதற்கு காரணம் முதுகில் மயக்க மருந்து செலுத்தும் வகையில் ஊசி போட்டதுதான் காரணம் என்று புகார்தார் தரப்பில் வாதாடப்படுகின்றது.
.
நோயாளிக்கு பின்னர் எம்.ஆர்.ஐ. எடுத்து பார்த்ததில் போட்ட ஊசியினால் இரத்த நாளங்களில் ஒட்டை விழுந்து அதன் வழியாக இரத்த கசிவு ஏற்பட்டு அந்த இரத்த கட்டி காலுக்கு செல்லும் நரம்புகளை அழுத்தியிருப்பதாக தெரியவருகின்றது. அதனால்தான் கால் இரண்டு அசைக்க முடியவில்லை என்ற காரணம் தெரிகின்றது.
.
மயக்க மருந்து செலுத்த முதுகில் ஊசி போடுவது என்பது ஒரு Blind Technique ஆகும். (அதாவது அனுபவத்தின் அடிப்படையில் அனுமானித்து போடும் முறையே தவிர 100 சதவீதம் full proof technique அல்ல) மேலும் ஊசி போடும்போது இரத்த நாளங்கள் ஊசி போடப்படும் பாதையில் இருந்தால் அதில் injury ஆவதை தவிர்க்க முடியாது என்ற மருத்துவர்களின் வாதத்தை ஆணையம் ஏற்றுக்கொள்கின்றது.
.
ஆனால் எம்.ஆர.ஐ. ரிப்போர்ட் வந்த பிறகு நோயாளியை உடனடியாக அதற்கான வைத்தியம் பார்க்கும் அளவில் வசதி உள்ள நியுரோ அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் மீது சேவை குறைபாடு என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது.
.
No comments:
Post a Comment