Pages

Tuesday, 29 October 2019

காரில் முன் பக்க கேமராவின் அவசியம்


இன்று வாகன இன்சுரன்ஸ் பிரிமியம் மிக அதிக அளவில உயர்ந்து கொண்டிருக்கின்றது. காரணம் இன்சுரன்ஸ் நிறுவனங்கள் பல கோடிகளில் காப்பீட்டு தொகையை விபத்துக்களில் வழங்கிவருகின்றது. வாகன விபத்திற்கு, வாகனம் மட்டுமா காரணம்? விபத்தினால் உயிர் இழக்கும் நபர்களே பல நேரங்களில் விபத்திற்கு காரணமாக இருப்பார்கள். (உதாரணமாக வேகமாக ஹைவேஸில் வலது பக்கமாக கார் வந்து கொண்டிருக்கும்போது, அரளி செடிக்குள் இருந்து திடிரென ரோட்டை கிராஸ் பண்ணுவது) ஆனால் பல நேரங்களில் FIR-ல், இறந்தவர் ஒரமாக ரோட்டில் நடந்து கொண்டிருந்தார், வாகனமானது அதிவிரைவாக வந்து டிரைவரின் அஜாக்கிரதையால் இறந்தவர் மீது மோதியதால் மரணம் என்று எழுதப்படுகின்றது. உண்மையிலேய அந்த டிரைவர் மீது தப்பு இருந்ததா? இதைப்பற்றி அறிய முக்கியமான சாட்சியம் சம்பவ இடத்தில் எதுவும். இருப்பதில்லை. மேலை நாடுகளில் பெரும்பாலான கார்களில் Dashboard Camera பொருத்தப்பட்டிருக்கின்றது. அதில் உள்ள பதிவை கொண்டு நீதிமன்றத்தில் அந்த விபத்திற்கு, கார் டிரைவர் காரணமா என்பது தீர்மானிக்கப்படுகின்றது. Dashboard Camera அனைத்து வாகனங்களிலும் கட்டாயமாக்கப்படவேண்டும். இதன் அவசியத்தை இன்சுரன்ஸ் கம்பெனிகள்தான் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அனால் அவர்கள் அமைதியாக இருப்பதை பார்க்கும்போது, அவர்கள் நிறுவனம் அதிக அளவில் காப்பீட்டு தொகையை வழங்கி நஷ்டமாக போனாலும் அவர்களுக்கு கவலை இல்லை என்பதுபோல தோன்றுகின்றது.
.
இவ்வாறு கேமராக்கள் பொருத்தப்பட்டால், பல நேரங்களில் விபத்திற்கான கவனக்குறைவானது contributory Negligence ஆக நிருபிக்க படும்போது, இன்சுரன்ஸ் கிளைம் குறைவதால், வருங்காலத்தில் தேவையற்று பிரிமியம் தொகையை உயர்த்த அவசியம் இருக்காது.
.
பல இலட்சங்கள் கொடுத்து கார் வாங்குபவர்கள், அவர்கள் காரில் சிறந்த ஒரு Dash Board Camera- யை சில ஆயிரம் செலவழித்து பொருத்தி கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment