தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் முதலில் சட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எங்காவது, “ஆய்வு செய்வதற்கு” பொது அதிகார அமைப்பின் அனுமதி கோரவேண்டும் என்று கூறியுள்ளதா? பின்னர் ஏன் ஆய்வு செய்ய அனுமதி கேட்டு பொது தகவல் அலுவலருக்கு மனு எழுத வேண்டும்?
.
ஆய்வு செய்வது என்பது உடனடியாக பொது அதிகார அமைப்பிற்கு சென்று மனு ஒன்றினை சமர்பித்து ஆய்வு செய்வதாகும். பொது அதிகார அமைப்பிடம் முன் அனுமதி பெற்று ஆய்வு செய்யும் நிலை ஏற்பட்டால், மனுதாரர் எதை ஆய்வு செய்ய நினைக்கின்றாரே அதில் உள்ள தவறுகளை எல்லாம் திருத்தப்பட வாய்ப்புண்டு.
.
சில வருடங்களுக்கு முன்னர் மதுரை மருத்துவக்கல்லுாரி அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு ஆய்வுக்கு சென்றிருந்தேன். வேண்டிய ஆவணங்களின் நகலை 12 மணிக்கெல்லாம் பெற்றுக்கொண்டன். அப்போதைய டீன், சட்டம் படித்தவர் என்ற முறையில், ஆய்வுக்காக அனைத்து வசதிகளையும் உடனே செய்து கொடுத்தார்.
.
ஆய்வு செய்ய நேரடியாக செல்லுங்கள். அவர்கள் மறுத்தால், பிரிவு 18(1) படி தகவல் ஆணையத்திடம் புகார் மனு அளியுங்கள். அதைவிட்டு, பொது அதிகார அமைப்புகள் நேரம் ஒதுக்கி தரும் வகையில் காத்திருக்காதீர்கள் மேலும் அவர்களிடம் அனுமதி பெற்று ஆய்வு செய்ய செல்லாதீர்கள்.
.
சட்டத்தில் கூறாத ஒன்றை, தவறான நடைமுறையை கொண்டு, மாற்றிவிடாதீர்கள்.
No comments:
Post a Comment