Pages

Friday, 26 June 2020

தகவல் அறியும் உரிமை சட்டம் – புகார் அளிக்கும் பிரிவு 18(1) – ஒரு அலசல்

தகவல் அறியும் உரிமை சட்டம் – புகார் அளிக்கும் பிரிவு 18(1) – ஒரு அலசல்
.
தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் வழங்கப்படவில்லை என ஒருவர் தகவல் ஆணையத்திடம் புகார் கொடுக்கும்போது, அந்த புகாரின் பேரில் தகவல் ஆணையர் மனுதாரருக்கு தகவல் வழங்க ஆணையிடலாமா? என்ற கேள்விக்கு இந்த உச்சநீதிமன்ற நீதிப்பேராணை (Chief Information Commr.& Anr vs State Of Manipur & Another ( MANU/SC/1484/2011) விடை அளிக்கின்றது.
.
இந்த பிரச்சனையில், மனுதாரருக்கு தகவல் கிடைக்கவில்லை என பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் செய்கின்றார். அந்த புகாரை விசாரித்த தகவல் ஆணையர், மனுதாரருக்கு 15 நாட்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் என்று பொது தகவல் அலுவலருக்கு ஆணையிடுகின்றார். இந்த ஆணையை எதிர்த்து மனுதாரரின் வழக்கு உச்சநீதிமன்றம் வரை செல்கின்றது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கீழ்கண்டவாறு எடுத்துரைக்கின்றது.
.
31. We uphold the said contention and do not find any error in the impugned judgment of the High court whereby it has been held that the Commissioner while entertaining a complaint under Section 18 of the said Act HAS NO JURISDICTION TO PASS AN ORDER PROVIDING FOR ACCESS TO THE INFORMATION."
.
"37. We are of the view that Sections 18 and 19 of the Act serve two different purposes and lay down two different procedures and they provide two different remedies. One cannot be a substitute for the other.
.
42. Apart from that the procedure under Section 19 of the Act, when compared to Section 18, has several safeguards for protecting the interest of the person who has been refused the information he has sought. Section 19(5), in this connection, may be referred to. Section 19(5) puts the onus to justify the denial of request on the information officer. Therefore, it is for the officer to justify the denial. There is no such safeguard in Section 18. Apart from that the procedure under Section 19 is a time bound one but no limit is prescribed under Section 18. So out of the two procedures, between Section 18 and Section 19, the one under Section 19 is more beneficial to a person who has been denied access to information.
.
பிரிவுகள் 18 மற்றும் 19, வெவ்வேறு நோக்கம் கொண்டவைகள். இரண்டும் வெவ்வேறு வகையான பரிகாரங்களை வழங்குகின்றது. ஆகவே, தகவல் கிடைக்கவில்லை என மனுதாரர் பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் அளித்தால், கோரிய தகவலை வழங்க ஆணையிட அந்த பிரிவின் படி தகவல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஆணையிடுகின்றது.
.
மேற்படி உச்சநீதிமன்ற நீதிப்பேராணையின் அடிப்படையில், Dr. Deepak Juneja vs. Central Information Commission ... on 29 April, 2019 என்ற நீதிப்பேராணையில், டெல்லி உயர்நீதிமன்றமானது கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றது
14....The writ appeal was disposed of by the order dated July 29, 2010 wherein the Division Bench has held that under Section 18 of the Act the Commissioner has no power to direct the respondent to furnish the information and further held that such a power has already been conferred under Section 19(8) of the Act on the basis of an exercise under Section 19 only.
.
ஆகவே பிரிவு 18(1)-ன் கீழ் மனுதாரர் கீழ்கண்ட காரணங்களுக்காக புகார் அளித்தால்,
.
1) பொது தகவல் அலுவலர் மற்றும் மேல் முறையீட்டு அலுவலர் நியமிக்கப்படாததால், மனுக்களை ஏற்க மறுப்பது
2) தகவல் வழங்க மறுப்பது
3) குறித்த கால வரம்பிற்குள் தகவலை வழங்க மறுப்பது
4) நியாமற்ற கட்டணம் கோருவது
5) முழுமையற்ற, பொய்யான தகவலை வழங்குவது
6) பதிவுருக்களை பெறுவதற்கு தடையாக உள்ள இதர விஷயங்கள் ப்றறிய...
.
தகவல் ஆணையமானது அந்த புகாரை சட்டப்படியாக விசாரணை செய்து, பொது தகவல் அலுவலருக்கு பிரிவு 20(1) மற்றும் பிரிவு 20(2)-ன் கீழ் தண்டனை வழங்கலாம்.
.
பிரிவு 18(1) -ன் கீழ் தகவல் ஆணையத்திடம் புகார் அளிக்கும் போது, பொது தகவல் அலுவலருக்கு பிரிவு 20(1)(2)-ன் கீழ் தண்டனை வழங்குமாறு மனுதாரர் கோரிக்கை வைக்க வேண்டும்.
.
ஆனால், மனுதாரர் ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. பிரிவு 18(1)-ன் கீழ் தகவல் ஆணையத்திற்கு புகார் அளிக்கும்போது, தகவல் கிடைக்க வாய்ப்பில்லை. தகவல் வேண்டும் என்றால், பிரிவு 19(3)-ன்படியே இரண்டாம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
.
தகவல் வழங்காததற்கு பிரிவு 19(8)(b)-ன் படி இழப்பீடு கோரினால், அதை பிரிவு 19(3)-ன் படி இரண்டாம் மேல் முறையீடாகத்தான் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment