Pages

Friday, 26 June 2020

பிரிவு 18 மற்றும் பிரிவு 19 வெவ்வேறானவை...

மனுதாரர், பிரிவுகள் 18 மற்றும் 20 ஆகியவற்றை இணைத்து (read with) பிரிவு 19-ன் கீழ் உள்ள உட்பிரிவுகளுக்கு பரிகாரம் கோரி தகவல் ஆணையத்திடம் புகார் அளிக்கலாமா?
.
Dr. Deepak Juneja vs Central Information Commission ... on 29 April, 2019 IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
.
மனுதாரர் பிரிவுகள் 18 மற்றும் 20 ஆகியவற்றை இணைத்து (read with) பிரிவு 19(8)(b) 19(8)(a)(v)-ற்காக பரிகாரம் கோரி தகவல் ஆணையத்திடம் புகார் கொடுத்ததால், அவரது புகரானது தகவல் ஆணையத்தால் நிராகரிக்கப்படுகின்றது. அந்த ஆணையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்யப்படுகின்றது. அவரது புகாரில் கீழ்கண்டவாறு பரிகாரம் கோருகின்றார்.
.
பிரிவு 18(1) – தகவல் வழங்கப்படவில்லை எனவும்,
பிரிவு 19(8)(b) (“இழப்பு அல்லது பாதிப்புண்டாக்கிய முறையீட்டாளருக்கு நஷ்டஈடு வழங்குவது) என்பதின் அடிப்படையில் ரூ.50000 நஷ்ட ஈடு கேட்டும்,
பிரிவு 19(8)(a)-படி தகவல் ஆணையமானது இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதிகாரத்தின்படி பிரிவு 19(8)(v)-ல் கண்டவாறு பொது அதிகார அமைப்பானது தனது அலுவலர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பயிற்சியினை வழங்க கோரியும்,
மேலும் மேற்படி பிரிவுகளுடன்
பிரிவு 20(1)(2)-ன் படி தண்டமும் மற்றும் துறைவாரியான நடவடிக்கையும் கோருகின்றார். ஆனால் பிரிவுகள் 19(8)(b) 19(8)(a)(v)-ன்படி நடவடிக்கை எடுக்க கோரப்பட்டிருந்தும், மனுவை பிரிவு 19(3)-ன்படி சமர்பிக்காமல், மாறாக பிரிவு 18 மற்றும் 20-யுடன் இணைந்து ஒரே புகாராக சமர்பிக்கின்றார்.
.
மனுதாரரின் வாதம் என்னவெனில் மேற்படி இரு பிரிவுகளில் (பிரிவு 18(1) மற்றும் 19(3)-ன்படி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யும் போது கால விரையம் ஏற்படும் என்பதும், நடைமுறையின்படி, ஒருவருக்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் ஒரே புகாரில் கொண்டு வரவேண்டியது அவசியம் என்பதாகும்.
.
Chief Information Commr.& Anr vs State Of Manipur & Anotherஇ on 12 December, 2011 – Supreme Court of India – சொல்லப்பட்டவாறு, பிரிவுகள் 18 மற்றும் 19, வெவ்வேறு நோக்கம் கொண்டவைகள். இரண்டு வெவ்வேறு வகையான பரிகாரங்களை வழங்குகின்றது. (இந்த நீதிப்பேராணையை பற்றி எனது தனிப்பதிவை பார்க்கவும்)
.
தண்டனை வழங்கும் சட்டத்தின் பிரிவு 20(1) மற்றும் 20(2)-ஆகியவை பிரிவுகள் 18(1) மற்றும் 19(3) ஆகியவற்றிற்கு பொதுவானதாகும். பொது தகவல் அலுவலரானவர் மீது தண்டம் மற்றும் துறைவாரியான நடவடிக்கை கோரி பிரிவு 18(1)-ன் கீழும் புகார் அளிக்கலாம் அல்லது பொது தகவல் அலுவலர் மீது தண்டம் மற்றும் துறைவாரியான நடவடிக்கை கோரி பிரிவு 19(3)ன்படி இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். ஆனால், பிரிவுகள்19(8)(b) 19(8)(a)(v)-ன்படி பரிகாரம் கோரினால், கட்டாயம் பிரிவு 19(3)-ன்படிதான் இரண்டாம் மேல் முறையீடு செய்ய வேண்டும். ஆனால் மனுதாரர் பிரிவுகள்19(8)(b) 19(8)(a)(v)-ன்படி பரிகாரம் கோரி, பிரிவு 18(1) படி புகார் அளித்தது தவறு என்றும், மனுதாரருக்கு தகவல் வழங்கவும் மற்றும் பிரிவுகள்19(8)(b) 19(8)(a)(v)-ன்படி நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையம் ஆணையிட விரும்பினால், அவர் பிரிவு 19(3)-ன்படிதான் இரண்டாம் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று ஆணையிட்டு நீதிப்பேராணையை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
.
மேற்படி நீதிப்பேராணையின்படி, ஒருவர் பிரிவு 18(1)ன் படி புகாரை தனியாகவும், பிரிவு 19(3)-ன்படி தகவல் கோரி இரண்டாம் மேல் முறையீட்டை தனியாகவும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment