தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டு தகவல் பெற வேண்டும் என்றால் தயவு செய்து, மேல் முறையீடு செய்வதை தவிருங்கள். நீங்கள் 10 தகவல் கோரியதில் 5 தகவல்கள் கிடைக்க பெற்றால், மறுக்கப்பட்ட 5 தகவல்களுக்கு பொது தகவல் அலுவலராரனவர் தகவலை வழங்க மறுத்த காரணங்களுக்கு, எதிர்உரை வழங்கி பாக்கி உள்ள 5 தகவலை கோரி புதிய மனு தாக்கல் செய்யுங்கள். முதல் மேல் முறையீட்டில் 99 சதவீதம் பொது தகவல் அலுவலர் மறுத்த காரணங்களே திரும்ப சொல்லப்படுகின்றது என்பதால் முதல் முறையீடு எந்தவித பலனையும் கொடுக்க போவதில்லை. அதற்கு பிறகு ஆணையத்திடம் இரண்டாவது மேல் முறையீடு சென்றால், அந்த தகவலை பெற ஆறு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும். விசாரணையில், தகவலை வழங்க ஆணையர் ஆணையிட்டால், நீங்கள் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும் நிலை ஏற்படுகின்றது.
.
தகவல் விரைவாக பெறவேண்டும் என்றால் ஆய்வு செய்து தகவலை பெறுவதுதான் சரியான வழியாகும். ஆய்வு செய்வதற்கு தயவு செய்து பொது தகவல் அலுவலரிடம் கடிதம் மூலம் முன் அனுமதி கோராதீர்கள். சட்டத்தில் எங்காவது ஆய்வு செய்ய அனுமதி கோரவேண்டும் என்று கூறியுள்ளதா? சட்டத்தில் இல்லாத ஒன்றை பழக்கப்படுத்தாதீர்கள். ஆய்வு செய்ய செல்லும்போது, அனுமதி கோரும் கடிதத்தில் பலர் ஆவணங்களை குறிப்பிட்டு அதை ஆய்வு செய்ய அனுமதி கோருகின்றார்கள். இவ்வாறு ஆவணங்களை குறிப்பிட்ட பிறகு, அங்கு ஏதாகிலும் தவறு இருந்தால், அவை அனைத்தும் நீங்கள் ஆய்வு செய்ய செல்லும்போது சரிபண்ணப்பட்டிருக்கும். ஆகவே, ஆய்வு செய்ய முன் அனுமதி கோராமல், ஆய்வு செய்ய வேண்டும் என்று நேரில் சென்று மனு கொடுங்கள். பொது தகவல் அலுவலர் மறுத்தால், தகவல் வழங்க மறுக்கப்படுகின்றது என்று ஆணையத்திடம் பிரிவு 18(1)-ன் கீழ் புகார் செய்வேன் மேலும் பிரிவு 20(1) மற்றும் 20(2)-ன் கீழ் தண்டனை வழங்க கோருவேன் என்பதை அவரிடம் சொல்லிவிட்டு, ஆணையத்திடம் புகார் அளியுங்கள். நிச்சயமாக அவர் உங்களை ஆய்வு செய்ய அனுமதிப்பார்.
.
முதல் மேல் முறையீடு கூட செய்யாமல், தகவலை உங்களால் பெற முடிந்தால், நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் முற்றிலும் தேறிவிட்டீர்கள் என்று உங்களது தோளை நீங்களே தட்டி கொடுத்து கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment